உலக பொருளாதாரத்தின் 40 வீதத்தினையும் உலகின் மொத்த வறியவர்களின் 80 வீத
தேவையினையும் நிவர்த்தி செய்கின்றது உயிரியல் சூழல். செறிவான உயிர்ப்பல்வகமை கொண்ட சூழல் ஒன்று ஒரு நாட்டின் மருத்துவ தேவைகள், பொருளாதார அபிவிருத்தி, மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு சிறந்த...
ஒரு வளமாக இன்று உலகினால் பார்க்கப்படுகின்றது. அதிகரித்துவரும் உயிர்ச் சூழல் 
அழிவானது ஒரு பிரதேசத்தில் வேறுபட்ட உயிரினங்களின் செறிவினை பாதுகாக்க வேண்டிய தேவையை இ;ன்று ஏற்பட்டுத்தியுள்ளது. உயிர்ப்பல்வகைமையானது சுற்றாடலுக்கு வலுவினை பெற்றுத்தருகின்றது. அது ஓரு சுற்றாடலின் போசனை மட்டத்தினை செறிவாக்கி ஏனைய வேறுபட்ட உயிரினங்களின் வழ்வினை தீர்மானிக்கின்றது. ஒரு நலமான உயிரினப்பல்வகைமை கொண்ட சூழலினால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற நன்மைகள் பல
:: சுற்றாடல் சார் நன்மைகள்
:: உயிரியல் சார்பான நன்மைகள்
:: சமூகம் சார் நன்மைகள்
என பல வகையானவற்றை உயிரினப்பல்வகைமை நமக்கு பெற்றுத்தருகின்றது. ஆனால் இன்று அழிந்துவரும் உயிரினப்பல்வகைமையினால் நாம் இவற்றின் மூலமாக பெறவிரக்கின்ற நன்மைகள் வெகுவாக குறைந்துசெல்லத் தொடங்கியுள்ளன. இதனால் இன்றைய உலக பொருளாதார அபிவிருத்தியிலும் நிலைத்திருக்கும் அபிவிருத்தி தொடர்பான எண்ணக்கருக்கள் மேலோங்கத்தொடங்கியுள்ளன.
உலகில் இன்று பயிர்ச்செய்கைக்கு பயனற்றதாக மாறிவரும் நிலங்களை மரபியல் உயிரினப்பல்வகைமை தடுத்து நிறுத்துவதாக இயற்கை சஞ்சிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை 
சுட்டிக்காட்டியிருந்தது. உலகில் இன்று நாள் ஒன்றிற்கு 40,000 உயிரினங்களை மனிதன் தன் தேவையின் பொருட்டு நுகர்ந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க உயிரியலாளர் Edward O. Wilson வருடம் ஒன்றிற்கு 27,000 க்கும் அதிகமான உயிரினங்களை எமது பூமி இழந்து வருவதாக கூறுகிறார். இற்றைக்கு 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்த பாரிய ஐந்து இயற்கை அழிவுகளின்போதும் 75 வீதமான உயிரினங்கள் பூமியில் இருந்து அழிந்து சென்றுள்ளன. ஆனால் இன்றைய உயரின அழிவு மனித நடத்தைகளினால் நடந்தேறிவருகின்றன.
காரணம் இன்று மனிதனுடைய நுகர்ச்சி அதிகரித்து செல்கிறது. உதாரணமான வளர்ச்சியடைந்துவரும் நாட்டில் உள்ள ஒரு மனிதனின் சுற்றாடலில் இருந்தான நுகர்ச்சியை காட்டிலும் 30 மடங்கினை சாதரண ஒரு அமெரிக்கர் நுகர்கின்றார்.
கட்டுரையை எழுதியவர் : Ratheeskumar.B (University Of Peradeniya,Student Geo)
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Monday, 16 March 2009 05:06 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 72













