துருவங்களின் இரவு வானில் சிவப்பு,
பச்சை நிற ஒளிக்கலவையின் மிருதுவான கதிர் வீச்சுக்களினால் வானில் சூழன்று செல்லும் ஒளி, ஒலி அலைகளின் கலவையாக துருவ ஒளி தோன்றுகின்றது. துருவ ஒளி புவியின் வட தென் துருவங்களின் அழகிய ஒளி வண்ணங்களாக வானில் தோன்றும் ஒளிக் கீற்றுக்களாகும். புவி மேற்பரப்பில் இருந்து 56 தொடக்கம் 970 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதயில் தோன்றும் இவை சூரியனின் அதிக வலுவூட்டப்பட்ட துகழ்கள் புவியின் வளிமண்டல, காந்தப்புல மூலகங்களுடன் ...
தாக்கமடையும் போது தோன்றுவதாக கூறப்படுகின்றது. எமது புவியினை பொறுத்தவரை நாம் கண்களால் பார்க்க முடியாத இரண்டு விடையங்கள் உண்டு ஒன்று வளிமண்டலம் மற்றையது காந்தப்புலம். இவை இரண்டும் தவிர சூரியக்காற்று என்பதும் இத்துருவ ஒளிகளின் தோற்றத்தில் முக்கியம் பெறுகின்றது. எமது சூரியனில் இருந்து வெளிக்கிழம்பும் வலுவூட்டப்பட்ட சிறு துகழ்கள் அதன் அண்டவெளிதோறும் செக்கனுக்கு 250 மைல் வேகத்தில் பயணஞ் செய்கின்றன இவை சூரியனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனை சூரியக் காற்று என்றும் அழைப்பர். அண்ட வெளியில் ஏறக்கறைய 4.5 நாட்கள் பயணத்தினை தொடர்ந்து இத்துகழ்கள் எமது புவிக்கோளத்தின் காந்தப்புலங்களுடன் மோதுகின்றன. அதன் வடிவத்தை தற்காலிகமாக மாற்றுகின்றன. புவியின் காந்தப்புலங்கள் மூலம் இத்துகழ்கள் புவி மேற்பரப்பினை வந்தடைவது தடுக்கப்படுவதுடன் அதனால் புவியில் ஒரு சாதகமான உயிர்ச் சூழலும் நிலை நிறுத்தப்படுகின்றது.
புவி சூரியனை நோக்கியுள்ள பகுதியில் இக்காந்தப்புலம் சூரியக்கதிரினால் அழுத்தப்பட்டு எதிர்த்திசையில் நீட்டப்படுகின்றது. புவியின் இரு துருவங்களிலும் இருந்து இவ்வாறு வெளிக்கிழம்பும் காந்த அலைகள் புவியினை சூழ ஒரு பாதுகாப்பு அரணை சூரிய கதிர்வீச்சுக்கு எதிராக உருவாக்கிக்கொள்கின்றன.
சூரியனின் வலுவூட்டப்பட்ட இக்கதிர்கள் புவியின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் காந்தப்புலங்களை நெருக்குகின்றன. இதனால் மின்புலம் ஒன்று இப்பகுதியில் உருவாவதுடன் அதனால் மின்காந்த அலைகள் உருவாக்கப்பட்டு அவை பின்னர் இலத்திரன்களாக வளிமண்டலத்திற்கள் நுழைகின்றன. இவ்வாறு வலுவூட்டப்பட்ட துகழ்களே வளிமண்டலத்தில் துருவ ஒளிகள் தோன்றுவதற்கு ஒக்சிசன் மற்றும் நைதரசனை தூண்டுகின்றன எனப்படுகின்றது.
















