.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலைத்துநிற்கும் அபிவிருத்தி எண்ணக்கரு

E-mail

புவிச்சூழலின் பாதுகாப்பே மனித குலத்தின் நிலைப்பேறாகும். சூழல் பிரச்சினை ஒரு பிரதேசம், ஒரு நாடு சார்ந்ததல்ல. தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் பரவும் பிரச்சினையாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் தேசிய மட்டத்திலும் உலகளாவிய ரீதியில் சூழலைப் பாதுகாத்தல் மிக அவசிய தேவையாக மாறிவிட்டது. ஆயினும் அவற்றினுடைய இன்றைய அபிவிருத்தி மட்டங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கேற்பவே அவற்றின் பாதுகாப்பு முறைகளும்...

வழிவகைகளும் காணப்படுகின்றன.


1994 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரத்தில்  “நகரங்களும் நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியும்:” என்னும் தலைப்பில் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் உலகின் பிரதான 63 நகரங்களில் இருந்து நூற்றிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அம் மகாநாடு அரசாங்கம், தொழில் வழங்குவோர், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருந்ததாகும். இம்மகாநாடு ஐக்கிய நாடுகள் சபையினது சூழலும் அபிவிருத்தியும் பற்றிய மூன்றாவது மாநாடாகும். ஏற்கனவே 1972 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் அதன் தலைநகரமான ஸ்டோக்கோமில் முதலாவது மாநாடு நடைபெற்றது. இரண்டாவது மகாநாடு பிறேசிலின் தலைநகரான ரியோடிஜெனீராவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்றது.


அபிவிருத்தியடைந்த நாடுகள் பொருளாதார ரீதியில் நன்கு அபிவிருத்திடைந்துள்ளன. ஆனால் சூழல் மட்டத்தில் அவை உச்ச அளவிற்குப் பூகோளத்தை மாசடைய வைத்துள்ளன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கைத்தொழில் நாடுகளைப் பின்பற்றி பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சூழலை மாசடைய வைக்கும் பணியினை மெல்ல மெல்ல மேற்கொண்டு வருகின்றன. ஆனால் புறூண்லண்ட் ஆணைக்குழுவும், புவியுச்சி மாநாடும் ஏற்படுத்திய எச்சரிக்கை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை நின்று நிதானிக்க வைத்துள்ளன.


நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் “சூழலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இருபங்குகள் போன்றவை. எனவே சூழலும் அபிவிருத்தியும் ஒன்றிற்கொன்று பாதிப்பில்லாமல் ஒருங்கே இணைந்து செயற்படல் நிலைத்துநிற்கும் அபிவிருத்தியின் குறிக்கோளாகும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி திட்டங்களில் சூழல் மதிப்பீடு இல்லாத திட்டங்கள் கைவிடப்படும். சூழல் பாதுகாப்பு பாதுகாப்பு அபிவிருத்தியுடன் ஒன்றிணைந்தாலே அந்த அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
“சூழலும் அபிவிருத்தியும்” என்ற கருத்து அபிவிருத்தித் திட்டமிடலில் இன்று கூடிய கவனிப்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐந்து சூழற்பிரச்சினைகள் இன்று முதன்மையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


1.    பூமி வெப்பமடைந்து வருதல்.
2.    ஓசோன் படையில் துவாரம்.
3.    நச்சுக்கழிவுகளை சூழலில் வீசுதல்.
4.    உயிரினங்களின் பல்லுயிர்த் தன்மை அழிதல்.
5.    நிலவளமும் நீர் வளமும் அழிதல்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உலக சனத்தொகையில் 1/3 பங்கினர் உள்ளனர். ஆனால் உலக வளங்களில் 2/3 பங்கினை அவை அனுபவித்து வருகின்றன. அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உலக சனத்தொகையில் 2/3 பங்கினைக்; கொண்டிருந்தாலும் உலக வளங்களில் 1/3 பங்கினையே பயன்படுத்தி வருகின்றன. எனவே அதிக இயற்கை வளங்களை நுகரும் அபிவிருத்தி அடைந்த நாடுகளே உலகச் சூழலை அதிகளவில் மாசடைய வைத்தவையாகும். எனவே சூழற் பிரச்சினைகளை திருத்துவதற்கான பெரும் பங்கும் அந்த நாடுகளையுடையதாகும். என மூன்றாம் மண்டல நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சூழற்பிரச்சினைகளுக்கு வறுமை முக்கிய காரணியாகவுள்ளது. எனவே அந்த நாடுகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கான திட்டமிடல் பின்வரும் இருவழிகளில் செயல்பட வேண்டுமென கலாநிதி. காமினி கொரியா கருதுகிறார்.


1.    வறுமையும் அதன் பாதகமான விளைவுகளையும் நீக்குவதற்கேற்ற விருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


2.    இந்த விருத்தி நடவடிக்கைளில் சூழல் பாதிப்படையாததும் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் அமைவதை உறுதி செய்தல்.

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இன்னோர் கருத்தும் வற்புறுத்தப்படுகின்றது. என்னவெனில் எதிர்காலத் தேவைகளை விட்டுக் கொடக்காத வண்ணம் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகும். அத்தோடு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேவைகளை அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தேவைகளுக்காக விட்டுக்கொடுத்தலாகாது என்பதும் அடங்கும்.
அத்துடன் பேண்தகு அபிவிருத்தியில் மேலும் இரு அம்சங்கள் கையாளப்படவேண்டும்  என வற்புறுத்தப்படுகின்றது. அவை,


1.    அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்திக்கு திட்டமிடும்போது, அபிவிருத்தியடைந்த நாடுகளின் விருத்தி மாதிரிகளை பின்பற்றக்கூடாது. அவை சூழலை மாசடைய வைத்தவை என்பதாலாகும். தத்தமது ஆள்புலச்சூழலையும் உலகளாவிய சூழல் பாதுகாப்பையும் கவனத்திற் கொண்டு திட்டங்களை வகுக்கவேண்டும்.


2.    ஏற்கனவே அபிவிருத்தி அடைந்த நாடுகள் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு ஏற்கனவே உருவாக்கப்பட்ட அபிவிருத்தி சார் கட்டமைப்புக்களைத் திருத்தியமைத்துக் கொள்ளவேண்டும்.

நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை அடைவதில் வளர்முக நாடுகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.


1.    அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்யும்போது சூழல்பாதிக்கப்படாத முi9றயில் அமையும் தொழில் நுட்பம் கையாழப்பட வேண்டும். ஊதாரணமாக ஒவ்வொரு தொழிற்சாலைகளும் தமது கழிவு நீரைச் சுத்திகரிக்கும் உப ஆலையை நிறுவ வேண்டும். இத்தகைய தொழில் நுட்பங்களும் தேவையான யந்திரங்களும் முன்னரை விட செலவு கூடியவையாகும்.


2.    நிலம், கனியவளம் என்பவற்றை உபயோகிக்கும் போது சூழலியற் கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு விருத்திக்கான மாற்று வழிகளை கைக் கொள்ள வேண்டும். ஆதற்கும் செலவு அதிகமாகும்.


3.    அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் முதனிலைப் பொருட்களில்தான் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல தொழில்கள் இயங்ககின்றன. இது வளங்களின் எதிர்முகமான பாய்ச்சலாகும்.


4.    அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வருடா வருடம் தாம் பெற்ற கடன்களுக்காக வட்டியாக 30அ மில்லியன் டொலர்களை செலுத்துவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தியின் செயற்பாடுகளுக்கு மேலதிகமாகும்.


5.    வெளிநாட்டுப் பொருட்களின் விலை வீழ்ச்சி, உள்ளுர்க் கைத்nhழில் சந்தைகளைப் பாதுகாத்தல், வெளிச் சந்தைவாய்ப்புக்களைத் தேடுதல் போன்ற பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுமுள்ளன.
இத்தகைய நிலைமைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றிய ஆதரவுத்தளத்திற்க தடைக்கற்களாக அமைகின்றது.

வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை அவை அபிவிருத்தியின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவை. சுதந்திரத்திற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற சுயசிந்தனை வளரப்பட்டு விட்டாலும் இந்த நாடுகள் வரவேற்கத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை. வளர்முக நாடுகளில் அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் பல் பொருளாதார சமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த நாடுகளைப் பொறுத்த வரையில்  அவை அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாது தவிhக்கின்றன. இவ்வாறான நிலையில் இன்னும் பிறந்திராத மனிதர்களைப் பற்றி சிந்திப்பது அர்த்தமற்றது. வளங்களைப் ப+ரணமாக கண்டு பிடிக்கவே தொழில்நுட்ப வசதியின்றி துயருறும் இந்நாடகளுக்கு மீளு சுற்று அடிப்படையில் வளங்களைப் பேணல்  போன்ற ஆலோசனைகளை வளர்ந்த நாடுகள் வழங்குவது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

இந்நாடுகளில் நிலவும் வறுமை, போசாக்கின்மை, சுகாதார மருத்துவ வசதிகள் குறைவு, கல்வியறிவின்மை, மூளைசாலிகள் வெளியேற்றம், தொழில்நுட்ப வசதிக்குறைவு, சனத்தொகைப் பெருக்கம் போன்றவற்றின் காரணமாக நிரந்தர அபிவிருத்தியை ஏற்படுத்த தடைகளாகவுள்ளன. வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் தொகை அதிகரித்து வருவதால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகின்றன. 2000 ஆம் ஆண்டு உலக அபிவிருத்தி குறிகாட்டிகளை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது உலக மக்களில் 16சதவீதத்தைக் கொண்டுள்ள வடஅமெரிக்கா, ஐரொப்பிய நாடுகள், யப்பான் என்பன உலக மொத்த வருமானத்தில் 80 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன. 1998 இல் மாத்திரம் அந்நாடுகளில் சராசரிப்பிரஜை ஒருவர் நாளாந்தம் 70 அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றிருந்தனர். அதேவேளை உலகில் 57 சதவீதமான மக்களைக கொண்டிருந்த 63 நாடகள் உலக வருமானத்தில் 6 சதவீதத்தைக் கொண்டிருந்தன.

வறுமை நாட்டின் வளத்தைப் பாதிப்பதுடன் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை ஏற்று அமுல் செய்ய வளர்ச்சி குறைந்த நாடுகளைத் தூண்டுகின்றது. இதற்குக் காரணம் ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும் குறகிய நன்மைகளை அரசாங்கம் நாடுவதே ஆகும். வறுமையில் வாழும் சுகாதாரக் குறைவான சூழலில் வசிக்கம் மக்கள் பூமியின் பௌதீக சூழலில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணுகிறார்கள். காடழிப்பு, சேனைப் பயிhசெய்கை, சேரிப்புறக் குடியிருப்புக்கள் முதலியன சூழலைப் பாதிக்கின்றன.

இந்நாடுகளில் உற்பத்தியைப் பெருக்கவதற்க நவின தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த போதியளவு மூலதனங்கள் இல்லை. வேறு நாடுகளிலிருந்து பயிற்சி பெற்றவர்களை  வரவழைக்க முடியாத நிலை அத்துடன் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது அந்த தொழில் ஈடுபட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு இன்மை ஏற்படுகின்றது. ஏணைய நாடுகளிலிருந்து பயிற்சியாளர்களை வரவளைக்கும் போது அவர்கள் இந்நாடுகளின் தராதரத்தை அறிந்து உரிய முறைகளில் பயிற்சிகளை வழங்காது விடுதல். இவ்வாறான காரணங்களினால் இந்நாடகளில் நிலைத்திருக்கும் அபிவிருத்தி  பற்றிய  எண்ணம் தூர நோக்குடையதாகக் காணப்படுகின்றது.

அதிகரிக்கும் சனத்தொகையும் இந்நாடுகளில் எதிர்நோக்கும் சவால்களாக உள்ளன. மருத்துவத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, உணவில் போசாக்கு போன்றவற்றிழன் காரணமாக சனத்தொகையில் அதிகரிப்பு கூடுதலாகவுள்ளது.  சனத்தொகைக்கு ஏற்ப விவசாயத்தில் கிருமிநாசினிகளின் பயன்பாடு அதிகரித்தது. இவற்றினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சூழல் எதிர்கொண்டு வருகின்றது. இவை இந்நாடுகளில் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக உள்ளன.

வளர்ந்த நாடுகள் உலக சனத்தொகையில் ஏறத்தாள 20 வீதத்தை கொண்டு காணப்பட உலக வளங்களில் 80 வீதமானவற்றை இந்நாடுகளே நுகர்கின்றன. வளர்முக நாடுகளில் இந்நிலை வித்தியாசமாகக் காணப்படுகின்றது. அதாவது 80 சதவீதமான மக்களைக் கொண்டு காணப்படும் இந்நாடுகளில் 20 வீத வளநுகர்வே காணப்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி முயற்சிகள் யாவும் வளர்முக நாடுகளின் முன்னேற்றத்தில் காணப்படும் படுகுழிகளாகவெ உள்ளன. எனவே நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை சிந்திக்கக் கூடிய அளவிற்கு வளர்முக நாடுகள் இல்லை என்றே கூறலாம்.


உசாத்துணைகள்:-
1.    தவபிரபா. என், நிலைத்துநிற்கும் அபிவிருத்தி (கையேடு -2009), புவியியற்றுறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
2.    குணராசா.க, சூழலியில் (2002), கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
3.    வர்ணகுலசிங்கம். ம, சூழலியற் புவியியல் (2006), வாழைச்சேனை

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 271
  • திருத்தியமைக்கப்பட்டது: 17 தடவைகள்
  • இணைக்கப்பட்டது: Thursday, 19 November 2009 11:21 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 197
Last Updated on Tuesday, 08 June 2010 20:30  
கட்டுரையினை எழுதியவர்: ச.மகேந்திரன்

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116080

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 5 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday165
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3319
mod_vvisit_counterThis month17970
mod_vvisit_counterAll150274

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.