| Article Index |
|---|
| உளவளத்துறையும் அதன் கடமைப் பரப்பும் (Counseling) |
| பகுதி - 2 |
| All Pages |
ஒரு மனிதன் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைககளில்
ஈடுபடுகின்றபோது அவன் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்கின்றான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவற்றிற்கு தன்னம்பிக்கையோடு முகங்கொடுத்து வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் அதன் மூலம் மனத்தாக்கங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தமது வாழ்க்கை நடவடிக்கைகளை ...
i. பதவிளக்கம்
ஒருவருக்கு ஏற்படுகின்ற உளவியல் சார்ந்த பிரச்சினை சிக்கல்களுக்கு உதவுகின்ற செயற்பாட்டிற்கு ஆங்கிலத்தில் counselling எனக் கூறப்படுகின்றது. இதனைத் தமிழ்
பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் இலங்கையிலும் “உளவளத்துணை” என்ற சொற் பிரயோகமும் பயன்படுத்தப்பட்டு வருவதை
அவதானிக்க முடியும். இதனடிப்படையில் மேற் குறிப்பிடப்பட்ட சொற்பிரயோகங்களில் “உளவளத்துணை” என்ற பதமே மிகப்பொருத்தமாகும். ஏனெனில் உளவளத்துணை செயற்பாடானது உள்ளத்தை வளப்படுத்துகின்ற ஓர் கலையாக அமைவதோடு ஒரு மனிதனின் புதைந்து கிடக்கின்ற உள்ளார்ந்த வளங்களையும் திறன்களையும் வெளிக்கொணரும் ஒரு முறையாகவும் காணப்படுவதால் இச்சொற்பதமே மிகப்பொருத்தமெனக் கருதி இன்நூலில் உளவளத்துணை என்ற சொல்லையே நான் பயன்படுத்தியுள்ளேன்.
ii. வரைவிளக்கணம்
உளவியல் சார் அறிஞர்கள் சிலரது வரைவிலக்கணங்களையும் நோக்குவது மிகவும் பொருத்தமாகும்.
- "உளவளத்துணை என்பதுவாழ்க்கையை சீரமைத்துக்கொள்வதற்கு ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது அதற்குத் தகுதியுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவி, வழிகாட்டல்” (குரோவும் குரோவும்)
- "உளவளத்துணை என்பது சக்தியைப் பெற்றுக்கொடுக்கும் நடடிவடிக்கை ஒன்றாகும் (எனிஜோன்ஸ்)
- “Counseling is initiated in the people face a problem the S/ he feel in adequate to handle without the assistance from a professionals or helping person.” (Marjore’s note book)
- “counseling is the art of helping basically healthy people work through the normal developmental issues, decisions, problems and even crises that come to all of us in life” (Judy harrow)
மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் வரைவிலக்கணங்களிலிருந்து உளவளத்துணையை பின்வருமாறு வரைவிலக்கணப்படுபத்தலாம்.
மேற்குறித்த வரைவிலக்கணத்திற்கு ஏற்ப உளவளத்துணை செயற்பாட்டின் போது பின்வரும் முக்கிய விடயங்களை அவதானிக்க முடியும்;.
1. உளவயில் ரீதியான பிரச்சினையாக இருத்தல்
2. உளவியல் முறைகளைப் பயன்படுத்தல்
3. சேவை நாடியின் உள்ளார்ந்த அல்லது ஆத்ம சக்தியை வெளிக்கொணர்தல்.
4. நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்தல்
சிந்தனையோடு பேசுகின்றதொரு கலையாகும். எனவே இச்செயற்பாட்டின் போது உளவளத்துணையாளர் (counsellor), சேவை நாடி அல்லது துணைநாடி (client) என்ற இரு பிரிவினரைக்காண முடியும்.
iii. உளவளத்துணையாளர்
(counsellor)
உளவளத்துணையாளர் பல்வேறு துணைசார்ந்த பொதுவான அடிப்படை அறிவைப்பெற்றவராக இருப்பதோடு உளவியல் சார்ந்த அறிவைப்பெற்றிருப்பதும் மிகவும் அவசியமாகும். அதேபோன்று உளவளத்துணைச் செயற்பாட்டிற்குத்
புரிந்து நடத்தல், ஆன்மீக ஈடுபாடு போன்ற பண்புகளைக் கொண்டவராகவும், பிறருடைய அந்தரங்க உலகிற்குள் புகுந்து அவரது பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் ஒர் உதவியாளராவார்.













