தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளவளத்துணையின் அவசியமும் முக்கியத்துவமும்

E-mail
Article Index
உளவளத்துணையின் அவசியமும் முக்கியத்துவமும்
பகுதி- 2
All Pages

உளவளத்துணையின் அவசியமும் முக்கியத்துவமும்(Necessity and important of counseling): மிகப்புராதன காலந்தொட்டே உளவளத்துணைச் செயற்பாடானது பல்வேறு சமூக அமைப்புக்களிலும் காணப்பட்டதை அறியக்கூடியதாகவுள்ளது. இது கால,சமூக மாற்றங்களுக்கேற்ப பல்வேறு பரிமானங்களையும் பெற்றுவந்ததை அவதானிக்கலாம்.  ஒரு பிரச்சினை அல்லது சிக்கலொன்று ஏற்படும்போது வீட்டில்...

ஏற்பட்டது. இது ஆரம்பத்தில் உளவியலின் ஒரு பிரிவாக இருந்து பின்னர் தனித்துறையாக மாற்றமடைந்து இன்று வாழ்க்கையின் அனைத்து அம்சங்களினதும் பிரயோகத்துறையாக மாறியுள்ளதை அவதானிக்கலாம். அத்தோடு இச்சேவையை வழங்குவோர் துறைசார் அறிவு, தகமைகளோடு நிபுணத்துவமிக்கவராகக் காணப்பட வேண்டியதும் அவசியமாகும்.

மேற்குறிப்பிடப்பட்டவாறு உளவளத்துணை சேவையானது தனியான துறையாக மாறி அதன் தேவை இன்று இன்றியமையாததாக மாறியதற்கான காரணங்களை பின்வருமாறு நோக்கலாம்.

 

1. சுமூக கலாசார மாற்றங்கள் (Socio, cultural changes)

சமூக சலாசார மாற்றங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக ஏற்பட்டு வருவதைக்காணலாம். எமது கற்பனைக்கப்பால் இடம்பெறும் இவ்வதிகரித்த மாற்றங்களுக்கேற்ப மக்களும் தமது பாரம்பரிய சமூக கலாசாரப் பண்புகளை விட்டு தூரமாகுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

எனவே இத்துரித சமூக கலாசார மாற்றங்களுக்கேற்ப தம்மை இயைபாக்கம் செய்து கொள்ள முடியாதவர்களுக்கு வழிகாட்டி நவீன மாற்றங்களுக்கேட்ப அவர்களை இயைபடையச் செய்து வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு உளவளத்துணை மிகவும் அவசியமாகும்.

2. குடும்ப கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் (changes in family structure)

நமது நாட்டைப் பொறுத்தமட்டில் கூட்டுக்குடும்ப (Extended family) அமைப்பானது மிகவும் பலம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. இவ்வொழுங்கில் தனிமனிதன் உடல், உள சமூக

உறவுகள் தூரமாதல், வயோதிபர்களை சரியான முறையில் பராமரிக்க முடியாமை, குடும்பங்களில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துக்கள் போன்ற பல்வேறு பாரிய பிரச்சினைகள், முரண்பாடுகள் இன்று குடும்பங்களில் தோன்றியுள்ளதைக் காணலாம்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளிலிருந்த குடும்பங்களை காப்பாற்றி உடல், உள,

தாய் தந்தையரின் இழப்பு காரணமாக பிள்ளைகளை அநாதை இல்லங்களில் சேர்த்தல், இடம்பெயர்வு போன்ற இன்னும் பல காரணங்களினால் இன்று பிள்ளை பெற்றோர் தொடர்பாடல் மற்றும் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட தற்கால சூழ்நிலைகளால் அதிகமான குழந்தைகள் உளநலம் குன்றியவர்களாக காணப்படுவதை அவதானிக்கலாம் எனவே இவ்வாறனவர்களின் உளநலத்தை மேம்படுத்துவதற்கு உளவளத்துணை மிகவும் அவசியமாகும்.

4. குடும்பத்தில் காணப்படும் உளவியல் ரீதியான இடைவெளி: (Psychological space in family)

எனவேதான் இவ்வுளவியல் ரீதியான இடைவெளிகளை நீக்கி ஓர் சிறந்த குடும்ப அமைப்பை உருவாக்குவதற்கு உளவளத்துணை இன்றியமையாததாகும்.

5. சிறுவர் துஷ்பிரயோகம் (Child Abuse)

சிறுவர் துஷ்பிரயோகங்கள் எமது நாட்டிலும் அதிகரித்துச் செல்வதை நாம் அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக கரையோரப்பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தல், சிறுவர்கள்

அவர்களை இப்பிரச்சினைகளிலிருறந்த பாதுகாத்து வளப்படுத்துவதற்கு உளவளத்துணை மிகவும் முக்கியமாகும்;.

6. அனர்த்தங்கள்  (Disasters)

சுனாமி, வெள்ளப்பெருக்கு, பூகம்பம், வரட்சி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களும் உள்நாட்டு யுத்தம், குண்டுவெடிப்புக்கள், இனமோதல்கள் போன்ற மனிதனால் ஏற்படுத்தப்படுகின்ற அனர்த்தங்களும் இன்று மனிதர்களது உடல், உள நலத்திற்கு பாரிய சவாலாக அமைந்துள்ளன. குறிப்பாக சிறுவர்கள் வயோதிபர்கள்,

முகாம்களில் வாழ்ந்துவரும் வடமாகாண முஸ்லிம்கள் முகங்கொடுத்துள்ள பல்வேறு உளச் சமூக பிரச்சினைகளை இங்கு குறிப்பிடலாம்.

எனவேதான் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாத்து அவர்களது உளநலத்தை மேம்படுத்துவதற்க உளவளத்துணை சேவையானது மிகவும் இன்றியமையாததாகும்.

7. தொழிநுட்ப வளர்ச்சியும் இயந்திரமயமாதலும்

தொழிநுட்ப வளர்ச்சியானது என்றுமில்லாதவாறு அதன் உச்ச நிலையை இன்று அடைந்துள்ளது. இதன் காரணமாக மனித வலுக்கான தேவை மிகவம் குறைந்து சகல

வாழ்வதைக்காணலாம். இவற்றால் மனித உறவுகளில் பாரிய சிக்கல்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

எனவே இவ்வாறான தொடர்பாடல், உறவாடல் சிக்கல் பிரச்சினைகளை இல்லாமல் செய்து மனித வாழ்க்கையை வளமிக்கதாக மாற்றுவதற்கு உளவளத்துணை சேவையானது இன்றியமையாததாகும்.



Last Updated on Thursday, 02 June 2011 13:04  
கட்டுரையினை எழுதியவர்: NBA NIKSHAN

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.