இன்று 1.3 பில்லியனுக்கும் அதிகமான உலக மக்களினால்
பின்பற்றப்படும் மதம் இஸ்லாம். சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உலகின் ஏனைய முன்னணிமதங்களான கிறிஸ்தவம், யூதமதம் போல் இஸ்லாமும் மனிதனுக்கே முக்கியம் தருகின்றது. இறைவனின் படைப்பில் மனிதனே உயர்ந்தவன் அவனுக்கு கீளே ஏனைய விலங்குகள், தாவரங்கள் பௌதீக தோற்றப்பாடுகள் காட்டப்படுகின்றன. ஆனால் சுற்றாடலை பாதுகாப்பதற்கான..
இறைவனின்(Allah) கட்டளையினை வற்றுபுறுத்துகின்றது இஸ்லாம். சிறந்த எடுத்துக்காட்டு குரான்( Quran) - (Sura 40:57) “மனித சமூகத்தின் படைப்பிலும். இப்பிரபஞ்சத்தின் படைப்பு அதிக உண்மை கொண்டது” என்கிறது. தொடர்ந்து கிறிஸ்தவம் போன்றே இறைவன் இப்புவியினை படைத்தார் என்ற
கொள்கையினை கொண்டிருக்கின்றது. “வலிமை பொருந்திய மலைகளாலும், உயர்ந்த நீர் வீழ்ச்சிகளுடன் கூடிய நதிகளினாலும், அனைத்துவகை பழச் செடிகளினாலும் இப்புவியினை இறைவன் வடிவமைத்தார்” என்கிறது குரான்(13:3). பிற்பட்ட காலங்களில் வாழ்ந்த முஸ்லீம் சமூகம் சுற்றாடல், இயற்கை வளங்களின் அருமையினை உணர்ந்திருந்தார்கள், அவர்கள் அவற்றின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தியிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை இன்றைய நவீன இஸ்லாம் பிரதிபலிக்கின்றது என்கிறார் றிச்சட் பொல்ட்ஸ்(Richard Foltz).
குறிப்பாக பாலைவனங்களில் வாழ்ந்த அவர்கள் சுற்றாடலின் ஆதிக்கத்தினை புரிந்திருந்தார்கள். காற்று, நீர், நிலம் என்பனவற்றினை வீணாக்குவதை குரான் நிராகரிக்கின்றது. “மரங்களை நாட்டுவதற்கு விருப்புடையவர்களாய் இருங்கள், போரின்போது கூட தாவரங்கள் அழிக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள், உங்களை சூழ்ந்துள்ள உயிரினங்கள் மீதும் உங்கள் செல்லப்பிராணிகள் மீதும் அன்பு காட்டுங்கள், அத்தோடு ஏனைய முஸ்லீமும் இதனை செய்வதற்கு உற்சாகப்படுத்துங்கள்” எனும் முகமது நபியின் கூற்றுக்களை தனது “இஸ்லாமும் சூழலும்” என்ற நூலில் ஆதாராமாக எடுத்துக்காட்டுகிறார் றிச்சட் பொல்ட்ஸ்(Richard Foltz) .
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 1314
- இணைக்கப்பட்டது: Thursday, 25 February 2010 08:39 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 225


















