தமிழில் கல்வி இணையத்தில் பிரசுரமாகும் கட்டுரைகள் உலகியல் விடையங்களை கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டவையாகும். இக்கட்டுரைகள் கல்வித்துறையினை சார்ந்தவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய வடிவமைப்பில் உருவாக்கப்படுவது முக்கியமாகும். எனவே நீங்கள் தமிழில் கல்வி இணையத்திற்கு கட்டுரை ஒன்றை எழுதுவதாக எண்ணியிருந்தால் அதை படைப்பதற்கு சில முறைகளை கடைப்பிடிக்கவேண்டும். ஒரு கட்டுரையினை எமது இணையத்திற்கு அனுப்புவதாயின் எவ்வாறு எழுதவேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
- கட்டுரையானது உங்கள் சொந்தப்படைப்பாக இருக்கவேண்டியது அவசியமாகும்.
- உங்கள் கட்டுரை இதுவரையில் வேறு இணையங்களில் பிரசுரமாகாத ஒன்றாக இருக்க வேண்டும். இணையம் தவிர்ந்த மாற்று ஊடகங்களில் பிரசுரமானதாக இருக்கலாம்.
- நீங்கள் கட்டுரை ஒன்றினை படைக்கின்றபோது அது கல்விக்கு எந்தவகையினிலேனும் பயன்படக்கூடியதா என்பதனை கவனத்தில் கொள்க.
- கட்டுரையின் ஆரம்பத்தில் 5 தொடக்கம் 15 வரிகளுக்குள் நீங்கள் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம் அமைந்திருக்கவேண்டும்.
- அதன் பின்னர் உங்கள் கட்டுரையின் நடுப்பகுதி, இங்கு நீங்கள் கட்டுரைக்கான பந்தியமைப்புக்களையும், எடுத்துக்காட்டுக்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் என்பனவற்றினையும் இணைக்கலாம்.
- இறுதியில் 5 தொடக்கம் 15 வரிகளில் உங்கள் கட்டுரைக்கான முடிவுரை ஒன்று இருத்தல் வேண்டும்.
- முக்கியமாக உங்கள் கட்டுரை 2 பக்கங்களுக்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்.
மேலதிகமாக நீங்கள் ஒரு கட்டுரையினை படைக்கின்றபோது பல புள்ளிவிபரங்கள், மேற்கோள்கள் என்பனவற்றை காட்டியிருக்கலாம். அவை தொடர்பான மூலங்களை முடியுமானவரை இறுதியில் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். இவை இணையத்தில் கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட மாட்டாது எனினும் உங்கள் கட்டுரை தொடர்பாக வாசகர்கள் சந்தேகம் ஒன்றினை ஏற்படுத்தின் அவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காக இவை பயன்படுத்தப்படும்.
முக்கியமாக உங்கள் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகின்ற புகைப்படங்கள் உங்கள் சொந்தப்படங்களாக இருக்க வேண்டும். இணையங்களிலோ அல்லது வேறு எந்த ஊடகங்களிலோ எடுக்கப்படும் புகைப்படங்களை தயவுசெய்து இணைக்க வேண்டாம். அவை பதிப்புரிமையயினை மீறும் செயற்பாடுகள். உங்கள் கட்டுரைகளில் ஒரு அட்டவணையோ அல்லது வரைபடமோ காட்டப்படும் போது அது எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த மூலம் கீழே இடப்படல் வேண்டும். உங்கள் சொந்த வரைபடங்களுக்கு இது தேவையில்லை.
மேலும் உங்கள் கட்டுரைகளை எப்படி எமக்கு அனுப்பலாம் என்பதனை அறிவதற்கு அதற்கான பக்கத்தினை நாடுங்கள்.

















