தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளச்சுகாதாரமும் அதன் அடிப்படைகளும்

E-mail

உளச்சுகாதாரம் (Mental health): நன்னிலை (Well Being) என்பதற்கு நாம் சுகம், நலம், ஆரோக்கியம் போன்ற சொற்களை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் அதிகமாக உடல் சார்ந்த விடயங்களையே கருத்திற்கொள்கின்றோம். ஆனால் இப்பிரயோகம் அதனை விட மிகப்பரந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றது. ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலிருந்தும் விடுபட்ட நிலை மாத்திரமல்ல...

மாறாக ஒருவர்  தன் உடல், உள, சமூக, ஆத்மீகம் சார்ந்து அடையக்கூடிய அதியுயர்ந்த நன்னிலையே ஆரோக்கியமாகும். இது மனிதனது பிறப்புரிமைகளில் ஒன்றாகும்.

உடல் சார்ந்த நன்னிலை என்னும்போது நிறையுணவு, சுறுசுறுப்பு, வயதிற்கேற்ற தோற்றம், நிறை, ஓய்வு, நோயற்ற நிலமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவ்வாறே உளம் சார் நன்னிலை எனும்போது மகிழ்ச்சி, அன்பு, பாசம், நம்பிக்கை, பாதுகாப்புணர்வு என்பனவற்றைக் குறிப்பிடலாம். சமூகம் சார் நன்னி;லை எனும்போது புரிந்துணர்வு, ஒற்றுமை, சமாதானம், நல்லுறவு, விட்டுக்கொடுப்பு, உதவிசெய்தல், ஒருவரையொருவர் மதித்தலைக் குறிப்பிடலாம்.

அவ்வாறே ஆத்மீகம் சார் நன்னிலை எனும்போது இறைபக்தி, ஒழுக்கம், கருணை, நன்னடத்தை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கிடையில் காணப்படும் சமநிலையான போக்கையே முழுமையான நன்னிலை (collective well being) எனக்குறிப்பிடலாம். எனவே நன்னிலை எனும்போது திருப்தியானதும், ஆறுதலானதுமான ஒரு நிலையைக் குறிக்கின்றது. எனவே தன்னைப்பற்றிய ஒரு திருப்தியும் ஆறுதலும் அடைதலையே நன்னிலை என வரையறுக்கலாம்.

இவ் நன்னிலையையே உளநலம் என குறிப்பிடலாம். ஒருவரது உடல் தொழில்பாட்டில் உடலியல், சமூக, உள, உணர்வு. கலாசார உலகியல் பரிமாணங்களின் விளைவாக ஏற்படும் உணர்வு ரீதியானதும் உறவு ரீதியானதுமான ஒரு நிலையைக் குறிக்கின்றது.

இங்கு உணர்வு ரீதியான மனோபாவங்களும் வேறுபாடுகளும் மனித வாழ்வில் சமமாக இருக்கும் அதேவேளை தனி நபரது உள நலனுக்கு உணர்வு ரீதியான மீள் திறன் (resilience) திருப்தி, பாதுகாப்புணர்வு, நம்பிக்கை என்பன அவசியமாகும். மேலும் அன்பு காட்டலும், அன்பு காட்டப்படுகின்றோம் என்ற உணர்வும் மிகவும் முக்கியமாகும்.

உள நலத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

இக்காரணிகளை நான்கு வகைகளாக வகுக்கலாம்

 

1. உயிரியல் ரீதியான காரணிகள்

 

 

2. சமூகம் சார் காரணிகள்

 

 

3. உளவியல் சார் காரணிகள்

 

 

4. ஆன்மீகம் சார் காரணிகள்

 

  • இறைநம்பிக்கையும் செயற்பாடுகளும்
  • மார்க்க விழுமியங்கள்
  • குடும்ப கலாசார பின்னணிகள்
  • சுய விழிப்புணர்வு
  • பொறுப்புக்களும் கடமைகளும்

 

உளநலக்குறைபாட்டின் அடையாளங்கள்


1. காரணமின்றி அடிக்கடி அழுதல்

2. நித்திரை குறைவு அல்லது குழப்ப நிலை

3. பயங்கரக் கனவு

4. அளவுக்கு மீறிய பதட்டம், நடுக்கம், பயம் மற்றும் கவலை

5. உணவு உற்கொள்வதில் பிரச்சினை

6. முரண்பாட்டு நிலைமை

7. கடுமையான களைப்பு

8. உளநெருக்கீடு

9. ஓய்வின்மையும், அமைதியின்மையும்

10. சமநிலையற்ற மனவெழுச்சி

11. குணப்படுத்த முடியாத நோய்கள்

12. படுக்கையை நனைத்தல்

13. காரணமின்றிய தலைவலி, முதுகுவலி, வயிற்றுக்கோளாறுகள், மூட்டுவலி போன்ற மெய்ப்பாட்டு அறிகுறிகள் காணப்படுதல்

14. அதிகமாக ஒதுங்கி தனிமையில் இருத்தல்

15. மனதை ஒருமுகப்படுத்த முடியாமை

16. தன்னிலும் பிறரிலும் நம்பிக்கையற்ற நிலை

17. ஞாபகக் குறைவு

18. பரீட்சை பற்றிய பயம்

19. எதிர்மாறான சிந்தனைப்போக்கு

20. ஒரு வேலையை பூரணப்படுத்த முடியாமை

21. தொடர்ச்சியான சோம்பல், சுறுசுறுப்பின்மை

22. அளவுக்கு மீறிய எதிர்காலம் பற்றிய பயம்

23. எதிலும் உளத்திருப்தியின்மை

24. உளக்குறைபாடுகள்

25. மற்றவர்களில் தங்கி வாழ்தல்

 

சில உளநலத்தின் சில அடையாளங்கள்

 

1. சந்தோஷமான நிலை

2. பதட்டம், ஒழுக்கமற்ற அமைதியான நிலை

3. சமநிலையான மனவெழுச்சி

4. சிறந்தமுறையில் உறவுகளைப் பேணுதல்

5. ஒத்துப்போகும் தன்மை, முரண்பாடற்ற தன்மை

6. ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடித்தல்

7. சிறந்த கிரகித்தல் திறன்

8. சுயாதீனமாகச் செயற்படல்

9. நேர்க்கணிய சிந்தனை

10. சுறுசுறுப்பான நிலை

11. கடமையை சிறந்த முறையில் நிறைவேற்றுதல்;

12. சிறந்த ஞாபக சக்தி

13. தன்னில் அக்கரையுள்ளவராக இருத்தல்

14. விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபடல்

15. புதியவற்றை தேடிக்கற்கும் ஆற்றல் காணப்படுதல

தொடரும்...

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Friday, February 11 2011 10:04 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 251
Last Updated on Friday, February 11 2011 10:50  
கட்டுரையினை எழுதியவர்: NBA NIKSHAN

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,