தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாணவர்களின் சீரான ஆளுமை வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு.

E-mail

இன்றைய சிறுவர்களே நாளைய உலகத்தை உருவாக்கப்போகிறவர்கள். ஆக நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களை அவர்களுக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் அவர்களது ஆளுமை விருத்தியை மேம்பாடடையச்செய்ய வேண்டியது பெரியவர்களது மிக முக்கிய பொறுப்பாகும். பிள்ளைப்பருவம் என்பது மானிட வாழ்வின்...

எந்தவெரு நாட்டினதும் உண்மையான அபிவிருத்தியென்பது அது அறிவு, பண்பாட்டியல் துறைகளில் பெறும் வளர்ச்சியையே குறித்துநிற்கிறது. அதாவது ஒரு சமூகம் தன்னை கல்வித்துறையில் வளப்படுத்திக்கொள்ளும் போதே அச்சமூகத்தின் உண்மையான

வேண்டிய பாரிய தேவையுள்ளது. ஒரு நாடு பல்வேறு விதமான வளங்களைப் பெற்றிருந்ததாலும் அது பெற்றிருக்கும் மனித வளமே (Human Resource) மிகவுயர்ந்த வளமாக கருதப்படுகிறது. இவ்வுயர்ந்த வளமான மனித வளத்தை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்க வேண்டிய பாரியபொறுப்பு காணப்படுகிறது.

ஒரு நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் , அந்த நாட்டை எதிர் காலத்தில் வழிநடத்தப்போபவர்கள் மாணவர்களே. ஆக இம்மாணவ சமூகத்ததை அதன் சிறு பராயத்திலிருந்தே மிகச்சிறந்த ஆளுமைமிக்க பிரஜைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பாரியபொறுப்பு ஆசிரிய சமூகத்தின் தோள்கள்; மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே இந் நோக்கத்தைசிறப்பாக பூர்த்தி செய்து கொள்வதற்கு பாடசாலைகளை அளவு ரீதியாகவும், பண்புரீதியாகவும் அபிவிருத்தி செய்வதுடன்

கொள்ளும் நுண்ணறிவு, திறன்கள் போன்ற உளக்காரணிகளாலும் , குடும்பம், சமவயதுக் குழுக்கள், தகவல் ஊடகங்கள் போன்ற சமூகவியல் காரணிளாலும் ஒருவன் வடிவமைக்கப்படுகின்றான். ஆயினும் பாடசாலைச் சூழலும் , அதன் ஆசிரியரும் ஒரு மாணவனின் ஆளுமை விருத்தியில் கூடுதல் பங்களிப்பைச் செலுத்த முடியும்.

ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் குடும்பத்திற்கு அடுத்ததும், மிக நீண்ட காலமாக குழந்தை தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுமான சமூக நிறுவனமாக பாடசாலையும், அதன் சூழலும் அமைகிறது. பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு

கற்பித்தல் முறைகளை மேற்கொள்வதும் அதன் மூலம் அவர்களது சீரான ஆளுமை வளர்ச்சிபெற உதவுவதும் ஆசிரியரது கடமையாகும்.

ஆசிரியரது நடை, உடை, பேச்சு, செயற்படும்விதம் போன்ற வற்றை மாணவன் ஆரம்ப கட்டத்திலிருந்தே அவதானித்து ஆசிரியரை முன்மாதிரியாக (Role Model)  பின்பற்றத் தெடங்குகின்றான். ஆக ஆசிரியர் மாணவர்களது ஆளுமை வளர்ச்சியில் பங்காற்ற வேண்டியவராகிய நிலையில் மாணவர் முன்பு சிறந்த ஆளுமையை வெளிப்படுத்த வேண்டியவராகிறார்.

மாணவர்களது ஆளுமையை வளர்க்கும் பாரிய பொறுப்பினை சுமந்துள்ள ஆசிரியர் அது தொர்பான உளவியல்கோட்பாடுகளையும், கல்வி உளவியல் பற்றிய புலமைத்துவ ஆற்றலையும் பெற்றிருத்தல் அவசியமாகும்.

எனும்செயற்பாடானது மானவர்களின் ஆளுமையைப்பாதிக்கும் உள, சமூகக்காரணிகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய துணை புரிவதாகும்.

பொதுவாக மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்கும் அல்லது பாதிக்கும் காரணிகளை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 

  1. அகக்காரணிகள்:- உடல் குறைபாடு, மந்த புத்தி, தாழ்வுச்சிக்கல், திக்கு வாய், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இழந்திருத்தல் போன்ற விடயங்களைக்குறிப்பிடலாம்.
  2. புறக்காரணிகள்:- ஒரு மாணவனின் ஆளுமையைப்பாதிக்கும் புறக்காரணிகளாக அவனது குடும்பம், பாடசாலை, சமூகம் போன்றவை அமைகின்றன.

 

குடும்ப அங்கத்தவர்களின் பிரிவு, வீட்டு வன்முறை,  பெற்றோர்கவனிப்பின்மை, பெற்றோர்அடக்குமுறை, பெற்றோரிடமிருந்து போதிய அன்பு, ஆதரவு போன்ற வற்றைப்

ஆசிரியரானவர் அம்மாணவனின் உள, சமூக நிலைகளை அறிந்து மாணவர்களின் சீரானஆளுமை வளர்ச்சி பங்காற்ற வேண்டியவராகிறார்.

மேலும் மாணவர்களின் சீரானஆளுமை வளர்ச்சியில் ஆசிரியரனவர் நிலைமாற்றுவகிபாகத்தினூடாக(Transformation) , வளவாளராக (Facilitator) செயற்பட்டு

தொழில்வாண்மை பெற்ற ஆசிரியர்களாகவும் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் மிக முக்கிய தேவையாகும்.

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Wednesday, December 14 2011 15:25 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 446
Last Updated on Wednesday, December 14 2011 17:33  
கட்டுரையினை எழுதியவர்: எம்.ஏ.எம் இஸ்ஹாக்

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,