.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முரண்பாடுகளின் தோற்றுவாயும் அதன் வடிவமும்

E-mail

முரண்பாடு என்ற விடயமானது எல்லோருக்கும் பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன. இதனை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொள்ள முடியும். வீடுகளாக இருக்கட்டும், அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும் ஏன் நாட்டின் நிர்வாகத்திலாக இருக்கட்டும் இவ்வனைத்திலும் ஏதோ ஒரு வகையில் முரண்பாடுகள் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே...

 

இருக்கின்றன. முரண்பாடுகள் கட்டாயமாக தீமையானது என்பதல்ல. மாற்றுக்  கருத்துக்களில் இருந்து முரண்பாடுகள் தோன்றுகின்றன. இரு நபர் ஒருவிடயத்தை இருகோணங்களில் பார்ப்பார்களானால் நிச்சயமாக அங்கு முரண்பாடு ஏற்படத் துவங்கிவிடும். இவ்வுடன்பாடின்மை சாதாரனமானவையே. மக்களின் மத்தியில் இருக்கின்ற வித்தியாசமான கலாசார பின்னணிகள், சூழல் காரணிகள், மக்களின் வேறுபட்ட அபிலாசைகள், அரசியல் சமயக் காரணிகள், மற்றும் மாறுபட்ட தொடர்பாடல் முறைகள் இம் முரண்பாடுகளிடையே செல்வாக்குச் செலுத்துகின்றன.

உண்மையில் முரண்பாடானது அபிப்பிராயங்கள் அல்லது கருத்துக்கள் அல்லது சிந்தனைகள் வேறுபடுவதனாலேயே எழுகின்றது. இம்முரண்பாடுகளை சிலர் நேர் மறையாக நோக்குகின்றனர், மற்றும் சிலர் எதிர்மறையாகவே நோக்குகின்றனர்  மற்றுமொரு பகுதியினர் முரண்பாட்டை போட்டியாகவும் சவாலாகவும் அல்லது மாற்றமானதொன்றாகவும்; நோக்குகின்றனர். 

முரண்பாடு என்பது சம்பந்தப்பட்ட மக்களின் போக்குகளையும் நடத்தைகளையும் பொறுத்து வேறுபடுகின்றது. அது உடன்பாடானதாக அல்லது எதிர்மறையானதாக மாற்றப்படுவதென்பது அம்முரண்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதிலேயே தங்கியுள்ளது. நாம் அன்றாடம் சந்திக்கின்ற முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு அது சம்பந்தமான மக்களின் போக்குகளை அல்லது நடத்தையை அவதானிப்பது மாத்திரம் போதாது  அதற்கு அப்பால் சென்று அம்முரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரதும் நோக்கங்களை அவதானிக்க வேண்டும்.

முரண்பாடுகளைக் குறைப்பதற்கு அல்லது அதற்குத் தீர்வு காண்பதற்கு தொடர்பாடல் இன்றியமையாததாகும். மேலும் அவ்வாறான முரன்பாடுகளை தீர்க்க பரஸ்பர புறிந்துணர்வு இன்றியமையாதது


முரண்பாடுகள் ஏற்படுமிடத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு வகையான உத்திகள் கையாளப்படுகின்றன.

 

  • முரண்பாடுகள் ஏற்படாது தவிர்த்தல்.
  • முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு உடன்பாட்டுக்கு வருதல்.
  • முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருந்தால்.
  • முரண்பாட்டுக்கு உரியவருக்கு இடமளித்து வாய்ப்பை வழங்கதல்.
  • முரண்பாடுகள் ஏற்படுவதனைத் தவிர்ப்பதற்கு  கூட்டச் செயற்பாட்டுக்கு முன்வருதல்.


நாங்கள் ஒவ்வொரு பிணக்குகளைக் கையாண்டு தீர்வுகாண்பதற்கு பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றோம். ஒரு முரண்பாட்டுக்கு அல்லது பிணக்குக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வழி அம்முரண்பாடு அல்லது பிணக்கு எவ்வகையானது என்பதிலேயே தங்கியுள்ளது. அநேகமான முரண்பாடுகள் தப்பபிப்பிரயாயத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன.

நாங்கள் சேர்ந்து வாழக்கூடிய சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதவொன்று. இத்தகைய சந்தர்ப்பத்தில் அதிகமான விட்டுக்கொடுப்புக்களும், பரஸ்பரப் புரிந்துணர்வும், உடன்பாடுகளும் அவசியப்படுகின்றன. மேலும் முரண்பாடான நபர்களுக்கிடையேயோ அல்லது குழுக்களுக்கிடையோ முரண்பாட்டுக்கான தீர்வைக் காணமுயலும் போது இருதரப்பினரும் திருப்தியடையக் கூடியதும் வெற்றி பெறக் கூடியதுமான வழிமுறையொன்றை தேடிப்பெற்றுக் கொள்வதே முக்கியமானதாகும்.

 

இதற்கென பிரத்திகரமான வழிமுறைகள் தேவையில்லை. அதாவது நாம் ஏனையோருடன் மேற்கொள்கின்ற பரஸ்பர சந்திப்புக்களின் போதும் தப்பபிப்பிராயம் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் பல முரண்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இயன்றளவு முரண்பாடுகளைக் குறைக்க வேண்டுமானால் நாம் இவ்வொருவரும்  வாழும்  சூழலுக்கேற்ப இயைபாக்கம் அடைவது இன்றியமையாததாகும்.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 1817
  • இணைக்கப்பட்டது: Friday, September 03 2010 15:36 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 242
Last Updated on Friday, September 03 2010 16:34  
கட்டுரையினை எழுதியவர்: முன்ஸிப் பரீட்

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1288
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2789
mod_vvisit_counterThis month7409
mod_vvisit_counterAll644887

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.