தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தன்னியக்க தரவு மூலங்கள் (Source Data Automation) - I

E-mail

கணணி என்பது நாம் உள்ளிடும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை வெளியிடும் ஒரு கருவியாகும். இதன்படி நாம் கணணியில் ஒரு வேலையைச் செய்வதாயின் முதலில் அதற்கான தரவுகளை உள்ளிடுவது அவசியமாகும். தரவுகளை உள்ளிடுவதற்காக உள்ளிடு கருவிகள் (Input Devices) கணணியுடன் பொருத்தப்பட்டுள்ளன. நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணணிகளில்...

இவற்றின்மூலம் கணணி தரவுகளைத் தானாகவே பெற்றுக்கொள்ளும். உதாரணமாக கோட்டுக் குறியீடுகளின்மீது அதற்கான கருவியைக் காட்டும்போது அக்குறியீட்டிலுள்ள

கோட்டுக் குறியீடு – Barcode

இன்று சந்தையில் விற்பனைக்குள்ள அனேக பொருட்களில் இக்குறியீடு காணப்படுவதை அவதானித்திருப்பீர்கள். பேரங்காடிகளில் (Super Market) பொருட்களை வாங்கி பணம் செலுத்துவதற்கு காசாளரிடம் வந்தவுடன் அவர் நீங்கள் வாங்கிய பொருட்களை ஒரு கருவியில் காட்டி எடுப்பதை அவதானித்திருப்பீர்கள். இவ்வாறு செய்யும்போது நடப்பது என்ன? காசாளரின் மேசையில் குறியீடுகளை வாசிப்பதற்கான கருவி (Barcode Reader)  பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் வாங்கிய அந்தப் பொருளிலுள்ள குறியீட்டை அவர் அக்கருவியின் முகப்பில் காட்டியவுடன் அக்கருவியிலிருந்து ஊடொலிக் கதிர் (Laser)பாய்கின்றது. அக்கதிரானது குறியீட்டின்மீது பட்டு மீண்டும் வாசிப்புக் கருவியை நோக்கித் தெறிப்படைகின்றது. இதன் உதவியால் அக்கருவியானது குறியீட்டிலுள்ள

இக் குறியீட்டிலுள்ள கோடுகள் குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட பருமனில் காணப்படுகின்றன. குறியீட்டுக் கோடுகளின் ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதற்காக ஒருவித கோடுகளும் ஒவ்வொரு எழுத்து, இலக்கங்களைக்

பயன்படுத்ப்படுகின்றன. அடையாள அட்டை உரிமையாளரின் இலக்கம், பெயர், முகவரி போன்ற பாரிய அளிவிலான தரவுகளை இக்குறியீட்டின் மூலம் சிறிய அளவான பகுதியில் பதியலாம். சில நவீன கைத்தொலைபேசிகளில் இக்குறியீடுகளை வாசிப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

காந்த மையெழுத்து ஏற்பு Magnetic Ink Character Recognition (MICR)

கணணிக்கு தன்னியக்கமாகத் தரவுகளைச் செலுத்தும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றுமொரு முறை காந்த மையெழுத்துக்களாகும். நாம் பயன்படுத்தும் காசோலைகளின் கீழ்ப்பகுதியில் இவ்வெழுத்துக்களை அவதானிக்கலாம்.

இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூலத்தை அதற்கான வாசிப்புக் கருவியில் (MICR Reader) செலுத்தும்போது அதிலுள்ள தரவுகளை கணணி வாசித்தறிந்து கொள்கிறது.

ஏற்படுவதாலேயே அவ்வாறு அறிவுருத்தப் படுகின்றது.

ஒளியியல் எழுத்து ஏற்பு Optical Character Recognition (OCR)

ஆவனங்களிலுள்ள அச்செழுத்துக்கள், கையெழுத்துக்கள், படங்கள் போன்றவற்றை வருடிகள் (Scanner) மூலம் சாதாரணமாக கணணிக்கு உள்ளிடப்படுகின்றன. விஷேடமான சில மென்பொருட்களினூடாக இவற்றை உள்ளிடுவதன்மூலம் இவ் ஆவனங்களை கணணியில் திருத்தக்கூடிய முறையிலான எழுத்துக்கள், வடிவங்களாக மாற்றியமைத்துப் பெறப்படுகின்றன. வருடிகளிலிருந்து வெளியிடப்படும்

அடையாடமிட பரீட்சார்த்திகளுக்குக் கொடுக்கப்படும். பின்னர் அவ்விடைத்தாள்கள் வருடிகள் (Scanners) மூலம் கணணிக்கு உள்ளிடப்பட்டு விஷேட மென்பொருளினூடாக திருத்தப்பட்டு புள்ளிகள் வெளியிடப்படும்.

 

பகுதி 2 ஐ பார்க்க..

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Sunday, June 12 2011 07:39 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 271
Last Updated on Sunday, June 12 2011 08:21  
கட்டுரையினை எழுதியவர்: M.Naleem

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,