தொழில்வாண்மை உளவளத்துணையும்
ஏனைய கலைகளைப் போன்று பல்வேறு துறைகள், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு தொழில் வாண்மை உளவளத்துணையாளர் பொதுவாக அனைத்து துறைகளைப் பற்றியும் சாதாரண தெளிவுடன் இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியும் விஷேட அறிவும் பெற்றவராக இருக்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான..
சிறப்பியல்புகளும் பண்புகளும் காணப்படும். எனவே அவற்றில் சில முக்கியமான துறைகள் அல்லது பிரிவுகளை இங்கு நோக்குவோம்.
01. உளவியல் உளவளத்துணை (Psychological counseling)
இதனை தனிநபர் உளவளத்துணை (Individual counseling) எனவும் கூறமுடியும். அதாவது, ஒருவர் குடும்ப மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது குடும்ப, சமூக, தொடர்பாடல் திறன்கள் குன்றியும், தொழிலின்மை, தொழில் திருப்தியின்மை, போஷாக்கின்மை, சமூகப் புறக்கணிப்பு, சமநிலையற்ற மனவெழுச்சிகள் போன்ற பல்வேறு சமூகப்பிரச்சினைகளாலும் உள நெருக்கீடுகள், பதகளிப்பு, மனச்சோர்வு மற்றும் மெய்ப்பாட்டுக்கோளாறுகள் போன்ற பல்வேறு உளக்கோளாறுகளுக்கு உட்படுகின்றான்.
இதன்மூலம் தனது உளவியல் தேவைகளை சரியாகப் பூர்த்தி செய்வதுடன் சிறந்ததோர் வாழ்க்கையையும் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.
02. கல்வி உளவளத்துணை (Educational counseling)
கல்வி உளவளத்துணை உளவளத்துணையில் ஒரு முக்கிய பிரிவாக கருதப்படுகின்றது. கற்றல், கற்பித்தல், நடவடிக்கைகளின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள், சிக்கல்களுக்கு உளவியலுக்குப் பொருத்தமான முறையில் தீர்வுகளைத்தேடுவதும்
உளவளத்துணையை வழங்குவது கஷ்டமானதாகும். எனவே இது ஆசிரியர், பெற்றோர் தொடர்பை மையாமாகக் கொண்டதாகவே அமையும். மேலும் இங்கு குழு உளவளத்துணை முறையே வினைத்திறன் மிக்கதாகவும் அமையும்.
ii. ஆரம்பக் கல்வி உளவளத்துணை (Primary educational counseling)
பாடசாலையில் ஆண்டு 01 முதல் 05 வரை கல்வி கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்டதாக இது அமையும். இக்காலப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவும். இங்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் சிறந்த உறவின் மூலம் அதிகமான பிரச்சினைகளைக் குறைக்க
iv. மூன்றாம் நிலைக்கல்வி உளவளத்துணை (Tertiary Educational counseling)
இது பல்கலைக்கழகங்கள், கல்வியியற்கல்லூரிகள், தொழிநுற்பக்கல்லூரிகள் போன்ற பல்வேறு உயர்கல்வி, தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இடம்பெறும் உளவளத்துணைச்
பிரச்சினைகள், புலனுறுப்புக்களில் காணப்படும் குறைபாடுகள் தமது திறன் இயல்புக்கேற்ற வகையில் பாடங்களை தெரிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான நிலைமைகளின் போது மாணவர்களுக்கு சிறந்த கற்கும் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதோடு அவர்களில் காணப்படும் வாசிப்புத்திறன், செவிமடுக்கும் திறன், எழுத்துத்திறன், ஞாபகம் வைத்திருக்கும் திறன், குறிப்பெடுக்கும் திறன், பாடங்களை ஒழுங்கு படுத்திக்கற்கும் திறன் போன்றவற்றை விருத்தி செய்து பரீட்சைபற்றிக் காணப்படும் பதகளிப்பு நிலையையும் நீக்கி கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு உதவும் நடவடிக்கைகளையே குடும்ப உளவளத்துணை என அழைக்கின்றோம். இந்தவகையில் குடும்ப உளவளத்துணையை மூன்று பிரிவுகளாக நோக்கலாம்.
i. திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை (Pre marital counseling)
திருமணம் முடிப்பதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகளை திருமணத்தின் பின்னர் கணவன் அல்லது மனைவி என்ற நிலையில் வைத்து தமது பொறுப்புக்களையும், கடமைகளையும் ஏற்று நடப்பதற்கு தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பொதுவாக இளைஞர் யுவதிகள் தற்போது பௌதீகரீதியான கவர்ச்சிகளை மையமாகக்கொண்ட திருமண வாழ்க்கையையே பெரிதும் விரும்பி ஆரம்பிக்கின்றனர். அதாவது திருமணம் நடக்கும் திகதி, இடம், ஆடைகள், அலங்கார வேலைப்பாடுகள்,
மனைவியும் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக மேற்கொள்வதற்கு அவர்களை உடல், உள ரீதியாக தயார்படுத்துகின்றது.
ii. திருமண உளவளத்துணை (Marital and couple counseling)
திருமணத்தின் பின்னர் கணவன் மனைவியாக வாழ்க்கை நடாத்தும்போது வாழ்க்கைத்துணையின் தேவைகள், கடமைகள், உணர்வுகள், மனவெழுச்சிகள், திறமைகள், பலவீனங்கள் பேன்றவற்றை புரிந்துகொள்ளாதபோது ஏற்படுகின்ற
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளால் தற்போது குடும்ப ஒழுங்கு கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதைக் காணலாம். பொதுவாக உளவளத்துணை மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னர்
04. தொழில் உளவளத்துணை (Career counseling)
தொழில்சார்ந்த விடயங்களை அவதானிக்கும்போது தொழில் வழிகாட்டல், தொழில் உளவளத்துணை என்ற இரு பகுதிகளைக் காணலாம். அதாவது தனது இயல்புக்கும் தகுதிக்கும் ஏற்ற தொழிலொன்றை தெரிவு செய்தல், அத்தொழிலுக்குத் தேவையான திறன்களை விருத்தி செய்தல், அதன் எதிர்கால சவால்களை விளங்கிவைத்திருத்தல் போன்றவற்றிற்கு உதவுவதை தொழில் வழிகாட்டல் (Career guidance) எனலாம்.
ஒருவர் தான் தேர்ந்தெடுத்த தொழில் நடவடிக்கைகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளான தொழில் திருப்தியின்மை, கடும்போக்குடைய முகாமைத்துவம்
மேற்கொள்வதற்கு உதவுகின்ற செயற்பாடுகளை தொழில் உளவளத்துணை (Career counseling) என அழைக்கப்படும்.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Monday, June 06 2011 09:42 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 261













