முதலாளித்துவ உற்பத்தி முறைமையின் கீழ் பாட்டாளி
வர்க்கத்தின் உழைப்பு சுரன்டப்படுகின்றது. தன் உழைப்பின் பயனையோ அல்லது அதற்குச் சமமான பலனையோ அனுபவிக்க முடியாதவாறு பாட்டாளி முதலாளி வர்க்கத்தினால் புறக்கணிக்கப்படுகின்றான். இந்நிலையே பாட்டாளியை அவனது உழைப்பின் வெளியீடான உற்பத்தியிலிருந்து பிரித்துச்செல்கின்றது எனும் மார்க்ஸ். தொடரும் அன்னியமாதல் சமூகச் சீர்கேடுகள், சமுதாய வன்முறைகளை ஏற்படுத்தும் அளவிற்கு விபரீதம்...
அடையும் என்பார். சமூகத்தின் அனைத்து கூறுகளையுமே பொருளாதார கண்ணோட்டத்தில் விளக்கும் மார்க்ஸ் அன்னியமாதலையும் அவ்வாறே விளக்க
தொடர்ந்து தொளிலாளர் உற்பத்தியினை பொறுத்தவரை மார்க்ஸ் கூறும் அன்னியமாதல் இம்மூன்று காரணிகளின் அடிப்படையில் எவ்வாறு செயற்படுகின்றது என தொடர்ந்து விளக்கப்பட்டுள்ளது.
- உற்பத்திச் செயன்முறைகளிலிருந்து அன்னியமாதல்
விற்றுக்கொண்டிருப்பதை உணர்ந்தும் அதிலிருந்து விலகிச்செல்ல முடியாதவனாகும் பாட்டாளியின் உள்ளார்ந்த மனக்கிளர்ச்சி அவனை தன் உற்பத்திச் செயன்முறைகளில் இருந்து அன்னியமாகுவதற்குத் தூண்டுகின்றது என்பார் மார்க்ஸ்.
தனது உழைப்பு, நேரம், ஆற்றல், அறிவுத்திறன என்பன தன் முதலாளிக்கு பெருமளவான இலாபத்தினையும் தனக்கு இழப்பினையும் பெற்றுத்தருகின்ற இந்நிலைமையினை உணர்ந்தும் தொழிலாளி தன் வயிற்றுப்பிழைப்புக்காக அத்தொழிலை தொடர வேண்டியவனாக சிறைப்படுத்தப்படுகின்றான். உழைக்கும் வர்க்கத்தில் உழைப்பு என்பது வெறுமனே உயிர்வாழ்வதற்கான ஒரு மார்க்கமே என்ற
உதறித்தள்ள முடியாதவனாக உழைப்பாளி இருக்கின்ற தன்மையினை மார்க்ஸ் இங்கு விபரிக்கிறார். தன் உயிர்வாழ்க்கைக்கான அடிப்படைகளை தனது உழைப்பில் தாங்கி நிற்கும் தொழிலாளி தன் உழைப்பை எச்சந்தர்ப்பத்திலும் இழப்பதற்குத் தயாரில்லாதவனாகின்றான்.
எனவே தன் உழைப்பின் மூலம் தனது உற்பத்திச் செயன்முறைகளை முதலாளி வர்க்கத்திற்காக தான் விற்றுக்கொண்டிருப்பதை அறிந்தும் அதனையே தொடர்ந்து செய்வதற்கு தன்னளவில் நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளி தன் உற்பத்திச் செயன் முறைகளில் இருந்து நாளடைவில் அன்னியமாகின்றான் என்பதனை மார்க்ஸ் இப்பகுதியினூடாக விளக்குகிறார்.
- உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலிருந்து அன்னியமாதல்
உழைப்பு இந்த அடிப்படையில் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாகவும் அதே வேளை தனக்கு பாதகமான விளைவுகளையும் தோற்றுவிக்கின்ற இந்நிலையினை கண்டுகொள்ளும் உழைப்பாளி தன் உற்பத்தியிலிருந்து அன்னியமாகின்றான் அல்லது அன்னியமாக்கப்படுகின்றான் என்கிறார் மார்க்ஸ்.
தொழிலாளியின் இவ்வுழைப்பு அவனுக்கு கசப்பானதாக மாறும் இந்நிலை ஒர் ஆரோக்கியமான சமூகத்தை ஒரு பொழுதும் தோற்றுவிக்காது என்கிறார். மாறாக உற்பத்தியில் வீழ்ச்சியும் பொருட்களின் தரத்தில் வீழ்ச்சியுமே மிஞ்சுகின்றது. தொழிலாழி தான் உற்பத்தி செய்த பொருட்களின் மீது எந்தவித உரிமையோ
வர்க்கத்தின் தொழிலாளி மீதான சுறண்டலுக்கு சாதகமான வாய்ப்பை மேலும் தொடர்ந்து வழங்குகின்றது. இவ்வாறாக தனது உற்பத்தி ஆற்றலுக்கும், சிந்தனைப் பரிணாமத்திற்கும் எதிர்மாறான விளைவுகள் தன்னை ஆட்கொள்கின்றபோது தொழிலாளி தன் உற்பத்தியிலிருந்து அன்னியமாதல் என்பது சாதாரணமாக நிறைவேறிவிடுகின்றது என்பார் மார்க்ஸ்.
இறுதியாக, முதலாளி வர்க்கம் ஒரு பொருளினை உற்பத்தி செய்வதற்கு தான் செலவு செய்யும் முதலை காட்டிலும் பன்மடங்கு வருவாயினை பெற்றுக்கொள்வதற்கு காரணமாகும் தொழிலாளி அப்பொருளை உற்பத்தி செய்வதற்கு தான் சிந்திய வியர்வை, பயன்படுத்திய அறிவாற்றல் என்பதற்கு போதிய பெறுமதியைக் கூட பெறமுடியாதவனாக ஆகிப்போகின்ற தன்மையினால் அவன் தனது உற்பத்தி
நசுக்கப்படுகின்றான். இதனால் சமூகத்தில் ஓரு வர்க்கம் மற்றைய வர்க்கத்திடம் அடிமைப்பட்டு வாழும் நிலையினை முதலாளி வாக்கம் இலகுவில் சாத்தியப்படுத்தி விடுகின்றது என்பார் மார்க்ஸ். முதலாளிகளின் கீழான பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு இயந்திரங்களுக்கு நிகரானதாகவும். இயந்திரத்தை இயக்கும் மனித இயந்திரமாக பாட்டாளியை வழி நடத்துவதும் ஒரு தொழிலாளி தான்சார்ந்த சூழலில் இருந்து தன் உறவுகளில் இருந்து விரைவில் அன்னியமாவதற்கு முதலாளி வர்க்கம் காட்டும் வழியாகும். தனது ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் புரட்சி பற்றி சிந்திக்க முடியாதவாறு அவர்களின் ஒன்றிணைந்த முயற்சிகளை முளையிலே
தான் சார்ந்த மனித சமூகத்திலிருந்தும் அன்னியமாகிவிடுகின்றான். அவன் முதலாளி வாக்கத்தின் கைப்பொம்மையாக மீண்டும் தொழிலாளர் வர்க்கத்தை அடக்குவதற்கோ அல்லது நசுக்குவதற்கோ முதலாளி வர்க்கத்திற்கு துணைபோகும் தன்மையினை பெற்றுவிடுகின்றான். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் இவ்வாறு தன் சமூகத்திலிருந்து அன்னியமாக்கப்பட்ட தொளிலாளி தன்னை மீறி வளர்ந்துவிட முடியாதவாறு முதலாளி வர்க்கம் அவனது முன்னேற்றங்களை கட்டுப்படுத்தி வைக்கின்றது.
தொழிலாளி எவ்வளவுதான் முதலாளி வர்க்கத்தின் கிழ் உழைத்தாலும் அவனது உயிர்வாழ்க்கைக்கு மேலதிகமாக அவனுக்கு எதுவும் மிஞ்சிவிடாதவாறு முதலாளி வர்க்கம் அவனது முன்னேற்றத்திற்கு தடை போடுகின்றது. இதை புரிந்து கொள்ளாத உழைப்பாளி போலி உணர்வுகளின் கீழ் தன்னை அமிழ்த்தியவாறு தனது
அன்னியமாகின்ற இந்நிலையினையே மார்கஸ் இயற்கை மற்றும் மனித இனத்திடமிருந்து அன்னியமாதல் என்ற தனது பகுதியில் விளக்குகின்றார்.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 714
- இணைக்கப்பட்டது: Friday, February 12 2010 16:26 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 219


















