தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அபிவிருத்தியும் பெண்களும்

E-mail

அபிவிருத்தி என்பது மக்களின் தெரிவுகளை விரிவுபடுத்தும் ஓர் படிமுறையாகும். ஒவ்வோர் நபர்களினதும் சுய கௌரவம், மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலை, அரசியற் சுதந்திரம் மேலும் மேலதிகமான தெரிவுகளில் உள்ளடங்குகின்றது. அபிவிருத்தியே மக்களுக்கு இத் தெரிவுகளை வழங்குகின்றது(UNDP மனித அபிவிருத்தி அறிக்கை 1990). பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான பிரச்சினைகளில்...

இருபதாண்டுகளை அர்பணித்த Match International  என்ற கனடிய அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள பெண்கள் குழுக்களால் 1988ம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட உலக ரீதியான கணிப்பில் பெண்களின் அபிவிருத்திக்கு பெண்கள் மீதான வன்முறை தடையாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. அபிவிருத்தியும் பெண்களும் தொடர்பான கருத்துக்கள் 1970ம் ஆண்டுகளில் தோற்றம் பெற்றது. Ester Boserup என்பவர் 1970ம் ஆண்டு எழுதிய  நூலில் அபிவிருத்தியும் பெண்களும் தொடர்பான கருத்துக்களை எழுதியுள்ளார். அபிவிருத்தியும் பெண்களும்  தொடர்பான “WID (Women In Development)”  எனும் கோட்பாடும் இக்காலகட்டத்திலேயே தோற்றம் பெற்றது. இக் கோட்பாட்டின் சில திட்டங்கள் ஐ.நா துணைநிறுவனங்களினதும் மூன்றாம் உலக அரசுகளின் செயல்திட்டங்களிலும் செயல்முறையில் வெளிப்பட்டன.

 

சமூக, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்புத் தொடர்பான சர்ச்சைக்குரிய முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு வருவதில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான பத்தாண்டுகள் (United Nations decade for Woman) உதவி புரிந்து வருகின்றது. எனினும் பெண்களை அபிவிருத்தி பணிக்குள் இணைப்பதற்கான பதினைந்தாண்டுகால முயற்சிகளின் பின்னும், அபிவிருத்தி திட்டங்களில் மிகச்சிறு பயனை மட்டும் பெறுபவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், சுகாதார வசதிகளிலும் பெண்களுக்கு சாதகமற்ற நிலையே காணப்படுகின்றது. இருப்பினும் 1975ல் நடைபெற்ற பெண்கள் மாநாடும் அபிவிருத்தியில் பெண்களின் வகிபாகம் பற்றிய சிந்தனைக்கு ஊக்கம் கொடுத்தது.

1950 தொடக்கம் 1960 கள் காலப்பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டது. ஆனாலும் அபிவிருத்தியில் பெண்கள் எங்கே? ஏன்ற கேள்வியை பெண்ணிலைவாதிகள் எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் நோக்கில் “WID (Women In Development)” சிந்தனையின் சில எண்ணக்கருக்கள் வெளிவந்தன. இதில் “கண்ணில் படாத பெண்கள் (Woman Not visible ,not seen) என்ற கருத்து தோன்றியது.

பெண்கள் அபிவிருத்திக்கான பத்தாண்டுகள் திட்டத்தை தொடர்ந்து பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்கான ஆற்றல் மிக்கவளம் என்ற கருத்து ஏற்பட்டது. பெண்கள் கிராமிய பொருளாதாரத்தில் பெறும் பங்கு உற்பத்தியாளர்கள் என்ற நோக்கில் பார்க்கப்பட்டது. உதாரணமாக கைவினைத தொழில்கள், வீட்டுத் தோட்டம் முதலானவற்றை குறிப்பிடலாம். மேலும்“WID (Women In Development)”  சிந்தனையின் கவனம் பெண்களை அபிவிருத்தி செயன்முறைக்குள் கொண்டு வருதல் என்ற கருத்தின் பின் புலத்தில் கடன் சேமிப்பு திட்டங்கள்,பெண்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளில் பயிற்சி அளித்தல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தின.

பெண்களை அபிவிருத்தி பாதையில் இணைக்க பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களை முதன்மைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தொண்டர் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு, சம்பளம் முதலியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பெண்களுக்கு கற்பித்தல், உற்பத்திளாளர்களாக மாற்றுதல், வீட்டு வேலைப்பளுவைக் குறைத்தல் என்பனவும் “WID (Women In Development)” திட்டங்களில் இடம் பெற்றன. பெண்களின் கல்வி, போஷாக்கு, தாய் சேய் நலன், சுகாதாரம் போன்றன அழுத்தம் பெற்றன. ஆண்களை விட பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறையுடையவர்கள் என்றும் றுஐனு WID (Women In Development)”  அணுகுமுறை கருதியது.

அபிவிருத்தியில் மனித முன்னேற்ற அறிக்கையிலேயே இது தொடர்பான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. அநேகமான சமுதாயங்களில் ஆண்களை விட பெண்கள் குறைவான வாய்ப்புக்களையே கொண்டுள்ளனர். குழந்தைகளை பொறுத்தவரை கல்விக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான உணவு, சுகாதார வசதி, கல்வி சில வேளைகளில் இல்லாமலே போய்விடுகின்றது. எனவே அபிவிருத்தி என்பதனை மனிதர்களை மையமாக வைத்து பால் வேறுபாடுகள் இன்றி வெளிப்பட வேண்டும்.

மாறாக அபிவிருத்தி என்பது பெண்களை தனியான சமூகப்பிரிவாக எடுத்து சிறப்பாக அதனை வெளிக்காட்டவேண்டுமாக இருந்தால் இதற்கு அபிவிருத்தி சுட்டிகள், அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் பெண்கள் பயன் பெற வேண்டுமானால் பெண்களின் வளர்ந்துவரும் தன்னம்பிக்கையும், சமுதாயத்தில் எல்லா அம்சங்களிலும் பங்களிப்புச் செய்வதற்கான அவர்களது ஆற்றலும் வலியுறுத்தப்படவேண்டும்.

 

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Thursday, January 06 2011 06:17 இணைத்தவர் Rathees
  • கட்டுரை இல: 248
Last Updated on Saturday, December 24 2011 13:15  
கட்டுரையினை எழுதியவர்: KFasmin

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,