.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர் வளமும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும்.

E-mail

உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...

தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிராந்திய நன்னீர் வளம் ஏனைய  நடவடிக்கைகளை காட்டிலும் விவசாயத்தினால் மாசடைவது என்பது அதிகளவில் காணப்படுகின்றது. எஞ்சிய நன்னீர் வளத்தின் 8 வீதம் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியது போக மீதமுள்ள 6 வீதமான நீரே மக்களின் நேரடியான வீட்டுத்தேவைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் நன்னீர் தொடர்பான பிரச்சினைகளும் நீர் மாசடைவு தொடர்பான பிரச்சினைகளும் அதிகமே எனலாம்.

கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி இப்பிராந்திய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மூன்றில் ஒருவர் தமது வீட்டிற்கு 200 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் குடிநீரினை பெறமுடியாதவராக இருந்திருக்கின்றார். இத்தனைக்கும் மேலாக இப்பிராந்திய நீர்முகாமைத்துவ சீர் கேடுகளை பிரதிபலிக்கும் ஒன்றாக வருடாவருடன் இப்பராந்தியங்கிளில் மாறி மாறி ஏற்படும் வரட்சிகளும் வெள்ளப் பெருக்குகளும் காணப்படுகின்றன. ஆசியாவின் நீர் தட்டுப்பாட்டினையும் நீர் மாசடைவினையும் குறித்த திடமான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம் என மேற்கத்தைய நாடுகள் நம்புகின்றன.

குறைவான நீர் பயன்பாட்டினை கொண்ட தாவரங்களை பயிரிடுதல் என்பது நீர் பயன்பாட்டினை அரைவாசியாக குறைக்கும் எனப்படுகின்றது. ஏனெனில் அதிகளவான நன்னீர் வளம் நெல் உற்பத்திக்காகவே இப்பிராந்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அது தவிர கழுவு நீரினை சிறந்தமுறையில் முகாமைத்துவப்படுத்தல், நீர் மாசடைவினை அவதானிப்பதற்கான கொள்கை விரிவாக்கங்கள், உள்நாட்டு கல்வியறிவில் விருத்தி, தொடர்பாடல், தொழில்நுட்ப அபிவிருத்தி போன்றன மூலம் நீர் மாசடைவினை முடியமானவரை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராகவேனும் கட்டுப்படுத்த முடியும் எனப்படுகின்றது.

அத்தோடு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினை கைத்தொழில் நோக்கி இட்டுச்செல்ல வேண்டியதன் அவசியமும் பாரியளவில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. முதற்தரமான கைத்தொழிற்சாலைகள், குறைவான நீர் மாசுபடுத்தலுடன் அமைத்தல், கிராமி மட்டங்கிளில் உள்ளமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடி நீரினை பெற்றுக்கொடுத்தல் என்பன மூலம் இன்றைய நீர் வள முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு இப்பிராந்தியங்கள் நீண்ட தீர்வுகளை பெற்றுத்தரமுடியும் என நம்பப்படுகின்றது. அதே வேளை இப்பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நீர் வளம் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு நீருக்கான சமூக பொருளாதார வலுவினை உயர்த்தி மதிப்பிட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

அத்தோடு நீர் மாசடைவு, நீருக்கான கேள்வியினை சிறந்த முறையில் முகாமை செய்வது, நீரின் மிதமிஞ்சிய மற்றும் தவறான பாவனைகளை கட்டுப்படுத்தல், நீர் விலைக்கொள்கைகளை உருவாக்குதல்,  கழிவு நீர் முகாமை போன்றவற்றோடு நீர் வள முகாமைத்துவம் தொடர்பான தொழில் நுட்பங்களை வளர்முக நாடுகளும் அனுபவிக்கக்கூடிய திட்டங்களை உருவாக்கவேண்டியதன் அவசியங்களும் இன்று உணரப்பட்டிருக்கின்றன.

 

Last Updated on Thursday, 25 February 2010 17:26  

AUTO LINK SYSTEM..

* உறுப்பினர்கள் : 105
* கட்டுரைகள் : 152
* வாசகர் பார்வை : 100603

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உங்கள் உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனைகளாக வடிவெடுக்கின்றது.

- வெற்றிக்கு


STUDY WITH US..

Who's Online

தற்போது 7 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday478
mod_vvisit_counterYesterday458
mod_vvisit_counterThis week936
mod_vvisit_counterThis month5162
mod_vvisit_counterAll80981

SEARCH WITH US

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.