.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடி அடர்த்தி, கிராம நகர குடுத்தொகை

E-mail

இலங்கையில் குடி அடர்த்தி, கிராம நகர குடுத்தொகை, பொதுவாக நாட்டின் குடித்தொகை சமமான அளவில் பரம்பி இருக்கவில்லை என்பது வெளிப்படையான ஒருவிடையமாகும். ஏனெனில் 2001 ம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தின் குடி அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 3330 என கணிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில் 2001ம் ஆண்டு கணிப்பீடுகளின் படி கொழும்பு, கம்பகா, களுத்துறை, கண்டி, மாத்தறை, நுவரெலியா, காலி போன்ற சில மவட்டங்களில் உயர் குடி அடர்த்திகள் காணப்பட்டன. அதே வேளை...

அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள சில மாவட்டங்களான மெனராகலை(72), முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்றவற்றில் குடி அடர்த்தி மிக குறைவாகவே இருந்து வந்துள்ளது. 1946 ம் ஆண்டு இலங்கையின் 50 வீத குடித்தொகை 14 சதவீத நிலப்பரப்பை கொண்ட ஏழு மாவட்டங்களில் பரம்பியிருந்தது.

எவ்வாறெனினும் இலங்கையின் சராசரி குடி அடர்த்தி என்பது, அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப நிலப்பரப்பு அதிகரிக்காமையினால் ஆண்டு தோறும் அதிகரித்து வந்துள்ளது. நாட்டின் மொத்த நிலப்பரப்புக்கும் மொத்த சனத்தொகைக்கும் இடையிலான காணிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கான மக்களின் எண்ணிக்கை 1946 இல் 103 பேராக இருந்த நிலையானது 1981 இல் 232 ஆக அதிகரித்ததுடன் இன்று (2008) 322 ஆக அதிகரித்திருக்கின்றது. எனினும் இது இந்தியா, வங்களாதே~;, மாலதீவு போன்ற இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் குடி அடர்த்தி முறையே 340, 940, 997 என்பனவற்றுடன் ஒப்பிடுகையில் ஓரளவு திருப்திகரமானதே.


சென்ற காலங்களில் இலங்கை அரசானது நாட்டின் தென், தென் மேற்கு பகுதிகளில் குவிந்திருந்த குடித்தொகையினை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு நகர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் அது குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரித்துச் செல்லும் குடி அடர்த்தியினை
கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்துள்ளது. நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வறள்வலய குடியேற்றத்திட்டங்கள், கிராமிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள், கைத்தொழிற்சாலைகளின் பிரதான நகரங்களுக்கு வெளியேயான பரம்பல்கள் மற்றும் விவசாய அபிவிருத்தியில் காட்டப்பட்ட ஊக்குவிப்புக்கள் என்பன மூலம் நகரங்களில் மக்களின் செறிவினை குறைத்ததுடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவர்களின் பரம்பலை அரசு ஏற்படுத்தியிருக்கின்றது.


இலங்கையின் குடித்தொகை – கிராம நகர குடுத்தொகை.


பொதுவாக நகரப் பகுதிகள் சார்ந்து வளர்ச்சியடையும் உட்கட்டமைப்பு வசதிகள் உலகளாவிய ரீதியில் மக்களை நகரங்களை நோக்கு ஈர்ப்பனவாகவே இருந்து வந்திருக்கின்றன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கானது அல்ல நாட்டின் நகரங்கள் நோக்கிய மக்களின் இடப்பபெயர்வினை காலத்திற்கு காலம் பல காரணிகள் தூண்டின என்பதன் காரணமாக மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். 2001 ம் ஆண்டு கணிப்பீடுகளின் படி இலங்கையின் மக்கள் தொகையில் 15.9 வீதம் நகர மக்கள் 84.1 வீதம் கிராமிய மக்களாகவே இருந்துள்ளனர்.


அதிகமான நகரமக்களை கொண்ட மாவட்டமாக கொழும்பு விளங்கியதுடன் அது மொத்த சனத்தொகையின் 2,251,274 பேரை கொண்டு விளங்கியது. அதிகரித்த வேலை வாய்ப்புக்கள், உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புக்கள், உயர் கல்விக்கான வாய்ப்புக்கள், போக்குவரத்துத் துறையின் உயர் வளர்ச்சி, மற்றும் சிறந்த சந்தைவாய்ப்புக்கள் என்பன மக்களை நகரங்கள் நோக்கு ஈர்த்திருக்கின்றன. உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நகரம் நோக்கிய மக்களின் இடப்பெயர்வு என்பது அவ்வளவு வேகமாக நடைபெற்றிருக்கவில்லை. இதற்கான முதலாவது காரணமாக ஏனைய நாடுகள் போன்று இலங்கை பெரியளவான ஒரு நாடாக இல்லாது இருந்ததனால் கிராம – நகரங்களுக்கு இடையே மக்களின் போக்குவரத்துக்கு குறிகிய கால அளவு போதுமானதாக இருந்தமையினை கூறலாம்.


அவற்றுடன் நாட்டின் கிராமங்கள் தோறும் விஸ்தரிக்கப்பட்ட வீதி அபிவிரத்தி, விவசாயம் தொடர்பில் அரசு மேற்கொண்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கம் என்பனவற்றினையும் சில காரணங்களாக எடுத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் மகா நெகும, கம நெகும, ஐன புபுதுவ, கமி புபுதுவ போன்ற பல கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 2335
  • இணைக்கப்பட்டது: Monday, 20 July 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 93
Last Updated on Sunday, 03 July 2011 11:18  
கட்டுரையினை எழுதியவர்: Rathees

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நாம் இருக்கும் உயரத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நம் சிந்தனைகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

- ஸிக்ஸாக்ரன்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1594
mod_vvisit_counterYesterday1911
mod_vvisit_counterThis week6648
mod_vvisit_counterThis month11268
mod_vvisit_counterAll648746

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.