.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உண்மை மனிதர்கள், உண்மையான தேவைகள்

E-mail

2009 ம் ஆண்டின் உலக அகதிகள் தின வாசகம் அது. முறன்பாடுகள், தொல்லைகள், இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் தமது இருப்பிடங்களை இழந்து உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிற்க்குள்ளும் அகதிகளாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் நாளாந்தம் அதிகரித்தே வந்திருக்கின்றன. இன்றைய உலகில்  58 நாடுகளில் 6.6 மில்லியன் மக்கள் எந்த நாட்டிற்கும் உரித்து அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். இது உலகளாவிய அடிப்படையில் 12 மில்லியனை தாண்டலாம் எனப்படுகின்றது. ஆயுதப்போராட்டங்களே மனித...

குலத்தின் அமைதியினை சீர் குலைத்ததுடன் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்குமான அகதிகளின் எண்ணிக்கையினை அண்மைய காலங்களில் அதிகரித்திருக்கின்றது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம்.

இன்று(2008 முடிவில்) உலகளாவிய அடிப்படையில் 42 மில்லியனான அகதிகள் தமது சொத்துக்களையும், இருப்பிடங்களையும் இழந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் 15.2 மில்லியனான தமது நாட்டுக்கு வெளியே அடைக்கலம் தேடும் அகதிகளில் 10.5 மில்லியன் மக்களும், தமது நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழும் 14.4 மில்லியன் மக்களும் என சராசரியாக 25 மில்லியன் மக்களே தனது கண்காணிப்பில் தமது உதவிகளுடன் வாழ்வதாக தெரிவிக்கிறது ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம்.

உலக அகதிகளில் 47 வீதமானவர்கள் பெண்களும், சிறுமிகளும் எனும் அதன் அறிக்கை அவர்களை பாலியல் பலாத்காரங்களில் இருந்தும் வன்முறைகளில் இருந்தும் விசேடமாக பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினையும் முன்வைக்கின்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே உலகில் ஐந்தில் நான்கு மடங்கான அகதிகளுக்கு அடைக்கலம் தருகின்றன. 2008 ம் ஆண்டில் உலகில் அதிக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாடாக பாகிஸ்தான் விளங்கியது. அதில் சிரியன்-அரபு குடியரசின் அகதிகள் மட்டுமே 1.1 மில்லியன் இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

ஆப்கானிஸ்தானில் 1978 களில் இருந்து தொடர்ந்த உள்நாட்டு முறன்பாடுகளினால் அந்நாட்டில் ஏற்பட்ட அகதிகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகமாகும். 1992 களின் அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பின் 2 வீதமான பகுதி நிலக்கன்னி வெடி அபாயம் கொண்ட பகுதிகளாக இருந்தன. நாட்டின் பொருளாதாரம், அரசியல், சுற்றாடல் என அனைத்திலும் போரின் விளைவுகள் தென்படத்தொடங்கின. இன்று உலகின் அகதிகளில் நான்கு பேருக்கு ஒருவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவராகவே இருக்கின்றார். இன்று ஆப்கானிஸ்தான் அகதிகள் உலகின் 69 வேறுபட்ட நாடுகளில் அடைக்கலம் தேடியிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக உலக அகதிகள் தொகையில் ஈராக் இரண்டாவது இடத்தில் உள்ளது.

2002 முதல் அந்நாட்டில் நிலவிய பதட்டங்கள் இதற்கு காரணமாகியிருக்கின்றது. இந்த இரண்டு நாடுகளும் உலகின் சர்வதேச அகதிகளில் அரைவாசி இடத்தினை பிடித்துக்கொள்கின்றன. இவற்றினை விட பலஸ்தீனம், கொலம்பியா, லெபனான் உட்பட பல உப சகாரா நாடுகளும் அகதிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளே. உலகளாவிய அடிப்படையில் அநாதரவாக்கப்படும் இம்மக்களின் உயிர்களுக்கும், உணர்வுகளுக்கும் உத்தரவாதம் பெற்றுத்தரும் ஓர் ஏற்பாடாகவே யூன் 20 2009 அன்றைய உலக அகதிகள் தினத்தின் வாசகமாக “உண்மை மனிதர்கள், உண்மையான தேவைகள்” என்பதனை ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம் அறிவித்திருந்தது.

இன்று உலகின் அகதிகளில் அரைவாசி எண்ணிக்கையானவர்கள் நாடுகளின் நகரங்களில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வவொரு ஐவருக்கும் நான்கு பேர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வாழ்கின்றனர். பாதுகாப்பான இருப்பிடம் தேடும் அகதிகளில் 75 வீதமானவர்கள் தமது அயலில் உள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

 

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 1932
  • இணைக்கப்பட்டது: Thursday, January 21 2010 18:41 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 207
Last Updated on Sunday, July 03 2011 11:15  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1355
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2856
mod_vvisit_counterThis month7476
mod_vvisit_counterAll644954

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.