சடங்கு என்பது எமது வாழ்க்கை நடைமுறையுடன்
சம்மந்தப்பட்டது. இதனாலேயே மனித வாழ்வியலில் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ளப்படும் அனைத்து காரியங்களிலும் சடங்கு முக்கியம் பெறுகின்றது. இவை ஒரு குறிப்பிட்ட நியமத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. சடங்குகள் என்பது சிரத்தைக்குரிய வாழ்வில் குறியீட்டளவில் உந்துதலைப் பெற அல்லது நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளப் பொருத்தமான நடைமுறைகளுடன்...
தன்னார்வமாக நிகழ்த்தும் ஒரு நிகழ்வாகும் என “Rothan poolar” எனும் அறிஞர் குறிப்பிடுகிறார். சடங்குகள் என்பன அடிப்படையில் புனிதம், தொடக்கு, தீட்டு என்பவற்றின் அடிப்படையில் நாம் காணலாம். சமயம் தோன்றிய காலத்திலேயே சடங்குகளும் தோற்றம் பெற்றன. இதேபோல் சடங்குகளின் அடிப்படையில் சமய வாழ்வினுடைய “பிரபஞ்சத்தின் ஒழுங்கு” நிலைநிறுத்தப்படுகின்றது எனவும் இவ் ஒழுங்கமைவானது அகப்புறச்சூழல்களால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது மீள சமனிலைபடுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் சமூக ஒழுங்கு நிலைநிறுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சடங்குகள் பல வகைப்படுகின்றன. உதாரணமாக ஈமச்சடங்குகள், திருமணச்சடங்குகள், வேளாண்மைச் சடங்குகள், போர்க்கால சடங்குகள், சமயச் சடங்குகள் போன்ற பல தரப்பட்ட சடங்குகள் சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுகாணப்படுகின்றது
சடங்குகளின் தன்மைகளை விரிவாக ஆராய்ந்த ரொனால்ட் கிரிம்ஸ் “சடங்கு ஆய்வுகளின் தொடக்கம் (Beginnings in Ritual studies)” என்னும் ஆய்வில் சடங்குகளை பின்வருமாறு இரண்டாகப் பிரிக்கின்றார்.
01. நிலைப்படுத்தும் சடங்கு (confirmatory rituals)
02. நிலைமாற்றும் சடங்கு (transformatory rituals)
சடங்குகளின் இயங்கியல் தன்மையில் விலங்குகளை மையமிட்ட எதிர்நிலைச் சடங்குகளை இவர் நிலைப்படுத்தும் சடங்கு (confirmatory rituals) என்கின்றார். சமூக
பண்பாட்டு வாழ்வில் மக்களை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றும் சடங்குகள் நிலைமாற்றும் சடங்கு (transformatory rituals) ஆகும்.
சடங்குகளின் தன்மைகள் பன்முகப்பட்டவை.அவை நிகழ்தப்படும் காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணிகளை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. பண்பாடுகளுக்கிடையில் நிகழும் சடங்குகளை ஒப்பிட்டு ஆராயும் போது அவற்றுக்கிடையில் பொதுதன்மைகள் காணப்பட்டாலும் ஒவ்வொரு சமூகத்தின் சடங்குகளும் தனித்தன்மைகளை கொண்டிருக்கின்றன. சடங்குகள் தனித்தன்மைகளை ஒருபுறமும், பொதுத்தன்மைகளை மறுபுறமும் கொண்டிருப்பினும் அவற்றின் பொது இயல்புகள் பின்வருமாறு அமைகின்றன.
01. செயல் சார்ந்தது.
02. நிகழ்த்துதல் சார்ந்தது.
03. நனவு சார்ந்தது, தன்னார்வம் சார்ந்தது.
04. கருவி சாராதது, பகுத்தறிவற்றது.
05. பொழுதுபோக்கு தன்மை கொண்டதன்று.
06. கூட்டுதன்மை வாய்ந்தது, சமூகஞ்சார்ந்தது.
07. சமூக உறவுகளை வெளிப்படுத்துபவை.
08. புனைவுக்குரியது, கட்டுவதல்ல.
09. முனைப்பான குறியீடுகள.;
10. உறைந்த குறியீடுகள்.
11. வெளிப்பாட்டு நடத்தை சார்ந்தது, அழகியல் சார்ந்தது, அழகியல் மிகுதன்மை சார்ந்தது.
12. திரும்பத் திரும்ப நிகழ்வது.
13. புனிதத்துடன் தொடர்புடையது.
எனவே பல்வேறுபட்ட தன்மைகள் காணப்பட்டாலும் இன்று பரவலாகப் பயன்படும் ஒரு வரையறை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Monday, January 03 2011 10:43 இணைத்தவர் Rathees
- கட்டுரை இல: 247













