.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டொன்கா சமுத்திர கீழ் எரிமலை வெடிப்ப..

E-mail

டொன்கா சமுத்திர கீழ் எரிமலை வெடிப்பு, தென்பசுவிக் சமுத்திரத்தில் உள்ள டொன்காவில் எற்பட்டுள்ள சமுத்திர கீழ் எரிமலை கக்குகை ஒன்று அன்மையில் குமுற ஆரம்பித்ததை தொடர்ந்து அங்கு பசுவிக் அவுஸ்ரேலியன் தகடுகளுக்கு இடையேயான ஒருங்கலினால் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் தற்போது புதிய ஒரு தீவு ஒன்று நூறு சதுர மீட்டர்கள் பரப்பளவில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் எரிமலை...

கக்குகை நாட்டின் தலைநகரான டொன்காதாபுவுக்கு வட மேற்கில் 39 மைல்கள் தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ளது. இங்கு 36 வரையான சமுத்திர கீழ்
எரிமலைகள் தொழிற்படுவது குறிப்பிடத்தக்கது. NUKU'ALOFA, (Tonga – Scientists) இது பற்றி கூறுகையில் “சென்ற 19 ம் தேதி இவ் எரிமலை மிகுந்த வேகமாக செயற்படத் தொடங்கியது, புகை, நீராவி, கற்துகழ்கள் என்பன 1000 அடிக்கு அப்பாலும் தென்பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக உள்ள வளிமண்டலத்தில் வீசப்பட்டுக்கொண்டிருந்தது” என்றார் சென்ற 20 ம் தேதி இப்பகுதியில் 7.7 ரிச்சர் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

 


ஆனால் இந்த எரிமலை செயற்பாடினால் அப்பிரதேசவாசிகளுக்கு பாதிப்புக்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டாலும் அச்சமுத்திர சுற்றாடலில் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்குமா என்பது தொடர்பாக தெளிவாக அறியப்படவில்லை. டொன்காவின் புவிச்சரிதவியலாளர் கெலட்டி மாவி இது பற்றி தெரிவிக்கையில் “இது எமது பிரதேசத்திற்கு புதிய ஒரு விடையமல்ல, நாங்கள் இது போன்ற ஒன்றை எப்பொழுதும் எதிர்பார்த்து; காத்தக்கொண்டிருக்கின்றோம்” என்கிறார். எரிமலைகள் அதிகமாக காணப்படும் “நெருப்பு வளையம்” எனப்படும் புவி ஓட்டின் மென்படைகளினால் ஆன பசுவிக் சமுத்திர மத்தியில் உள்ள தீவக் கூட்டங்களில் தென்பகுதியில் அமைந்துள்ளது டொங்கன்.


இது 170 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டமாகும்.
அவற்றில் 48 மனித வாழ்க்கைக்கு உகந்தவை அல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மூன்றில் இரன்டு பெரும்பான்மையுடைய பூர்வக்குடிகள் நாட்டின் பிரதான தீவுகளில் வாழ்கின்றன. இவர்களை தவிர சீனர்கள் மற்றும் அவுஸ்ரேலியா நியூசிலான்ட் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் எனவும் பல் இன மக்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு காணப்படும் சமுத்திர கீழ் எரிமலை ஒன்றே சென்ற 18 மாhச் அன்று செயற்பட ஆரம்பித்துள்ளது. வியாபாரக்காற்றுக்களின் செல்வாக்கு இத்தீவில் தற்போது அதிகமாக காணப்படுவதால் அது எரிமலை புகை மற்றும் நீராவியினை வேறுபகுதிகளுக்கு நகர்த்துவதாக கூறப்படகின்றது. இதனால் இப்பிரதேச வளிமாசடைவு தன்மைகள் பாரிய அளவில் ஏற்படவில்லை. வெளிக்கிழம்பும் பாறைத்துகழ்கள் பிஜி தீவகளின் (Fiji islands) தென்பகுதியில் உள்ள கடற்கரையோரங்களுக்கு குறுகிய நேரங்களில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


கட்டுரையை எழுதியவர் : Ratheeskumar.B (University Of Peradeniya,Student Geo)

 

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 1774
  • இணைக்கப்பட்டது: Saturday, 21 March 2009 18:45 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 76
Last Updated on Tuesday, 08 June 2010 20:22  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நாம் இருக்கும் உயரத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நம் சிந்தனைகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

- ஸிக்ஸாக்ரன்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1642
mod_vvisit_counterYesterday1911
mod_vvisit_counterThis week6696
mod_vvisit_counterThis month11316
mod_vvisit_counterAll648794

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.