ஒவ்வொரு ஆண்டும்
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான தொரு தினம் அனுஷ்ட்டிக்கப் படுவதற்கான காரணம் சிறுவர்களுக் கெதிராக அரங்கேற்றப் படுகின்ற துஷ்பிரயோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் மீதான...
துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் ஒரு சர்வதேசததின் கவணத்தையீர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.
சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடு சிறுவர் எனப்படுவோர் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப்படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்களைப் பாதுகாப்பதறகாகப் பல சமவாயங்கள் மற்றும் பிரகடனங்கள் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989இல் ஐ
.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய சமவாயமானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண்டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18 வயதுக்குட்பட்ட அணைத்து மனிதப் பிறவிகளையும் சிறுவர்கள் என வரையறுத்துள்ளது.
சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாகத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் நவீன மனித சமுதாயமானது நாகரீகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கம் அதேவேலை சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது
பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றது.
- உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
- உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.
- பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
- உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
- புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.
குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றில் ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வந்துள்ளனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்றவற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்த நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினம் சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படத்தப்படலாம். மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் எனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரது கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Wednesday, 29 September 2010 17:22 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 244













