.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Message
  • You must log in first

எரிமலை நிலவுருவங்கள்

E-mail

புவியோட்டின் நொய்தலான பகுதிகள் ஊடாக பல்வேறுபட்ட அகவிசையின் து}ண்டல்கள் காரணமாக வெளித்தள்ளும் மக்மா வெளியேறும் பகுதிகளை பொதுவாக எரிமலைகள் என்று அழைக்கின்யோம். சாதாரணமாக எரிமலைகள் தோன்றுவதற்கு புவியோடு மெல்லிய தடிப்புடையதாக மட்டும் இருந்தால் போதும் எனக் கொள்ள முடியாது    அங்கே அகவிசைக்காரணிகளும் செயற்படும் தருணங்களிலையே எரிமலைக் கக்குகைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எரிமலைச்செயற்பாடனது புவிமேற்பரப்பில் எவ்வகையான் நிலவுருவங்களை ஆக்கியுள்ளது என ஆராய்வோம். எரிமலைகளை அவற்றின் வெளிக்கிளம்பும் மக்மாவின்...

வடிவத்தினைக்கொண்டு இரண்டுவகையினதாக பிரித்து நோக்குகின்றது இப்பகுதி.


3.1 துளை எரிமலைக் கக்குகைகளும் நிலவுருவங்களின் உருவாக்கமும்


பெரும்பாலான கண்டங்கின் எரிமலைகள் உள்ளடங்கலாக சமுத்திர எரிமலைகள் சிலவும் துளை வழியே எரிமலைக்குழம்பான மக்மாவினைக் கக்குவனவாக இருக்கின்றன.


இவற்றில் அதிகமான எரிமலைகள் குன்றுகள் மேல் அமைந்து கிடக்கின்றன. இவ்வாறான எரிமலைகள் பல்வகைப்பட்ட நிலவுருவங்களை ஆக்குவதில் துணைபோகின்றன். அவ்வாறான நிலவுருவங்கள் பற்றி தொடர்ந்து நோக்குவோம்.


3.1.1 எரிமலைக்குன்றுகள்


குறிப்பிட்ட துளைகள் வழியாகத் தொர்ந்து கக்குகைகள் நடைபெறும்போது அவை வளர்ச்சியடைந்து பாரிய எரிமலைக்குன்று நிலவுருவங்களை தோற்றுவிப்பனவாக உள்ளன. உலகின் அதிகமான எரிமலைகள் குன்றுகளை ஆக்கியுள்ளன. வெளித்தள்ளப்படும் மக்மாவானது குன்றுகளின் மேல் வழிந்தோடி இறுக்கம் அடைவதினால் இவ்வகைப்பட்ட எரிமலைக்குன்றுகளின் வளர்ச்சியானது தொடர்ந்து சாத்தியமாகின்றது. இக்குன்றுகளின் மேற்புறமாக அமைந்து கிடக்கின்ற அகன்ற எரிமலை வாய்கள் இவற்றினை ஒரு எரிமலைக் குன்று என்பதினை பறைசாற்றிய வண்ணம் இருக்கும்;. (படம்-8 ஐ பார்க்க) புவியின் அகவிசை காரணமாகத் தோன்றிய எரிமலைச்செயற்பாடு காரணமாகத் தோன்றிய இவ்வகையினதான நிலவுருவங்கள் புவிமேற்பரப்பில் அதிகமாக காணப்படுகின்றன.


3.1.2 எரிமலைத்தீவுகள்


சமுத்திரத்திரங்களின் மத்தியில் ஏற்படுகின்ற தகடுகளின் விலகலானது அங்கு பாரிய நீண்ட சமுத்திர மலைத்தொடர்களை ஆக்கியுள்ளன. அவற்றின் மீது தொடர்ந்து நடைபெறுகின்ற துளை எரிமலைக் கக்குகைள்; சமுத்திரமட்டத்தினையும்
தாண்டி மேல்த்தெரிய ஆரம்பிக்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் அப்பாரிய சமுத்திரங்களின் மத்தியிலும் தென்படும் இச்சிறிய தீவுகளை எரிமலைத்தீவுகள் என அழைக்கமுடியும். சில சமயங்களில் இவை பல கூடிக்காணப்படும் போது அவற்றினை தீவுக்கூட்டங்கள் என அழைக்கின்றோம். ஹவாய்த் தீவுகள் இவ்வகையினைச் சார்ந்தவையே எனப்படுகின்றன. இவையும் குறிப்பிடக் கூடிய அகவிசையுடன் தொடர்புடைய நிலவுருவங்களே. படம்-19 ஹவாய் தீவுக் கூட்டங்களின் தன்மையினை காட்டுகின்றது.


{mospagebreak} 3.1.3 எரிமலை வாய்கள்


துளை எரிமலைகள் செயற்படுகின்ற தன்மையைப் பொறுத்து அவற்றின் மக்மாவினை வெளித்தள்ளும் துளைகள் அமைந்திருக்கின்றன. இத்துளைகளையே நாம் எரிமலைவாய்கள் என்கின்றோம் இவை சில எரிமலைக்குன்றுகளில் மத்திம எரிமலை வாயினைச் சூழ்ந்து பக்க வாய்கள் பலவற்;றினைவும் கொன்டு
காணப்படும். துளை எரிமலைகளின் உறங்கு காலங்களில் இவ்வெரிமலை வாய்களை தெளிவாக அவதானிக்க முடியும். (படம்-20 ஐ பார்க்க) சிற்சில சமயங்களில் எரிமலைகளின் பிரதான வாய்கள் அடைக்கப்படும் போது பக்க வாய்கள் பலவற்றினை ஏற்படுத்திய வண்ணம் எரிமலை குமுறுவதும் உண்டு அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ் எரிமலை பல எரிமலை வாய்களைக் கொண்டிருக்கலாம்.(படம்-21 ஐ பார்க்க)


3.1.4 எரிமலை ஏரிகள்


இதற்கு முன்னைய பகுதியில் குறிப்பிட்ட எரிமலை வாய்கள் என்ற நிலத் தோற்றங்கள் எரிமலைகளின் உறங்கு காலங்களில் நீர் தேங்கப் பெறுவதினால் எரிமலை ஏரிகள் தோற்றம் பெறுகின்றன. இவை உயரமான எரிமலைக் குன்றுகளின் உச்சிகளில் அமைந்து காணப்படுகின்றன.


3.2 பிளவுக் கக்குகைகளும் வேறுபட்ட நிலவுருவங்களளும்


தகட்டோட்டங்களின் விலகல் செயற்பாட்டுடன் பெரிதும் இயைந்தே நடக்கின்ற இவ்வகையினதான கக்குகைகள் பாரிய வெடிப்புக்கள் ஊடாக மக்மா வெளிக்கிளம்புதலைக் குறிக்கின்றன. என்றும் பாரிய அளவில் இடம்பெறுவதனால் இத்தகைய எரிமலைக்கக்குகைகள் மெதுவாகச் செயற்படுகின்றன.சமுத்திர ஓடுகளின் மத்தியில் நடைபெறும் தகடுகளின் விலகலின் போது வெளிக்கிளம்பும் மக்மாவானது மெதுவாக இருபக்கமும் பரவுகின்றமையை நாம் காணலாம். ஆனால் கண்ட ஓடுகளில் இவ்வகையினதான கக்குகைகள்


நடைபெறும் போது பல்வகையினதான நிலவுருவங்கள் தோன்றுவதோடு அவை பாரிய அழிவுகளையும் ஏற்படுத்துகின்றன. பிளவுக்கக்குகைகள் தோற்றுவிப்பதாகக் கருதப்படும் இரண்டு வேறுபட்ட நிலவுருவங்கள் தொடர்பாகத் தொடர்ந்து ஆராய்வோம்.


3.2.1 மேட்டு நிலங்களின் உருவாக்கம்


பிளவுகளின் வளியாக வெளிக்கிளம்பும் இவ்வாறான கக்குகைககள் பல கிலோமீற்றர்கள் வழிந்தோடிப்பரவுகின்றன. இவை இவ்வாறு ஓடிப்பரவுகின்ற போது மேட்டு நிலங்கள் தோற்றம் பெறுகின்றன. இவை இன்று புவியின் நிலவுறுப்புக்கள் தொடர்பான ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளன. அவ்வகையில் அமைந்த ஒரு நிலத்தோற்றமே இந்நியக்கண்டத்தின் தக்கண மேட்டு நிலம் எனக் கொள்ளப்படுகின்றன.


3.2.2 சமுத்திர மத்திய மலைத்தொடர்கள்


இன்று சமுத்திரத்தியில் காணப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் நீளம் கொன்ட சமுத்திரமலைத்தொடர்களின் உருவாக்கமும் பிளவுக்கக்குகைகளுடன் தொடர்பு படுத்தியே ஆராயப்படுகின்றன. சமுத்திரங்களின் மத்தியில் காணப்படுகின்ற விலகும் தகடுகளின் இடைவெளியூடாக வெளியேறும் மக்மாவின் தொடர் படிவானது அங்கு தொடர்மலைகளின் தோற்றத்திற்குச் சாத்தியமாகின்றது. படம்-22 சமுத்திரமத்திய மலைத்தொடர்களின் உருவாக்கத்தினை எடுத்துக் காட்டுகின்றன.


{mospagebreak} 3.3 பாதளப்பாறைகளின் உருவாக்கம்


புவி மேற்பரப்பினை நோக்கி பல்வேறு அமுக்க அகவிசைகளின் காரணமாக வெளியேறுகின்ற மக்மாவானது எப்பொழுதுமே புவிமேறபரப்பினை வந்தடைவதில்லை மாறாக சிலவேளைகளில் மேற்பரப்புப் பாறைப்படைகளின் கீழ் நின்று விடுகின்றன.


அங்கே அவை தமது அதி உயர் வெப்பத்தினை இழப்பதன் காரணமாக மெது மெதுவாக இறுகி திண்ம நிலையினை அடைகின்றன. எனினும் புவி மேற்பரப்புப் பாறைகளைக் காட்டிலும் முற்றிலும் பளிங்குருவாக்கப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தீப்பாறைகளின் பிறிதொரு வகையான இவ்வகையான பாறைகளை பாதாளப்பாறைகள் என அழைக்கின்றனர். இவை நடைபெறும் பிரதேசங்களின் புவியோட்டின் பாறைப் படை அமைப்புக்களுக்கு ஏற்ப பல்வேறுபட்ட வடிவங்களைப் பெறுகின்றன. அவ்வகையில் அவ்வாறான பலவித


அமைப்புக்களைப் படம்-23 காட்டுகிறது.


3.4 எரிமலையுடன் தொடர்புடைய வேறு நிலவுருவங்கள்


இதுவரையில் குறிப்பிடப்பட்ட நிலவுருவங்கள் அனைத்தும் புவி மீது எரிமலை நிகழ்சியின்போது தெளிவாக அவதானிக்கப்பட்டவையும் அதேவேளை அதிகமாக
புவிமேற்பரப்பில் விரவிக் காணப்படுபவையும் கூட. ஆயினும் இன்னும் பலவகையினதான நிலவுருவங்கள் எரிமலையாக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையனவாகவும்,தொடர்பு குறைந்தவையாகவும் இருக்கின்றன. அவ்வாறான நிலவுருவங்கள் புவினைப் பொறுத்தவரையில் அகவிசைமூலம் ஆக்கப்பட்டவையாகவே புவிச்சரிதவியல் அறிஞ்ர்கள் கருதுகின்றனர். கருதுகின்றனர். அவ்வாறான சில நிலவுருவங்கள் பின்வருமாறு பிரித்து நோக்கப்பட்டுள்ளது.


3.4.1 கொதி நீர் ஊற்றுக்கள்


புவியில் எரிமலையின் தாக்கம் இப்பொருதும் பாதிக்கின்ற அல்லது அண்மையான புவிச்சரித காலங்களில் பாதித்த சில இடங்களில் வெந்நீரும் ஆவியும் இடையிடையே கிளர்நீர் ஊற்றுப்போல் சில சமயங்கள் 100 அல்லது 200 அடி உயரத்திற்கும் எழுகின்றன. இடையிடையே தோன்றுகின்ற இவ்வூற்றுக்கள் கொதிநீரூற்றுக்கள் எனப்படுகின்றன. கொதிநீர்ரூற்றுக்கள் ஐஸ்லாந்தில் நெடுங்காலமாகக் காணப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் யலோசுற்றோன் போன்ற பிரதேசங்களிலும் சிறந்த உதாரணங்கள் உண்டு.


ஐஸ்லாந்திலே கிண்ணவடிவுடைய ஒரு குழிவின் மத்தியில் வெளிப்படுகின்ற உருளைக் குழாய் போன்ற கால்வாய் ஊடாக நீர் எழுகின்றது. இக் கொதிநீரூற்றுக்கள் கக்காது இருக்கும் போதும் கூட அக்குழிகளில் 170 பாகை பரனய்ட் தொடக்கம் 190 பாகை பரனய்ட் வரையிலான வெப்பமுடைய நீர் தேங்கி நிற்கின்றது.


{mospagebreak} 3.4.2 வெந்நீரூற்றுக்கள்


கொதிநீர் ஊற்றுக்கள் உண்டாகாத சமயங்களில் சூடான நீர் குதித்தெழுதல் இன்றி தொடர்ந்து பிரவாகிக்கின்ற இத்தன்மையினை வெந்நீரூற்றுக்கள் என அழைக்கின்றனர். சாதாரணமாக எரிமலைப்பிரதேசங்களில் இவை உள்ளன எனினும் இவை எரிமலைச் சின்னங்கள் காணப்படாத வேறுபல பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. எதாரணமாக பாது நீரூற்றுக்களைக் குறிப்பிட முடியும்.


3.4.3 கழிமண் மேடுகள்


எரிமலைகளின் ஊடாகக் கக்குகின்ற நீர் தெளிவின்றி சேற்று நீராக இருந்தால் உச்சியில் வாயினை உடைய ஒரு கூம்புவடிவக் கழிமண் மேடு உண்டாகின்றது.
இவை ஒரு எரிமலை நிகழ்ச்சியின் இறுதிக்கட்டங்களைக் காட்டுவனவாக இருக்கின்றன. பல பகுதிகழில் எரிமலைக் கக்குகைக்கான காரணிகள் தவிர்ந்த பல்வேறு காரணிகளினால் இவை ஏற்படுத்தப்பபடுகின்றன. அவற்றில் மேற்பரப்பிற்குக் கீழ் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. கஸ்பியன் கடலுக்கு அருகில் சில பிரதேசங்களிலும் தென் பலு}ஸ்கித்தானிலும் இன்றும் இக்கழிமண் மேடுகள் அமைந்து காணப்படுகின்றன.

 

 



இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 3466
  • இணைக்கப்பட்டது: Friday, January 16 2009 23:03 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 73
Last Updated on Sunday, July 03 2011 11:14  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நாம் இருக்கும் உயரத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நம் சிந்தனைகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

- ஸிக்ஸாக்ரன்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1637
mod_vvisit_counterYesterday1911
mod_vvisit_counterThis week6691
mod_vvisit_counterThis month11311
mod_vvisit_counterAll648789

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.