| Article Index |
|---|
| பால்நிலைச் சமூகமயமாதல் (Gender socialization) |
| பக்கம் 2 ஐ பார்க்க |
| All Pages |
நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற
நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும்...
இத்தகு விடையங்கள் எப்படியுள்ளதோ அப்படியே எவ்வாறு பேணப்படுபகின்றது? என்பது வினாவாக எம்மிடம் உள்ளது. அதுபோல இவ்வாறான விடையங்களைப் பின்பற்றி புதிய உறுப்பினர்கள் உள்நுளைகின்றனர். சமூக உறுப்பினர்கள் இறக்கின்றனர் இத்தகைய இறப்பும், பிறப்பும் நடந்தாலும் கூட சமூகத்தில் பின்பற்றப்படும். விடையங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு எது காரணம் என்ற கேள்விக்கு விடை சமூகமயமாதல் எனலாம்.
இன்று சமூகத்தளத்தில் பால்நிலை தொடர்பான விடயங்கள் இலக்கியம் அரசியல், சமூகவியல் வரலாறு என அனைத்துத் துறைகளிலும் காரசாரமாகப் பேசப்பட்டு வருகின்றது. உலகில் அனைத்துச் சமூதாயங்களிலும் சமூகமயமாதல் அலகே பால்நிலை அம்சங்களைக் கற்றுக்கொடுக்கிறது. இது எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது. பால்நிலைச் சமூகமயமாதல் பற்றிவிளங்குவதற்கு முன் சமூகமயமாதல் பற்றிய அறிமுகத்துடன் உள்நுழையவேண்டியுள்ளது.
சமுகமயமாதலுக்கான அறிமுகம் (Introduction to socialization)
நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு
மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும் இத்தகு விடையங்கள் எப்படியுள்ளதோ அப்படியே எவ்வாறு பேணப்படுபகின்றது? என்பது வினாவாக எம்மிடம் உள்ளது. அதுபோல இவ்வாறான விடையங்களைப் பின்பற்றி புதிய உறுப்பினர்கள் உள்நுளைகின்றனர். சமூக உறுப்பினர்கள் இறக்கின்றனர் இத்தகைய இறப்பும், பிறப்பும் நடந்தாலும் கூட சமூகத்தில் பின்பற்றப்படும். விடையங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு எது காரணம் என்ற கேள்விக்கு விடை சமூகமயமாதல் எனலாம்.
சமூகமயமாதல் என்பது சமூகத்தின் விடையங்களை, பாரம்பரியங்களைச் சமூகத்தின் உறுப்பினர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் செயற்பாடும் உறுப்பினர் கற்றுக்கொள்ளும் செயற்பாடும் என வரையறுக்கலாம். எனவே சமுகத்தின் விடையங்கள் தொடர்ந்து கொண்டு செல்லப்படுவதற்கு காரணமாக அமைவது சமூகமயமாதல் செயற்பாடே. இத்தகைய சமூகமயமாதல் செயற்பாடு எனும் ஒரு இயக்கம் எவ்வாறு சமூகத்தில் இடம் பெறுகின்றது? சமூகமயமாதல் செயற்பாடு எப்படி சமூகத்தில் இடம்பெறுகின்றது? என்பதனை ஆராயும் போது சமூகவியலாளர்கள் சமூகமயமாதல் முகவர்களை (Socialization Agents) அறிமுகம் செய்கின்றனர். அதாவது சமூகத்தில் காலங்காலாமாகப் பின்பற்றப்படும் விடையங்கள் சமூகத்தில் ஒருகுறிப்pட்ட காலத்தில் குறிப்பிட்ட வயதுப்பிரிவினருக்கு குறிப்பிட்ட இடத்தில்வைத்து சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. சமூகத்தில் இயல்பாக அமைந்த முகவர்கள் என்று சொல்லப்படும் அமைப்பின் ஊடாகவே புதிய உறுப்பினர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இத்தகைய சமூகமயமாதல் முகவர்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- குடும்பம் (Family)
- விளையாட்டுக் குழு (Play Group)
- பாடசாலை (School)
- சம வயதுக் குழு (Peer Group)
- தொழில் இடம் (Working place)
- ஊடகங்கள் (Media)
இந்நிறுவனங்கள் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரைக்குமான காலப்பகுதி முழுவதும் வௌ;வேறு வயதுகளில் நிலைமைகளில் சூழ்நிலைகளில் செல்வாக்குச் செலுத்திவருகின்றது.
பால்நிலை சமூகமயமாதல் (Gender socialization)
சமூகமயமாதல் செயல்முறையானது ஒருவர் ஒரு சமூககத்தில் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. இதில் பிரதானமான ஒரு அம்சமாக பால்நிலை சமூகமயமாதல் என்பதும் ஒன்றாகும். நாம் வாழும் சமூகத்தில் காலங்காலமாக ஆண் பெண் வேறுபாடுகளும் வேலைப்பிரிப்பும் தொழிற்பாகுபாடுகளும் அவற்றுடன் இணைந்த எண்ணஙகளும் மனோபாவங்களும் காணப்படுகின்றது. இதனை யார் உருவாக்கினர்? என்ற கேள்விக்கு சமூகம் என்று குறிப்பிடலாம.; இத்தகைய பெண் இயல்புகள் அல்லது ஆண்மைப்பண்பு அல்லது பெண்மைப்பண்பு என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட வயதுப்பிரிவினருக்கு கற்றுக்கொடுத்தல் மூலமோ அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் வழங்குவாதாகவோ அமைவதில்லை.
இவ் ஆண்மை, பெண்மைப்பண்பை ஒரு குழந்தை பிறந்ததுமுதலே கற்க ஆரம்பித்து இறக்கும் வரைக்கும் கற்கிறது, அதற்கு சமூகமும் கற்றுக்கொடுக்கிறது. இச்செயற்பாடு சமூகமயமாக்கல் முகவர்களாலேயே வழங்க்கபட்டுவருகின்றது பால்நிலை சமூகமயமாதல் என்பது சமூகத்தில் ஆண் பெண்கள் இறக்கும் வரைக்கம் எத்தகைய நடத்தைகளை செயற்பாடுகளை மனோபாவங்களை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என அச்சமூகம் எதிர்பார்க்கின்றதோ அவற்றைக் கற்றுக்கொடுப்பதும் சமூக உறுப்பினர் கற்பதும் என வரையறுக்கலாம். இவ்வாறு எமது சமுதாயத்தில் காணப்படுகின்ற ஆண்மைப்பண்புகள், பெண்மைபண்புகள் சமூகமயமாதல் முகவர்களாலேயே கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
எவ்வாறு எமது சமூகத்தில் பால்நிலை சமுகமயமாதல் அதாவது ஆண்மை, பெண்மைப் பண்புகள் உருவாக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது. என்பதனை நோக்குவோம்.
குடும்பம் (Family )
குடும்பம் பால்நிலையில் ஆண் பெண் எவ்வாறு இருக்கவேண்டும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனும் சிந்தனைகளை வடிவமைக்கும் இடமாகவுள்ளது. அதிலும் இங்கு வழங்கப்படும் அடிப்பiயான சிந்தனைகள் மிகவும் பலமான தாக்கத்தை உறுப்பினர்களிடம் ஏற்படுத்துகிறது. எமது சமுதாயததில் பெரும்பாலும் பெண்களை சுமையாகவும் 2ஆம் நிலை உயிரியாகவும் கருதுகின்ற வழமைகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக ஒரு பெண் குழந்தையினை கருவில் சுமக்கும் போதே குறிப்பிட்ட தாயின் மனோநிலைமைகள் நடத்தைகள் கருவிலுள்ள குழந்தையிலும் தாக்கம் செலத்துவதாக ஆய்வாளர்கள்; குறிப்பிடுகின்றனர், ஏற்கனவே உள்ள சமூக பாரம்பரியத்தினுள் வாழும் தாய் தனது கருவில் உள்ள குழந்தையில் வேறுபாட்டைக் காட்டுகிறார். இதை விரும்பியோ விரும்பாமலோ சிந்திக்காமலோ இச்செயற்பாடு இடம்பெறுகின்றது.
எனவே சமூகத்தில் காணப்படும் பெண்ணை சுமையாக கருதும் மனோநிலையும் பெண்ணுக்காக நிறையவே செலவிடவேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. இதனால் தாய் தனதுகருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருக்கும் போது கவலையும் ஆணாக இருக்கும் போது சந்தோசமும் அடைகின்றாள். இது தவிர்க்க முடியாத நிலையாக உள்ளது. இந்த மனோநிலை குழந்தை பிறக்கும் வரைக்கும் நீடிக்கிறது. அதுபோலவே பெண்குழந்தை பிறந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகள் இவ்வாறு அமைகிறது. ஆண்குழந்தை பிறந்தால் கடினமான நிற ஆடையைத்தெரிவு செய்கின்றனர் இது கடினமான மனோநிலையையும், பலமான உயிரியல் நிலைமையினையும் உருவாக்குகின்றது.
அதே வேளை ஒரு பெண் குழந்தைக்கு மெல்லிய நிற ஆடை தொடக்கம் அனைத்தும் மெல்லிய நிறங்களிலையே அமைகிறது இது குழந்தையின் உளவியலை மென்மை உடையதாக ஆக்குகின்றது. பிள்ளை பிறந்தவுடன் ஆண் குழந்தையாயின் குடும்பத்தவர் தமது அதிசந்தோச மனோநிலையை; சொக்களைட் விலைகூடிய டொபி எனபனவற்றை வழங்கி வெளிப்பப்படுத்துகின்றனர். பெண் குழந்தையாயின் சக்கரை விலைகுறைந்த டொபி என்பன வழங்கப்படுகிறது. சந்தோசமான மனநிலையும் சொல்லும்போது ஆண்குழந்தையாயின் சந்தோஷ உள நடத்தையும் காணப்படுகிறது. அதுபோலவே குழந்தைக்கான விளையாட்டுப்பொருட்களை வழங்கும்போதும் பாரிய வேறுபாட்டைக் காட்டுகின்றோம்;. கார் போன்ற விளையாட்டு உபகரனங்களையும் தோட்டா போன்ற கடினமான மன நிலையினை உருவாக்கும் பொருட்களையும் வழங்குகின்றறோம். அதே நேரம் பெண் குழந்தைகளுக்கு பொம்மை, சிறிய சட்டிபானை போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கிக்கொடுக்கின்றோம்.
பெண்ணுக்குப் பளபளப்பான வண்ணமான ஆடையினையும் முடியினை அலங்கரிப்பதனையும் செய்கின்றோம். அதே போல் ஆண் குழந்தைக்கு அலங்கரிப்பது குறைவு. இது பெண் எப்போதும் அழகாக இருக்கவேண்டியவள் என்ற எண்ணக்கருவாக்கத்தை வளரச் செய்கிறது. வீட்டில் நாளாந்தம் பயன்படுத்;தும் சொற்களில் பெண்ணை அழகானவளாகவும் ஆணை புத்திசாலியாகவும் ஒப்பவிக்கும் சொற்களை பயன்படுத்துகின்றோம். இச்செயற்பாடுகள் ஆண் பெண் குழந்தைகள் எவ்வாறு இருக்கவேண்;டும் என்ற சூழ்நிலைமைகளைக் கற்றுக்கொடுக்கும் அதேவேளை பிள்ளைகளும் வளரும் பருவங்களில் பல அடிப்படையான விடையங்களைக் கற்றுக்கொள்கிறது.
உதாரணமாக எமது வீடுகளில் தாய் தந்தையின் வகிபங்குகள் செயற்பாடுகளை பிள்ளைகள் கற்றுக்கொள்கிறது தாய் நாளாந்தம் வீட்டுவேலைகளில் ஈடுபடுவது பிள்ளைபராமரிப்பது சமைப்பது தந்தை வெளியில்செல்வது தீர்மனம் எடுப்பது சத்தம் போட்டுப் பேசுவது தாய் தந்தை எத்தகைய செயற்பாடு பேச்சுக்களை பயன்படுத்துகின்றனரோ அவைகளைக் கற்றுக்கொள்கிறது.
பிள்ளைகள் வளர்ந்து வருகின்றபோது பெண் பிள்ளைகளை சிறியசிறிய வீட்டு வேலைகளுக்குப் பணிப்பதும், ஆண் பிள்ளைகளை வெளியில் வேலைகளுக்கு அமர்த்துவதும், அவர்களைத் தங்களது பாத்திரங்களை வடிவமைக்க காரணமாகிறது.
மேலும் பெண்பிள்ளைகள் பருவவயதை அடையும்போது வெளியே செல்லக்கூடாது, சமைத்துப் பழக வேண்டும், வீட்டைசுத்தப்படுத்த வேண்டும், ஆண் பிள்ளைகளை வீட்டில் இருக்ககூடாது உழைக்கவேண்டும், தைரியமாக நடக்கவேண்டும் என பலவிடயங்களைச் சொல், செயற்பாட்டு வடிவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டுகின்றனர் இவைகளினூடாக ஆண் பெண் பிள்ளைகள் தங்களது பாத்திரங்களைக் கற்றுக்கொள்கின்றனர்;.
திருமணமாகி வாழ்கைக்குள் பெண்கள் நுழையும்போது பொறுப்பாக இருக்கவேண்டும், சகித்துப்போக வேண்டும் பொறுமையாக இருக்கவேண்டும் என்ற குடும்பத்தவர்களின் ஆலோசனைகள்; பெண்களின் பாத்திரங்களை வடிவமைக்க உதவுகிறது. இவ்வாறு குடும்பமானது அடிப்படை முறைகளில் ஆண் பெண்களுக்கான பாத்திரங்களைக் கற்றுக்கொடுக்கிறது. உறுப்பினர்களும் கற்றுக்கௌ;கின்றனர்.
விளையாட்டுக் குழு (Play Group)
விளையாட்டுக் குழுவின் செயற்பாடு பால்நிலை வேறுபாட்டினை வளர்ப்பதில், நிலைநிறுவதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. சாதாரணமாக வீட்டில் 24 மணி நேரமும் இருக்கும் பிள்ளையானது 3 வயதில் வெளிச் சூழலில் உள்ளவர்களுடன் இணைந்து பழக ஆரம்பிக்கிறது. இதில் விளையாட்டுக்குழு பிரதானமானது. பிள்ளையிடம் இயல்பாக காணப்படும் விளையாடும் ஆற்றல் அச்சூழலில் உள்ள பிள்ளைகளுடன் விளையாடத் தூண்டுகிறது. எனவே பிள்ளைகள் விளையாடும்போது தங்களிடம் ஏற்கெனவே தனது வீட்டுச்சூழலில் கண்ட கற்றுக்கொடுக்கபட்ட விடையங்களை மாதிரியாக்கம் (modeling) செய்ய முனைகிறது. தாய்போல தந்தைபோல தனது சூழலில் கண்ட விடையங்களை போலச் செய்யும் போது அவ்விளையாட்டுக்குழுவில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கின்றது குறிப்பாக பெண் குழந்தைகள் விளையாடும் போது பெண்ணுக்குரிய பண்புகளையே காட்டவேண்டும் என ஆண் குழந்தைகள் எதிர்பார்ப்பதும், ஆண்குழந்தைகள் அவர்களது பண்புகளைக் காட்ட வேண்டுமென பெண் குழந்தைகள் எதிர்பார்ப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாடசாலை (School)
எமது பிரதேசப்பாடசாலைகள் பொதுவாக விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கும் அதேவேளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரம்பரிய விடையங்களையும் கற்றுக்கொடுக்கின்றது. ஆண் பிள்ளைகள் கல்வி ரீதியாகவும் ஏனைய செயற்பாட்டு ரீதியாகவும் தலைவர், சுதந்திரமானவர் வெளியில் செல்பவர் ஆளுமை மிக்கவர் உழைப்பவர் எனும் எண்ணக்கருவாக்கத்தின் கீழ் அசிரியர் பாடசாலையில் கற்றுக்கொடுக்கின்றனர். அதேபோல பெண் பிள்ளைகளை சிற்ந்த சமையல் புரிபவர், அழகியல், குடும்ப பராமரிப்பு, ஒழுக்கம், அடங்கி நடத்தல் போன்ற செயற்பாட்டின் வழியாகப் பெண்ணின் இயல்புகளை எண்ணக்கருவினுள் கொண்டுவரப்படுகின்றன. நீண்டகாலம் பாடசாலையில் கழிக்கும் பிள்ளைகளுக்கு நீண்ட பதிவாக இது வழங்கப்படுகிறது.
சமவயதுக் குழு (Peer Group)
ஆணின்தன்மை, பெண்ணின் தன்மையில் மற்றுமொருவகையான பாலியல் சார்ந்த எண்ணங்களையும் செயற்பாடுகளையும் அவர்களது ஆழுமையாக வடிவமைப்பதில் சமவயதுக்குழு செல்வாக்குச் செலுத்துகிறது. ஆண்பிள்ளைகள் தனது கட்டிளமைப்பருவக்காலத்தில் தமது சமவயதுக்குழுவினை தொடர்புறுகின்றனர். இக்காலப்பிரிவில் ஆண்களிடம் உருவாகும் கட்டடிளமைப்பருவ எண்ணஙகள், உடல் வெளிப்பர்டுகள் அவர்களுக்குள் உருவாகும் சந்தோசங்கள் சமவயதுக்குழுவினால் தீர்மானிக்ப்டுகிறது. அதே போல பாலியல்சார் கற்றல் குடும்பம், திருமண வாழ்வு போன்றனவைப் பற்றிய கற்றல்களும் இங்கு இடம்பெறுகின்றது. மேலும் தனது நண்பர்;களுக்காக விட்டு;க்கொடுத்தல், தியாகம் செய்யதல், அர்ப்பணித்தல் நண்பனுடன் விரும்பிய தொடார்பும், தொழில் பற்றிய அறிவு என்பனவும் பகிரப்படுகிறது. இவை எதிர்கால வாழ்வுக்கு அவசியமானதாக உள்ளது. மேலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதும் இச்சம வயதுக்குழுவினரின் செல்வாக்கினாலாகும். அத்துடன் இக்குழுவிலே காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஆறுதலும் ஊக்கப்படுத்தலும் இடம்பெறுகிறது. அதே போல பெண்குழந்தைகள் பாலியல் தொடாபான அறிவினை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இச்சூழலின் இன்மை குடும்பமானபோதும் பால்சார்ந்த அறிவு அவசியமில்லை என்ற கருத்தாக்கம் பெண்களிடம் வளர்கிறது.
தொழில் இடம் (Working place)
இது வேறுவகையான சமூகமயமாதல் செயற்பாட்டுக்கு வழியமைக்கிறது. ஆண் பெண் நிலைமைகள் அந்தஸ்துக்கள் குடும்ப ரீதியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட கற்றலால் வெளிச்சமூகம் என்ற ரீதியில் அவைகளின் தாற்பரியங்களையும் நேரடியாக நடைமுறைகளையும்; அறிந்துகொள்ள உதவுகின்றது. தொழிலிடம் இன்னுமொரு வகையில் பாலியல் பண்புகளை நிலைநிறுத்துவதில் செல்வாக்குச் செலுத்துகிறது. பெண்னைவிட ஆணே உழைப்பவர் பிரதானமானவர். கௌரவிக்ப்பட்டவேண்டியவர் என்ற நிலைமைகளையும் பெண்கள் 2ம் தரத்தவர்கள் என்ற நிலையினையும் இது உருவாக்குகின்றது. குடும்பரீதியாகவும் பொதுவானசமூக நிலைமைகளகவும் வெளித்தெரியும் பண்புகள் இங்கு பிரயோகிக்கப்படுகின்றது.
ஊடகங்கள் (Media)
இன்று பாலின அடிப்படையிலான ஆண்தன்மை, பெண்தன்மையினை மேலும் சமூகத்தில் ஊன்றச் செய்வதில் ஊடகங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக இந்தியாவில் காணப்படும் இறுக்கமான பாலியல்பு நிலமைகளை வெளிக்காட்டும் சினிமா விளம்பரம், சின்னத்திரை நாடகங்கள் என்பன எமது பிரதேசங்களில் இலகுவாகவும் மலிவாகவும் காட்சிப் படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு வீடுகளிலும் இன்று பல்வேறு அலைவரிசைகளில் நாடகங்களாக சினிமாவாக காட்டப்படும் பால்தன்மைகள் படித்த, பாமர மக்களையும் இலகுவாக சென்றடைகின்றது. ஏற்கனவே சமுதாயத்தால் காட்டப்பட்ட பண்புகள் இன்று மேலும் ஆழமாக மனதில் பதியும்படி காட்சியினூடாக வலம்வருகின்றது. பெண் என்;பவள் அடக்கமாக இருக்கவேண்டும் அதனை மீறும் போது பல விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும என்ற விம்பங்களை வழங்குகிறது.
பெண் எப்போதும் குடும்பத்திற்காகவே வாழ வேண்டும், சகித்துப் போகவேண்டும் போன்ற பல வகையான பெண் இயல்புகளை சமுதாயத்தில் மேலும் பதிப்பதாக இதன் கருத்துக்கள் அமைகின்றன. விளம்பரங்கள் அனைத்தும் பெண்கள் அழகானவர்கள், சமைப்பவர்கள், அலங்கரிப்பவர்கள் பிள்ளைபராமரிப்பவர்கள் என்ற மனோபாவங்களையும் காட்டுகிறது. பத்திரிகையில் பெண்களை அழகானவர்களாக வெளிப்படுத்தும் நகைச்சுவை கேலிகளுக்கு பெண்களை பயன்படுத்துவதும், உடல் அங்கங்களை பண்டப்பொருளாக காட்டுவதிலும் இன்றைய ஊடகங்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 560
- இணைக்கப்பட்டது: Sunday, February 28 2010 07:02 இணைத்தவர் Rathees
- கட்டுரை இல: 226


















