பெருமளவான
நிலவுருவங்கள் புவியின்இயற்கையான கலையம்சத்தின் வெளிப்பாடுகள் எனலாம். அதிகமான நிலவுருவங்கள் புவிமேற்பரப்பில் நடைபெறும் வானிலையால் அழிதல் மற்றும் அரிப்பு செயற்பாடுகளினாலும், மண் கனியங்கள் உயர் நிலங்களில் இருந்து தாழ் நிலங்கள் நோக்கி நகர்த்தும் இயற்கையான ஊடகங்களால் நகர்த்தப்படுவதனாலும் உருவாகின்றன. வேறுபட்ட தன்மைகளை கொண்ட பாறைகள் ஒரே காலநிலையில் சிதைவடையும் வேகமும் வேறுபட்டதாகவே இருக்கும். மழை நீர் கொண்டுள்ள...
அமிலத்தன்மையானது பாறைகளின் கனியங்களை வெகுவாக சிதைவடையச் செய்துவிடுகின்றது. இதானால் மழைநீரினாலான இரசாயன, பொறிமுறை வானிலையால் அழிதல் செயற்பாடு அதிகம் எனப்படுகினறது. பல வேளைகளில் கடினமான பாறைகளில் இருந்து மிருதுவான படைகள் அரித்தெடுக்கப்பட்டதும் அப்பிரதேசங்கள் வேறுபட்ட நிலவுருவங்களை பெற்றுவிடுகின்றன. இவை தவிர நிலநடுக்கங்களுடன் உருவாகும் தகட்டோட்டங்களின் விளைவாலும் எரிமலை நிலவுருவங்கள், குறை நிலவுருவங்கள் என்பன தோன்றுவதுண்டு.
பொதுவாக நிலவுருவங்களை கற்கின்றபோது அரித்தல், காவிச்செல்லல், படியவிடல் போன்ற மூன்று செயன்முறைகளை கவனத்தில் கொள்கின்றோம். நிலவுருவங்கள் மூன்று முக்கியமான செயற்பாடுகளின் அடிப்படையில் தோன்றுகின்றன. உயர் நிலப்பகுதிகளில் பாறைகள் வானிலையால் அழிதல் செயற்பாட்டின் மூலம் அசையக்கூடிய துண்டுகளாக சிதைக்கப்படுகின்றன. வானிலையால் அழிதல் என்பது இங்கு உயிரியல் வானிலையால் அழிதல், இரசாயன வானிலையால் அழிதல் என இரண்டு விதங்களில் நடைபெறுகின்றது.வானிலையால் அழிதல்
மேலும் காற்று, ஆறு, பனிக்கட்டி ஆறு என்பனவற்றினாலும், வெப்பநிலையினாலும் பாறைகள்
பொறிமுறை வானிலையால் அழிதல் என்ற செயற்பாட்டிற்கும் உட்படுகின்றன. சிதைக்கப்பட்ட பாறையின் பாகங்கள் இயற்கையின் நகர்த்தும் ஊடகங்களினால் தாழ்நில பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன. தாழ்நிலப்பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டுவதில் இருந்து பல்வேறு ஊடகங்களினால் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் நகர்த்தப்படுகின்றன.
இச்செயன்முறையின் ஒவ்வொரு பகுதியும் நிலவுருவங்களின் ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. புவியின் ஆரம்பகால நிலவுருவங்களின் தோற்றம் தொடர்பான கற்கைகள் நிலவுருவங்கள் தகட்டோட்ட நகர்வுகளினால் அதிகமாக உருவாகியதாக கூறுகின்றன. பாரிய மலைத்தொடர்கள் பலவும் தகட்டோட்ட நகர்வினால் தோன்றியிருக்கின்றன. பாறைகளின் மேற்பரப்புக்கள் சில ஏனையவற்றைவிட உராய்வுத்தன்மை கூடியதாக இருக்கின்றன.
உராய்வுத்தன்மை கூடிய பாறைகள் அரித்தல் செயல்முறையின் போது அதிகமாக செயற்படுகின்றன. வானிலையால் சிதைவுற்ற இவ்வாறான பாறைத்துகழ்கள் நகர்த்தப்படும்போது அரித்தல் செயற்பாடுகளினால் நிலவுருவங்கள் தோற்றம் பெறுகின்றன. சுண்ணாம்பக்கற்பாறைகள் வெகுவாக செயன்முறைக்கு உட்பட்டுவிடுகின்றன. இதனால் சுண்ணாம்பக்கற்பாறைகளை கொண்ட பகுதிகள் அதிகமான நிலத்தடி நிலவுருவற்களை ஏற்படுத்திவிடுகின்றன. எனினும் சில பிரதேசங்களில் சுண்ணாம்புக்கற் பாறைகளின் மேலோ படிந்துள்ள தீப்பாறைகள் சுண்ணாம்புக்கற்பாறைகளை வானிலையால் அழிதலில் இருந்து பாதுகாக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்க பகுதிகளில் இவ்வாறான நிலத்தோற்றங்கள் உண்டு. உலகின் நில அமைப்பியலில் இயற்கையாகவே வானிலையால் அழிதலினை கட்டுப்படுத்தும் தன்மைகனை பல பகுதிகள் கொண்டிருக்கின்றன. உயர் மலைப்பிரதேசங்களில் மடிக்கப்பட்டுள்ள பாறைப்படைகள் மற்றும் வேறுபட்ட பாறைகளினால் உருவாக்கப்பட்ட பல அடுக்குகளை கொண்ட பாறைப்படைகள் என்பன இதற்கு சிறந்த உதாரணமாகும். மிருதுவான பாறையின் மேற்புறமாக கடினமான பாறைப்படை ஒன்று இருக்கும் போது அங்கு மிருதுவான பாறை வானிலையால் அழிதலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 470
- திருத்தியமைக்கப்பட்டது: 7 தடவைகள்
- இணைக்கப்பட்டது: Saturday, 12 September 2009 00:00 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 172
















