.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Message
  • You must log in first

புவியோட்டு அசைவு நிலவுருவங்கள்

E-mail

புவியின் மேல்படையான புவியோடு என்றும் நிலையாக இருப்பதல்ல அது பல்வேறு கோணங்களில் பல்வேறுதன்மைகளுக்கு ஏற்ப அசைந்த வண்ணம் உள்ளதுஎன்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. சென்ற சில நு}ற்றாண்டுகளுக்கு உள்ளேயே கத்திநேவியாக் குடாநாடு மேல் தெரிய ஆரம்பித்தமையும்,கலிபோர்னியாக் குடாநாடு வருடந்தோறும் பசுபிக் நோக்கி நகர்கின்றமையும்...

2. புவியோட்டு அசைவுகளும் தோற்றிவிக்கப்படும் நிலவுருவங்களும்

இந்தியத் துணைக்கண்டம் இமையமலை நோக்கி அமிழ்கின்றமையினையும் கொண்டு புவிச்சரிதவியலாளர்கள் புவியோட்டு நகர்வினை நியாயப்படுத்தியுள்ளனர். இவ்வாறான புவியோட்டின் நகர்ச்சியானது செயற்படுத்தப்படும் திசை,வேகம்,தன்மை என்பனவற்றிற்கு இணங்க பல்வேறுபட்ட நிலவுருவங்களை தோற்றுவிக்கின்றன. அத்தன்மைகளையும் அதனுடன் கூடிய நிலவுருவங்களையும் தொடர்ந்து நோக்குவோம்.


2.1 கிடையான அசைவுகளும் நிலவுருவாக்கங்களும்


இத்தலைப்பின் உள்ளேயே புவியின் தொன்னு}று வீதமான
அகவிசையுடன் தொடர்புடைய நிலவுருவங்களை அடக்கிவிட முடியும். ஏனெனில் அனைத்து விசைகளுமே இதனுடன் தொடர்புபட்டே இயங்குகின்றன. “இவ்வகையான கிடை நிலையான அiசைவுகள் புவியோட்டின் சக்திகள் மேற்பரப்பிற்கு ஏறத்தாள கிடைநிலையாக செயலாற்றுவதால் உண்டாகின்றன” எனக் கொள்ளப்படுகின்றன. புவியோட்டின் கிடைநிலையான அசைவுகள் மூலம் ஆக்கப்படும் நிலவுருவங்களை அசைவின் மூன்று தன்மைகள் ஊடாக விளங்க முயல்வோம்.


2.1.1 விலகும் தகடுகளின் வேறுபட்ட நிலவுருவங்கள்


இப்பகுதியில் விலகும் தகடுகளுடன் தொடர்புடைய நிலவுருவங்களைக் காண்போம். புவியோடுகளின் வழியே கிடையாகத் தொழிற்படுகின்ற விசையானது ஒன்றிற்கு மற்றையது எதிர்த்திசையில் தொழிற்படும் போது இரண்டு
தகடுகளும் தமக்கிடையில் குறைகளை ஏற்படுத்திய வண்ணம் விலகுகின்றன. (படம்-1 ஐ பார்க்க) இதன் போது புவிமேற்பரப்பு நிலவுருவங்களின் கட்டமைப்பில் பல வகை மாற்றங்கள் இடம்பெறுவதடன் சில புதிய நிலவுருவங்களும் தோற்றம் பெறுகின்றன. அவ்வகையான சில நிலவுருவங்கள் பின்வருமாறு.


2.1.1.1 சமுத்திர மத்திய மலைத்தொடர்கள்


தகடுகளின் விலகல்கள் சாத்தியப்படக்கூடிய பகுதிகள் அதாவது புவியோட்டின் மெல்லிய படைகள் சமுத்திரங்களின் மத்தியில் அமைந்து காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளை உடைத்துக்கொண்டு வெளிக்கக்கும் எரிமலைக் குழம்பு தனது தன்மைகள்,மற்றும் வயதிற்கு
ஏற்ப புவிமேற்பரப்பில் சமுத்திரங்களின் மத்தியில் தொடர் மலைகளைக் கொண்ட வேறுபட்ட ஒரு நிலவுருவத்தினை ஆக்குகின்றது. (படம்-2 ஐ பார்க்க) அவ்வாறான மலைத்தொடர்கள் இன்றும் இந்துசமுத்திரத்தில் தலைகீழ் வை வடிவமானதாகவும்,அத்திலாந்திக் சமுத்திரத்தின் மத்தியில் எஸ் வடிவமானதாகவும் காணப்படுகின்றன.


{mospagebreak} 2.1.1.2 பிளவுப் பள்ளத்தாக்குகள்


சில சமயங்களின் தகடுகளின் விலகல் தரைமேற்பரப்பில் சாத்தியப்படுகின்ற தருணங்களில் இரண்டு தகடுகளும் எதிர்த்திசையில் விலகும் சந்தர்ப்பங்களில் ஒரு பாரிய துண்டு உடைக்கபப்பட்டு கீழ் இறக்கப்படுகின்றது. இவ்வாறான பள்ளங்கள் ஊடாக ஆறுக் இன்று பாய்கின்ற போது அவற்றினை பிளவுப்பள்ளத்தாக்குகள் என்று அழைக்pன்றோம். (படம்-3 ஐ பார்க்க) அவ்வகையான பிளவுப்பள்ளத்தாக்குகளை ஆபிரிக்காவில் இன்றும் அவதானிக்கலாம். யோர்டான் நதி அவ்வாறானதொரு பள்ளத்தாக்கின் வழியே பாய்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


2.1.1.3 தொடர் எரிமலைத்தீவுகள்


தகடுகளின் விலகலுடன் தொடர்புடைய நிலவுருவங்களின் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இன்;னோர் வகையே இவை. பெரும்பாலும் சமுத்pரங்களின் மத்தியில் விலகும் தகடுகளின் இடவுகள் (குறைகள்) ஊடாக வெளிக்கிளம்பும் எரிமலைக்குழம்பான யாவா தொடர்ந்து படிவதன் காரணமாக சில சமயங்களில் அவை சமுத்திரங்களின் வெளியே சிறிய தீவுகளாகத் தெரிய ஆரம்பிக்கின்றன இவை பலநு}ற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நீளமான சமுத்திர மலைத்தொடர்களின் வழியே பல தீவுக்கூட்டங்களாக அமைந்து கிடக்கின்றன. இவ்வாறான ஒரு தீவுக் கூட்டமே ஹவாய்த் தீவுகள் எனப்படுகின்றன.


2.1.1.4 குறைகளுடன் கூடிய நிலவுருவங்கள்


புவி மேற்பரப்பினைப் பொறுத்தவரை விலகும் தகடுகளின் செயற்பாடுகளினால் மாற்றமுறும் நிலக்கட்டமைப்பு மாற்றங்களில் குறைகளுடன் கூடிய நிலவுருவங்கள் இன்றியமையாதவை. சமுத்திரங்களின் மத்தியில் காணப்படுகின்ற தகடுவிலகலின் மையங்கள் பல்லாயிரக்கணக்கான குறைகளுடன் காணப்படுகின்றன. நில மேற்பரப்பில் உருவாகின்ற குறைகளை அவற்றின் திசை,வேகம்,காலம் கொண்டு பல வகையான நிலவுறுப்புக்களாக பிரித்து நோக்குகின்றனர் புவிச்சரிதவியலாளர்கள். அவ்வாறான சில குறையுடன் சார்ந்த நிலவுருவங்களைப் படம்-5 விளக்குகின்றது.


2.1.2 ஒருங்கும் தகடுகளினால் தோற்றிவிக்கப்படும் நிலவுருவங்கள்


புவியோடுகளின் வழியே கிளர் மின் விசையானது கிடையாகச்செயற்படுவதனால் உருவாகும் நிலவுருவங்கள் வரிசையில் புவியோட்டின் ஒருங்கலுடன் தொடர்புடைய நிலவுருவங்கள் தொடர்பாகத் தொடர்ந்து
நோக்குவோம். “புவியோட்டின் வழியே இரு விசைகள் ஒன்றுற்கு ஒன்று நேர் எதிராக அமுக்கிச் செயற்படுகின்ற போது புவியோடு ஒருங்கி மடிவுறுகின்றது” (படம்-7 ஐ பார்க்க ) இத்தன்மையானது புவி மேற்பரப்பினைப் பொறுத்தவரை பலவகையான மடிப்புமலைகள் குறைகள்,மற்றும் மேட்டுநிலங்கள் என்பனவற்றின் ஆக்கத்திற்குத் துணைபோகின்றன. மத்திய அமெரிக்காவின் அல்பைன் மலைத்தொடர்கள்,ஐரோப்பாவின் அல்ப்ஸ் மலைத்தொடர் என்பன இவ்வாறே மடிப்புற்று உருவாகியதாக நம்பப்படுகின்றது. அவ்வாறு உருவாகின்ற சில நில உருவங்கள் தொடர்பாக நோக்குவோம்.


{mospagebreak} 2.1.2.1 சமச்சீர்மடிப்பு மலைகள்


கிடையாக நேர் எதிராகத் தொழிற்படுகின்ற இருவிசைகளின் தன்மையானது வேகம், திசை காலம் என்பனவற்றில் ஒரே சீரான தன்மையுடன் தொழிற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறன மலைகள் தோற்றம் பெறுகின்றன. (படம்-12 ஐ பார்க்க) இவ்வாறான விசைகள் அவற்றின் செயற்றிறன் பாறைகளின் தன்மை
என்பனவற்றினைப்பொறுத்து சிறிய மேட்டு நிலங்களாகவோ அல்லது பாரிய மலைத்தொடர்களாகவோ உருவாகலாம். அமெரிக்காவின் மத்திய மானிலங்களில் அமைந்துள்ள அவ்வகையான மடிப்புக்களின் தன்மையினை படம்-8 காட்டுகின்றது.


2.1.2.2 தலைகீழ் மடிப்பு மலைகள்


புவியோடுகளின் வழியே கிடையாகத் தொழிற்படும் விசையானது இருபுறமும் வேறுபட்ட தன்மைகளுடன் செயற்படுகின்றபோது இவ்வாறான மலையாக்கங்கள் உருவாகின்றன.    அதாவது ஒரு பகுதியில் அமுக்கும் விசையின் வேகம் குறைவானதாகவும் மறுபகுதியில் தாக்குகின்ற விசையின் வேகம் கூடியதாகவும் இருக்கின்ற சமயங்களில் ஒரு பகுதி மற்றைய பகுதியின் மேல் து}க்கி மடிக்கப்படுவதால் இவ்வகையான மடிப்பு மலைகள் உருவாகின்றன. (படம்-9 ஐ பார்க்க) சில சமையங்களில் இவ்வாறான மடிப்புக்கள் இடம்பெறும்போது மடிப்பின்மையங்கள் உடைக்கப்பட்டு குறைகள் உருவாகின்றன. அவ்வாறு குறையுடன் கூடிய தலைக்கீழ் மடிப்பு மலைகள் இன்றும் அடேனிலும் பெல்ஜியத்திலும் காணப்படுகின்றன. புதிய பாறைப்படைகளின் இடையே நிலக்கரிக்காக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது மலையின் அடித்தளங்களில் புதையுண்டிருந்த மேற்பரப்புப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலான சமயங்களில் இவ்வாறான மடிப்புக்களின் கூரிய பகுதிகள் அரி;ப்புக்கருவிகளினால் அரிக்கப்பட எஞ்சிய நிலத்தோற்றங்களே இன்று நாம் காண்பவை.


2.1.2.3 விசிறிமடிப்பு நிலவுருவங்கள்


ஒருங்கும் புவியோட்டின் வழியே செயற்படுத்தும் கிடையான விசையானது கூடியிருக்கும் போது மடிப்பின் மையங்கள் மடித்து உயர்த்தப்படுவதும் ஓரங்கள் உள்நோக்கித் தள்ளப்படும் போதும் அங்கு விசிறிமடிப்பினதான மடிப்பு மலைகள் தோன்றுகின்றன. கால ஓட்டத்தில் உரிவுக்கருவிகளின் செயற்பாடு காரணமாக இம்மடிப்புக்களின் கூரிய பகுதிகள் அரிக்கப்பட உட்பகுதிகள் மட்டுமே இன்றும் எஞ்சியுள்ளன. (படம்-10 ஐ பார்க்க)


2.1.2.4 தொடர் மடிப்புக்கள்


அமுக்கத்தின் அளவானது குறைவாகச் செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் யூரா வகையான மடிப்புக்கள் என்று அளைக்கப்படுகின்ற தொடர் மடிப்புக்களைக் கொண்ட நிலவுருவங்கள் ஆக்கப்படுகின்றன. இவை மிகவும் எளிய முறையான பல மேல்,கீழ் அமைந்த மடிப்புக்களுடனும் சில வேளைகளில் தென்படுகின்றன. (படம்-11) இவ்வகையான மடிப்புக்களுடன் அமைந்த நிலவுருவங்களை யூரா மலைகளின் ஓரங்களில் அவதானிக்கமுடியும் என்கின்றனர் புவிச்சரிதவியலாளர்கள்.


2.1.2.5 உதைப்புக் குறைகள்


மிகைப்படும் ஒருங்கல் செயற்பாடானது அதிக து}ரம் வளைந்து கொடுக்க மடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களில் பாறைப்படையானது முறிவடைந்து ஒன்றன் மேல் மற்றையது சுருட்டித்தள்ளப்படுகின்றது இதனால் உதைப்புக்குறைகளுடன் கூடிய நிலவுருவங்களும் தோற்றம் பெறுகின்றன. (படம்-12 ஐ பார்க்க)


{mospagebreak} 2.1.3 அமிழும் தகடுகள் ஆக்கும் நிலவுருவங்கள்


புவியோட்டினை அவற்றின் அடர்த்தியினைக் குறித்து இரண்டாக வகைப்படுத்துகின்றனர் புவிச்சரிதவியலாளர்கள் அந்தவகையில் சீமா என அளைக்கப்படுகின்ற சமுத்திர ஓடானது, சியல் எனப்படுகின்ற கண்ட ஓட்டினைக் காட்டிலும் அடர்த்தி கூடியதாகும் ஆகவே தகடுகளின் அமிழும் செயற்பாட்டின்போது கண்ட ஓட்டின் கீ
அடர்த்தி கூடிய சமுத்திர ஓடான சீமா அமிழ்கின்றது. இச்செயற்பாடானது அமிழும் தகடுகள் என்ற தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளது. (படம்-13 ஐ பார்க்க) இன்றும் புவியோட்டின் பாரிய சமுத்திர ஓடுகள் கண்ட ஓட்டின் கீழ் அமிழ்ந்த வண்ணமே உள்ளன. உதாரணங்களாக யுரேசியன் தகட்டின் கீழ் பசுபிக் தகட்டின் அமிழும் தன்மை,மற்றும் தென் அமெரிக்கா தகட்டின் கீழ் பசுபிக் தகட்டின் அமிழும் தன்மை என்பனவற்றோடு யுரேசியத்தகட்டின் கீழ் அமிழும் இந்தியத்தகட்டையும் குறிப்பிடலாம். இவ்வாறான அமிழும் தகடுகள் எவ்வகையான நிலவுருவங்களை ஆக்கவல்லன என்பது தொடர்பாகவே இங்கு நோக்குவோம்.


2.1.3.1 கண்ட எரிமலையாக்கம்


தன்மையில் குறைந்த அடர்த்திகொண்ட கண்ட ஓட்டின் கீழ் அடர்த்திகூடிய சமுத்திர ஓடுகள் அமிழும் சந்தர்ப்பங்களில் அவை படம்-14 இல் காட்டியவாறு பல கண்ட எரிமலைகளின் தோற்றத்திற்கு காரணமாகின்றன. அமிழும் சமுத்திர ஓடுகள் கண்ட ஓடடின் கீழ் உள்ள இடையோட்டின் ஆங்காங்கே காணப்படுகின்ற மக்மாவினை அமுக்கி மேலௌச் செய்கின்றன. இதனால் இன்று கண்ட ஓடுகள் சமுத்திர ஓடுகள் சந்திக்கும் பெரும்பாலான எல்லைகளில் தொண்னு}று வீதத்திற்கும் அதிகமான எரிமலைகள் அமைந்து கிடக்கின்றன. எனவே புவியின் வேறுபட்ட நிலவுருவவியலில் இவ் எரிமலை சார் நிலவுருவங்கள் தோன்றுவதற்கு அகவிசையானது காரணமாகிவிடுகின்றது. இன்றும் அந்திஸ்,றொக்கி மலைத்தொடர்களிலும் யாவா,சுமாத்திராவிலும் இவ்வகையான எரிமலைகள் விரவி உள்ளன.


2.1.3.2 உயர் மேட்டுநிலவாக்கம்


அமிழும் தகடுகளினால் ஆக்கப்படும் பிறிதொரு வகை இதுவாகும். சமுத்திரத்தளங்களில் படிந்துள்ள அடையற்பாறைகள் சமுத்திர ஓட்டின் கண்ட ஓடு நோக்கிய
நகர்ச்சியோடு நகர்கின்றன ஆனால் சமுத்திர ஓடு அமிழ்கின்ற்ற போது அவை அமிழ்வது என்பது மிகவும் குறைவே. அவற்றின் பெரும்பாலானவை கண்ட சமுத்திர ஓடுகள் சந்திக்கின்ற கரையோரங்களை அண்டி உயர்த்தப்படுகின்றன. (படம்-15 ஐ பார்க்க) இவ்வாறான உயர்வுகள் சமுத்திரங்களின் கண்டமேடைகளை ஒட்டி பெரும் மேட்டு நிலங்களாக எமுப்பப் படுகின்றன.


இந்து சமுத்திரத்தின் பெரும் பகுதியினை உள்ளடக்கிய இந்தியத்தகடானது இற்றைக்கு நாற்பத்தைந்து மில்லியன் வருடங்களின் முன்பிருந்து ஆசியத்தகடான யுராசிக் தகட்டின் கீழ் அமிழ்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதனாலையே இன்றும் இமையத்தின் உச்சிகளிலும் கடலுயிர்களின் படிதல்கள் காணப்படுவது சாத்தியமானது என்கின்றனர் சீன புவிச்சரிதவியலாளர்கள். ஆரம்பகாலம் தொட்டு நிகழ்ந்து வருகின்ற இவ் அமிழ்தல் செயற்பாடானது இந்திய துணைக்கண்டத்துக்கும் இமைய மலை உச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எவ்வாறான உயர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்க முடியும்? பாடம்-15 ஐ பார்க்க.


{mospagebreak} 2.1.4 பக்கப் பாட்டு அசைவுகள்


புவியோடுகள் கிடையாக நகர்கின்ற தன்மையானது சிலவேளைகளில் பக்கவாட்டில் நடைபெறுகின்றமையின் காரணமாகவும் புவி மேற்பரப்பில் பல நிலவுருவங்கள் சாத்தியமாகின்றன. ஒருங்கும் தகடுகள் பகுதியில் அவற்றின் பல குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தோடு ஏற்படும் குறைகளும் பன்முகத்தன்மை கொண்ட நிலவுருவங்களை தோற்றுவிக்கின்றன. மேலே காட்டப்பட்ட படமானது(படம்-16) ஒரு மலையானது எவ்வாறு பக்கப்பாட்டு அசைவினால் மாற்றம் பெறுகின்றது என்பதனை விளக்குகின்றது.


2.2 செங்குத்தான அசைவுகளும் நிலவுருவங்களும்


புவி அகவிசையானது புவியோடுகள் வழியே செயற்படுத்துகின்ற அசைவுகள் வரிசையில் செங்குத்தான புவியோட்டு அசைவுகளும் புவி மேற்பரப்பில்
வேறுபட்ட நிலவுருவங்களை ஆக்கவல்லன. இவ்வகையான அசைவானது இருவேறுபட்ட பிரதானமான நிலக்காட்சிகளின் உருவாக்கத்தில் செல்வாக்குச்செலுத்துகின்றது. புவியோட்டின் கீழ் உள்ள கிளர் மின் விசைகள்,மக்மா,அதிஉயர் அமுக்கம்,வெப்பம் என்பன காரணமாக இவ்வகையினதான அசைவுகள் சாத்தியப்படுவதாக நம்பப்படுகின்றது. அவற்றைத் தொடர்ந்து நோக்குவோம்.


2.2.1 குறைகளுடன் கூடிய நிலவுருவங்கள்


பெரும்பாலான குத்தான அசைவுகள் நில உயர்ச்சி அல்லது தழ்வுடன் ஒன்றியே நடைபெறுகின்ற்ன. உயர்த்தப்படுகின்ற அல்லது தாழ்த்தப்படுகின்ற பாறைப்படைகளானது வண்மை கூடியனவாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அவை மேலும் மடிவுற முடியாது உடைவடைந்து குறைகள் உண்டாகின்றன. இதை ஒரு குறைகள் ஏற்படுவதற்கான ஒரு காரணியாகக் கொள்ள முடியுமே தவிர முற்று முழுதான காரணியாகக் கொள்ளமுடிவதில்லை. காரணம் பல செயற்பாடுகள் காரணமாகவே குறைகள் தோன்றுகின்றன. அத்தோடு குறைகளை பல்வகையான தகட்டோட்ட தன்மைகளுடனும் நாம் ஒப்பிட்டு நோக்க முடியும். உதாரணமாக மேலதிக தகவல்களுக்கு பகுதி 2.1.1.4 ஐ பார்க்க. குத்தான அசைவுகள் மூலம் ஏற்படுகின்ற குறை நிலவுருவங்கள் சில சமையங்களில் பிளவுப்பள்ளத்தாக்குகள்,கண்ட உயர்ச்சிகளாகவும் காணப்படலாம். (படம்;-6 ஐ பார்க்க)


2.2.2 மேட்டு நிலங்களின் உருவாக்கம்


புவியோட்டின் சில பகுதிகள் நீண்ட ஒரு பெரும் பாகம் வளைவின் மையத்திலிருந்து மிகச்சிறிய சாய்வுடன் உயர்த்தப்படுகின்றன. (படம்-17) இதன்போது பாரிய மேட்டு நிலங்கள் தோற்றம் காண்கின்றன. சிலவேளைகளில் இவை மாறாக கீழ் இறக்கப்படும் போது பாரிய கண்டங்களின் உள்ளமைந்த ஏரிகள் கடல்கள் உருவாகின்றன. இவ்வகையில் உருவாகிய மேட்டுநிலங்களை இன்றும் அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும்,ஐஸ்லாந்திலும் காணலாம்.

 



இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 2277
  • இணைக்கப்பட்டது: Saturday, 17 January 2009 01:19 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 74
Last Updated on Sunday, 03 July 2011 11:13  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நாம் இருக்கும் உயரத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நம் சிந்தனைகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

- ஸிக்ஸாக்ரன்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1599
mod_vvisit_counterYesterday1911
mod_vvisit_counterThis week6653
mod_vvisit_counterThis month11273
mod_vvisit_counterAll648751

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.