.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பால்நிலைச் சமூகமயமாதல் (Gender socialization)

E-mail
Article Index
பால்நிலைச் சமூகமயமாதல் (Gender socialization)
பக்கம் 2 ஐ பார்க்க
All Pages

நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும்...

இத்தகு விடையங்கள் எப்படியுள்ளதோ அப்படியே எவ்வாறு பேணப்படுபகின்றது? என்பது வினாவாக எம்மிடம் உள்ளது. அதுபோல இவ்வாறான விடையங்களைப் பின்பற்றி புதிய உறுப்பினர்கள் உள்நுளைகின்றனர். சமூக உறுப்பினர்கள் இறக்கின்றனர் இத்தகைய இறப்பும், பிறப்பும் நடந்தாலும் கூட சமூகத்தில் பின்பற்றப்படும். விடையங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு எது காரணம் என்ற கேள்விக்கு விடை சமூகமயமாதல் எனலாம்.

 

இன்று சமூகத்தளத்தில் பால்நிலை தொடர்பான விடயங்கள் இலக்கியம் அரசியல், சமூகவியல் வரலாறு என அனைத்துத் துறைகளிலும் காரசாரமாகப் பேசப்பட்டு வருகின்றது. உலகில் அனைத்துச் சமூதாயங்களிலும் சமூகமயமாதல் அலகே பால்நிலை அம்சங்களைக் கற்றுக்கொடுக்கிறது. இது எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது. பால்நிலைச் சமூகமயமாதல் பற்றிவிளங்குவதற்கு முன் சமூகமயமாதல் பற்றிய அறிமுகத்துடன் உள்நுழையவேண்டியுள்ளது.

சமுகமயமாதலுக்கான அறிமுகம் (Introduction to socialization)

நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும் இத்தகு விடையங்கள் எப்படியுள்ளதோ அப்படியே எவ்வாறு பேணப்படுபகின்றது? என்பது வினாவாக எம்மிடம் உள்ளது. அதுபோல இவ்வாறான விடையங்களைப் பின்பற்றி புதிய உறுப்பினர்கள் உள்நுளைகின்றனர். சமூக உறுப்பினர்கள் இறக்கின்றனர் இத்தகைய இறப்பும், பிறப்பும் நடந்தாலும் கூட சமூகத்தில் பின்பற்றப்படும். விடையங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு எது காரணம் என்ற கேள்விக்கு விடை சமூகமயமாதல் எனலாம்.

சமூகமயமாதல் என்பது சமூகத்தின் விடையங்களை, பாரம்பரியங்களைச் சமூகத்தின் உறுப்பினர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் செயற்பாடும் உறுப்பினர் கற்றுக்கொள்ளும் செயற்பாடும் என வரையறுக்கலாம். எனவே சமுகத்தின் விடையங்கள் தொடர்ந்து கொண்டு செல்லப்படுவதற்கு காரணமாக அமைவது சமூகமயமாதல் செயற்பாடே.  இத்தகைய சமூகமயமாதல் செயற்பாடு எனும் ஒரு இயக்கம் எவ்வாறு சமூகத்தில் இடம் பெறுகின்றது? சமூகமயமாதல் செயற்பாடு எப்படி சமூகத்தில் இடம்பெறுகின்றது? என்பதனை ஆராயும் போது சமூகவியலாளர்கள் சமூகமயமாதல் முகவர்களை (Socialization Agents) அறிமுகம் செய்கின்றனர். அதாவது சமூகத்தில் காலங்காலாமாகப் பின்பற்றப்படும் விடையங்கள் சமூகத்தில் ஒருகுறிப்pட்ட காலத்தில் குறிப்பிட்ட வயதுப்பிரிவினருக்கு குறிப்பிட்ட இடத்தில்வைத்து சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. சமூகத்தில் இயல்பாக அமைந்த முகவர்கள் என்று சொல்லப்படும் அமைப்பின் ஊடாகவே புதிய உறுப்பினர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இத்தகைய சமூகமயமாதல் முகவர்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • குடும்பம் (Family)
  • விளையாட்டுக் குழு (Play Group)
  • பாடசாலை (School)
  • சம வயதுக் குழு (Peer Group)
  • தொழில் இடம்     (Working place)
  • ஊடகங்கள்    (Media)

இந்நிறுவனங்கள் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரைக்குமான காலப்பகுதி முழுவதும் வௌ;வேறு வயதுகளில் நிலைமைகளில் சூழ்நிலைகளில் செல்வாக்குச் செலுத்திவருகின்றது.

பால்நிலை சமூகமயமாதல் (Gender socialization)


சமூகமயமாதல் செயல்முறையானது ஒருவர் ஒரு சமூககத்தில் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. இதில் பிரதானமான ஒரு அம்சமாக பால்நிலை சமூகமயமாதல் என்பதும் ஒன்றாகும். நாம் வாழும் சமூகத்தில் காலங்காலமாக ஆண் பெண் வேறுபாடுகளும் வேலைப்பிரிப்பும் தொழிற்பாகுபாடுகளும் அவற்றுடன் இணைந்த எண்ணஙகளும் மனோபாவங்களும் காணப்படுகின்றது. இதனை யார் உருவாக்கினர்? என்ற கேள்விக்கு சமூகம் என்று குறிப்பிடலாம.; இத்தகைய பெண் இயல்புகள் அல்லது ஆண்மைப்பண்பு அல்லது பெண்மைப்பண்பு என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட வயதுப்பிரிவினருக்கு கற்றுக்கொடுத்தல் மூலமோ அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் வழங்குவாதாகவோ அமைவதில்லை.


இவ் ஆண்மை, பெண்மைப்பண்பை ஒரு குழந்தை பிறந்ததுமுதலே கற்க ஆரம்பித்து இறக்கும் வரைக்கும் கற்கிறது, அதற்கு சமூகமும் கற்றுக்கொடுக்கிறது. இச்செயற்பாடு சமூகமயமாக்கல் முகவர்களாலேயே வழங்க்கபட்டுவருகின்றது பால்நிலை சமூகமயமாதல் என்பது சமூகத்தில் ஆண் பெண்கள் இறக்கும் வரைக்கம் எத்தகைய நடத்தைகளை செயற்பாடுகளை மனோபாவங்களை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என அச்சமூகம் எதிர்பார்க்கின்றதோ அவற்றைக் கற்றுக்கொடுப்பதும் சமூக உறுப்பினர் கற்பதும் என வரையறுக்கலாம். இவ்வாறு எமது சமுதாயத்தில் காணப்படுகின்ற ஆண்மைப்பண்புகள், பெண்மைபண்புகள் சமூகமயமாதல் முகவர்களாலேயே கற்றுக்கொடுக்கப்படுகின்றது.


எவ்வாறு எமது சமூகத்தில் பால்நிலை சமுகமயமாதல் அதாவது ஆண்மை, பெண்மைப் பண்புகள் உருவாக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது. என்பதனை நோக்குவோம்.


குடும்பம் (Family )


குடும்பம் பால்நிலையில் ஆண் பெண் எவ்வாறு இருக்கவேண்டும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனும் சிந்தனைகளை வடிவமைக்கும் இடமாகவுள்ளது. அதிலும் இங்கு வழங்கப்படும் அடிப்பiயான சிந்தனைகள் மிகவும் பலமான தாக்கத்தை உறுப்பினர்களிடம் ஏற்படுத்துகிறது. எமது சமுதாயததில் பெரும்பாலும் பெண்களை சுமையாகவும் 2ஆம் நிலை உயிரியாகவும் கருதுகின்ற வழமைகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக ஒரு பெண் குழந்தையினை கருவில் சுமக்கும் போதே குறிப்பிட்ட  தாயின் மனோநிலைமைகள் நடத்தைகள் கருவிலுள்ள குழந்தையிலும் தாக்கம் செலத்துவதாக ஆய்வாளர்கள்; குறிப்பிடுகின்றனர், ஏற்கனவே உள்ள சமூக பாரம்பரியத்தினுள் வாழும் தாய் தனது கருவில் உள்ள குழந்தையில் வேறுபாட்டைக் காட்டுகிறார். இதை விரும்பியோ விரும்பாமலோ சிந்திக்காமலோ இச்செயற்பாடு இடம்பெறுகின்றது.


எனவே சமூகத்தில் காணப்படும் பெண்ணை சுமையாக கருதும் மனோநிலையும் பெண்ணுக்காக நிறையவே செலவிடவேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. இதனால்  தாய் தனதுகருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருக்கும் போது கவலையும் ஆணாக இருக்கும் போது சந்தோசமும் அடைகின்றாள். இது தவிர்க்க முடியாத நிலையாக உள்ளது. இந்த மனோநிலை குழந்தை பிறக்கும் வரைக்கும் நீடிக்கிறது. அதுபோலவே பெண்குழந்தை பிறந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகள் இவ்வாறு அமைகிறது. ஆண்குழந்தை பிறந்தால் கடினமான  நிற ஆடையைத்தெரிவு செய்கின்றனர் இது கடினமான மனோநிலையையும், பலமான உயிரியல் நிலைமையினையும் உருவாக்குகின்றது.


அதே வேளை ஒரு பெண் குழந்தைக்கு மெல்லிய நிற ஆடை தொடக்கம் அனைத்தும் மெல்லிய நிறங்களிலையே அமைகிறது இது குழந்தையின் உளவியலை மென்மை உடையதாக ஆக்குகின்றது. பிள்ளை பிறந்தவுடன் ஆண் குழந்தையாயின் குடும்பத்தவர் தமது அதிசந்தோச மனோநிலையை; சொக்களைட் விலைகூடிய டொபி எனபனவற்றை வழங்கி வெளிப்பப்படுத்துகின்றனர். பெண் குழந்தையாயின் சக்கரை விலைகுறைந்த டொபி என்பன வழங்கப்படுகிறது. சந்தோசமான மனநிலையும் சொல்லும்போது ஆண்குழந்தையாயின்  சந்தோஷ உள நடத்தையும் காணப்படுகிறது.  அதுபோலவே குழந்தைக்கான விளையாட்டுப்பொருட்களை வழங்கும்போதும் பாரிய வேறுபாட்டைக் காட்டுகின்றோம்;. கார் போன்ற விளையாட்டு உபகரனங்களையும் தோட்டா போன்ற கடினமான மன நிலையினை உருவாக்கும் பொருட்களையும் வழங்குகின்றறோம். அதே நேரம் பெண் குழந்தைகளுக்கு பொம்மை, சிறிய சட்டிபானை போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கிக்கொடுக்கின்றோம்.

 



Last Updated on Sunday, 28 February 2010 07:37  
கட்டுரையினை எழுதியவர்: Suheera Safeek

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116109

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 5 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday185
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3339
mod_vvisit_counterThis month17990
mod_vvisit_counterAll150294

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.