.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழில் வேற்றுமை உருபு

E-mail

தமிழில் பெயர் பொருளை வேற்றுமைப் படுத்துவன வேற்றுமை என அழைக்கப்படுகின்றது.பொதுவாக இவ்வேற்றுமைகளை தமிழில் எட்டு வகையானவை என குறிப்பிடுவர். முதலாவது முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுகின்றது. இங்கு பெயர் திரிபு ஏற்படுவதில்லை அதாவது "கண்ணன் வந்தான்" என்பதில் கண்ணன் என்ற பெயர்ச்சொல் மாற்றமடையவில்லை என்பதை காண்க. இரண்டாவது இரண்டாம் வேற்றமை இது  செயற்படுபொருள் வேற்றுமை எனவும் அழைக்கப்படும் அது பெயர்ச் சொல்லோடு "ஐ" உருபு...

சேர்ந்து வருவது. உதாரணமாக இரண்டாம் வேற்றுமையினை இங்கு நீங்கள் இனங்காண முடியும் "பெட்டியை செய்தான்" மரத்தை வெட்டினான். அடுத்து மூன்றாம் வேற்றுமை இது பெயருடன் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் போன்றவற்றில் ஏதாவது ஒன்று இணைந்து வரும். அதாவது "தடியோடு வந்தான்" "கண்ணனால் செய்யப்பட்டது" போனற் வசனங்களில் உள்ள பெயர்ச்சொற்களை கவனிக்குக. நான்காவதாக வருவது நான்காம் வேற்றுமை இங்கு பெர்ச்சொல்லோடு "கு" உருபு சேர்ந்து வரும். அதவாது "மரத்திற்கு அண்மையில்" என்ற வாக்கியத்தில் மரம் என்ற பெயர்ச்சொல்லின் ஈற்றில் "கு" உருபு இணைவதைக் காண்க.

தொடர்ந்து இன், இல், இருந்து, நின்று என்பனவற்றில் ஏதாவது ஒன்று பெயர்ச்சொல்லோடு இணைந்து வருமானால் அது ஐந்தாம் வேற்றுமை என அழைக்கப்படும். உதாரணமாக "மண்ணில் உள்ள நீர்" என்பதில் மண் என்ற பெயர்ச் சொல்லினை நோக்குக. ஆறாம் வேற்றுமை என்பது அது, ஆது, அ, உடைய, போன்றவற்றில் ஏதாவது ஒன்று இணைந்து வருவது. இதற்கு "கண்ணனது கடை" என்ற வாக்கியத்தில் கண்ணன் என்ற பெயர்ச்சொல்லில் "அது" என்பது இணைந்திருப்பதை காண்க. இல், கண், இடம் என்பனவற்றில் ஏதாவது ஒன்று இணைந்து வருமானால் அதனை ஏழாம் வேற்றுமை என குறிப்பிடுவர். "கயவரிடம் கவனமாய் இரு" என்ற வாக்கியத்தில் கயவர் என்ற பெயர்ச் சொல்லினை கவனிக்குக.

எட்டாவது விளி வேற்றுமை எனப்படும் அல்லது இதனையும் எட்டாம் வேற்றுமை என்றும் அழைக்கலாம். விளிவேற்றுமை என்பது பெயர்ச்சொல்லானது சில மாற்றங்களுடன் இயல்பாக வருகின்ற தன்மையினை குறிக்கும். அதாவது "அண்ணா வருகின்றான்" என்பதில் அண்ணா என்ற சொல்லினை காண்க.

அவையே தமிழில் விளங்கும் எட்டுவகையான வேற்றுமைகள்.

அவை பொதுவான இலக்கண நூல்களின் சுருக்கமான விளக்கம். மேலும் விரிவான விளக்கத்திற்கு  தமிழ் இலக்கண நூல்களைப் பார்வையிடவும்.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 4484
  • இணைக்கப்பட்டது: Tuesday, August 25 2009 19:26 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 142
Last Updated on Thursday, February 02 2012 09:37  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1199
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2700
mod_vvisit_counterThis month7320
mod_vvisit_counterAll644798

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.