ஒருவரின் மனநலத்தை ஊக்குவிப்பதென்பது அந்நபர் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பற்றிய விளக்கமாகும். பொதுவாக மகிழ்ச்சி எனும் போது எவ்வித கவலையும் இல்லாது சந்தோஷமாக இருப்பதனைக் குறிப்பிட்டாலும் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்ட போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமாகும். அனைத்து செயல்களையும் மகிழ்ச்சிகரமாக செய்வதன் மூலம் அச் செயல்களை திருத்திகரமாக செய்து கொள்ள முடிவதோடு அச்செயல்கள் தனக்கு இலகுவாகவும் ஏனையோருக்கு...
பிரியோசனமுள்ளதாகவும் இருக்கும். மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பவற்றை கண்டரிந்து அவற்றை நீக்கிக் கொள்ளல்.
பொருத்தமற்ற தன்மை மகிழ்ச்சிக்குத் தடையாகும்.
மேலும் பொறுமையாக இருக்கும் நபர் கஷ்டங்களை வென்று கொள்வார். உடனடியாக குழப்பமடைவதால் செய்ய வேண்டிய அல்லது செய்யக் கூடாத செயல் பற்றிய புரிந்துணர்வு குறையும்.
தனது வீட்டில் உள்ள அங்கத்தவர்களுடன் செயலாற்றும் பொழுது பொறுமையை வளர்த்துக் கொள்ளலாம். அதாவது கோபப்படுவதற்கு காரணமாக அல்லது குழப்மடைவதற்கு காரணமான சூழ்நிலை ஏற்பட்டதும் அச்சூழ்நிலையைப் பாhர்த்து தான் பதற்றமடையும் தன்மையின் விதத்தைப் பார்த்து அதிலிருந்து விலகிக் கொள்ள முயற்சி செய்ய முடியும். ஆரம்பத்தில் அதற்கொரு அவதானிப்பு, சக்தி தேவைப்படினும் பிற்காலத்தில் அப்பொறுமை தானாகவே ஏற்படும். அப்போது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
போலியாக அல்லது தேவையற்ற முறையில் கோபமடைவதாலும் ஒருவருடைய மகிழ்ச்சி மட்டுப்படுத்தப்படும். ஆரம்பத்தில் பிறரை ஏமாற்றுவதற்காகக் கோபமடைவதைப் போல காட்டிக் கொள்வது பிற்காலத்தில் அவ்வாறே கோபப்படுவது தனக்கு உண்மையானதாக மாறி இதனால் தனது வாழ்வு எல்லைப் படுத்தப்படும். அளவுக்கதிகமான உலோபித்தனம் மற்றும் பேராசையை ஏற்படுத்திக் கொள்வது உள்ளதை வைத்து மகிழ்ச்சியடைவதற்குப் பழகுதல் கற்பதனால் நிரந்தர மகிழ்ச்சியுடன் இருக்கலாம். ஏராளமானோர் தன்னிடத்தில் உள்ளதை வைத்து சந்தோஷமாக அனுபவிப்பதற்குப் பதிலாக தனக்கு இல்லாததை நினைத்து கவலைப்படுகின்றனர் இவ்வாறு கவலைப்படுவதாலும் தனது வாழ்வு மட்டுப்படுத்தப்படும். இவ்விநாடியில் தான் மகிழ்ச்சிகரமாக கழிப்பதற்கு உள்ளதை உபயோகிப்பது ஒருவர் ஏற்டுத்திக் கொள்ள வேண்டிய நற்பழக்கமாகும்.
சிலர் உலகிக்கு குற்றம் சாட்டிக் கொண்டு உலகிற்குக் குறை கூறிக் கொண்டு வாழ்வர். ஆயினும் உலகை மாற்றக் கூடிய சிறிய செயற்பாட்டையேனும் செய்தால் தனக்கு மகிழ்ச்சியைப் பெற முடியும். இருளுக்கு சாபமிட்டுக் கொண்டு இருப்பதைவிட ஒரு விளக்கையாவது எரிய வைப்பதனால் தன்னால் உரியவற்றை தெளிவாகப்
பார்த்துக் கொள்ள முடியும்.
பொழுது போக்கு பற்றிய விளக்கத்தை மற்றும் ஏதாவதொரு பொழுது போக்கைத் தேர்ந்தெடுத்து அதனை மென்மேலும் வளர்த்து ஒருவரின் வாழ்வில் சாதாரனமானவற்றைக் கொண்டு மகிழ்ச்சியடைவதற்குக் கற்றுக் கொள்ளலாம். அதாவது, சூரியன் மறைவதைப் பார்த்தல், சந்திரன் காட்சியளிப்பதைப் பார்த்தல், பறவைகளையும் அவைகளின் சத்தத்தை ரசித்தல், அல்லாஹ்வின் அருட்கொடைகளான வனப்பையும் அழகிய அருவிகளையும் பசுமையான மலைச்சாரல்களையும் இரசித்தல். இன்னும் இவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபட்ட எல்லையற்ற மகிழ்ச்சியடையக் கூடிய வழிகள் ஏராளம் இருப்பது முக்கியமானதாகும். இதன் மூலம் விளக்கப்படுவது உலகில் காணப்படும் அனைத்தினது மீதும் அக்கறை காட்டுவது அல்ல தனது நாள் பூர்த்தியாகும் வரை அக்கறை உள்ளவை இருப்பது போதுமானதாகும்.
மேலே குறிப்பிட்டவாறான மகிழ்வைத்தரக்கூடிய செயற்பாடுகளில் இரசனை குறையும் போது அல்லது அவற்றில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவிடத்து ஏனைய சந்தர்ப்பங்களினூடாகவும் செயற்பாடுகளினூடாகவும் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். உதாரணமாக, திரைப்படங்களைப் பார்ப்பதனூடாகவோ அல்லது எதிர்பாலாருடன் கதைப்பதினூடாகவோ மகிழ்ச்சி அடைவாரானால் அந்நபருடைய மகிழ்ச்சி திரைப்படங்களை பார்த்து ரசிப்பதினூடாக அல்லது எதிர்பாலாருடன் கதைப்பதினூடாக ஏற்பட்ட தற்காலிகமான மகிழ்ச்சியே தவிர உண்மையான மகிழ்ச்சியல்ல. ஏதோ ஒரு முறையில் மகிழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனை உணர முடிகிறது.
வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டமாக நோக்காமல் விரிந்த எண்ணத்துடன் நோக்க வேண்டும். மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும்.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 2112
- இணைக்கப்பட்டது: Saturday, 13 March 2010 09:49 இணைத்தவர் Rathees
- கட்டுரை இல: 227


















