பிரபஞ்சத்தில்(universal) சிறிய துகள்களாக பால்வெளி
காணப்படுகின்றது. இதில் ஒரு மிகச் சிறிய பாகமாகவே ஞாயிறுத்தொகுதி காணப்படுகின்றது. பால்வெளியிலுள்ள பல கோடி உடுக்களில் சூரியனும் ஒன்றாகும். பால்வெளி முடிவிலியானது. இது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இந்த பால்வெளியில் பல திரிலியன்களுக்கு மேற்பட்ட சூரியன்களில் ஒரு சூரியனாக எமக்கு ஒளியை தரும் சூரியன் காணப்படுகின்றது. இது கோளவாயு முகில் கூட்டமும் பிரபஞ்சத்தின் தூசுக்களும்..
வேறுப்பட்ட வேகங்களில் சுழற்சிக்கு உட்பட்டதால் ஏற்பட்ட ஈர்ப்பின் விளைவினால் உருவாகியதாகும். இதிலிருந்து வெடித்து சிதறிய முகில்கள் ஒடுக்கம் அடைந்து கோள்கள் உருவாகின. இதில் ஒன்றே புவிக்கோளமாகும். பூமியானது சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்றது. அண்டவெளியில் உள்ள தூசுகளிலும் வாயுக்களிலிருந்தும் தோன்றின. இப்பொருட்களின் பெரும்பகுதி ஒடுங்கற் தாக்கத்திற்கு உள்ளாகி இதிலிருந்து பெருமளவு வெப்பமும் அமுக்கமும் தோற்றுவிக்கப்பட்டது இது அணு வெப்ப தாக்கத்தை ஊக்குவித்து சூரியன் தோன்றியதாக நம்பப் படுகின்றது எஞ்சிய வாயுக்களும் தூசுகளும் புதிதாக தோன்றிய ஈர்ப்பு சக்தியின் தாக்கத்தினால் ஒர் தட்டாக தோற்றம் அளித்தது. சிறிதளவு வாயுக்களும் தூசிகளும் ஒடுங்கி கோளங்களாக உருவெடுத்தன. இதில் ஒன்றுதான் நாம் வாளும் பூமி. பூமியானது சுழற்சி மற்றும் சுற்றுகைக்குட்பட்டு ஒரு கோளாகவும் இயங்கில்தன்மை கொண்டதாகவும் அதன் ஆரம்பமுதல் இன்று வரை தொடர்ச்சியாக வேறுப்பட்ட மாற்றங்களுடன் இயங்கி வருகின்றது. காலப்போக்கில் புவிமேற்பரப்பில் சமுத்திரம் தோற்றம் பெற்றது.
இச்சமுத்திரம் பூமியில் தோன்றுவதற்கு புவியில் ஏற்பட்ட எரிமலைத்தாக்கமும் காரணமாகின. புவியின் ஒடுங்குதலின் போது அதன் பாரமான கூறுகளான Ni,Fe போன்றவை புவியின் மையத்தை அடைய பாரமற்ற கூறுகள் அதன் மேற்பரப்பில் படிந்தன. இதனால் ஆதி வளிமண்டலத்தில் பிரதானமாக H,He தோன்றின. இறுதியாக இவ்வாயுக்கள் அண்ட வெளியை அடைய புவியானது சமுத்திரமோ வளியோ அற்ற பாறைகளை கொண்டதாக இருந்தது. காலம் செல்ல செல்ல புவியின் ஈர்ப்பு
சக்தியின் அமுக்கத்தாலும் கதிர்வீச்சு அழிவாலும் வெப்பம் தோன்றியது. தொடக்கத்தில் சூரியமண்டலத்தில் பூமி உருகிய தீக்கோளமாக இருந்தது. அதை சுற்றி கரியமில வாயுவும், அண்டவெளியில் இருந்த வேறு பல வாயுக்களும் சேர்ந்த காற்று மண்டலம் இருந்தது. அப்போது உருகிய பாறைகள் வழிந்தோடிய பூமியின் மேற்பரப்பை விண்கற்கள தாக்கிய வண்ணமிருந்தன.
பூமியை விட்டு வெளியேறிய நீராவியும், மற்ற வாயுக்களும் கரிய மேகங்களாகக் குவிய சூரிய ஒளியற்ற பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சி அடைந்தது நீராவியாக நின்ற மேகக்கூட்டங்கள் மழையாக பெய்தன உருகிய பறைகள் கொண்ட சூடான பூமியின் மேற்பரப்பில் விழுந்த மழை நீர் மீண்டும் நீராவியாக மாறி மேகக்கூட்டங்களாக சென்று மறுபடியும் இடைவிடாது பெய்ய பூமி குளிர்ந்தது நீர் நிலைகள் பெருகின பின்னர் சூரியன் காற்று,நீர் போன்றவற்றாலும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு,கண்டங்களின் பெயர்ச்சி, மடிப்பு மலைகள் உருவாகலினாலும் இன்றைய பூமியானது மலைகள்,மடுக்கள்,குளங்கள்,குட்டைகள்,ஓடைகள், ஆறுகள், பரந்தகடல்கள், பனிப்பரப்புக்கள், பாலைவனங்கள் என உருமாறியது. அக்காலத்தில் வளிமண்டலம் ஐதரசன் கொண்டு இருந்துள்ளது. சுமார் 3.9 பில்லியன் வருடங்களுக்கு முன்; பூமியின் மேற்பரப்பில் ஓடுசிலிக்கன் பாறைகளின் தோற்றத்துடன் உருவாகியுள்ளது. ஆரம்பகால ஆதிவளிமண்டல வாயுகூறுகள் வேறுபட்ட தாக்கங்களுக்கு உட்பட்டு அமினோ அமிலம்(SE) நியுக்கிலியோ தட்டுக்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற பேரினக்கூறுகள் தோற்றம் பெற்றன. பின் இலிப்பிட்டு புரதம் தோற்றம் பெற்றன.
அடிப்படையில் நைதரசன் மூலகமான இவைகள் அடிலின் எளிய வெல்லங்களுடன் சேர்ந்து மேலும் நியுகிலியின் அமிலங்கள் தோற்றம் பெற்றன. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே கூறப்பட்ட இலிப்பிட்டு பதார்த்தங்களுடன் சூழப்பட்டு ஆதிகலம் தோற்றம் பெற்றது. பிற்பட்ட காலங்களில் காற்றின்றிய வாழிகள் குறைந்து காற்றுவாழ் அங்கிகள் பெருகத் தொடங்கியது. பின்பு சமுத்திரங்களில் இருந்து உயிரினங்கள் படிப்படியாக தரைக்கு பரவலடைந்தன. இவ்வாறாக ஓவ்வொரு உயிரினங்களும் தோற்றம் பெற்றன.
உயிரினங்களின் தோற்றம் :-
கடலில் தான் உயிரினங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றன. இற்றைக்கு 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் புவியின் முதலாவது விலங்கினமான ஜெலிஃபிஸ்(Jelifish) அடையாளம் காணப்பட்டது. அடுத்து முள்ளந்தண்டு உயிரினங்களின் தோற்றமானது பாரியளவிலான மாற்றங்களையும் விலங்கினங்களையும் தோற்றுவித்துள்ளது. 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பலியோசுயுக் யுகத்தில் ஒர்டோவிசியன் காலத்தில் தான் முதலாவது முள்ளந்தண்டு உயிரினங்கள் தோற்றம் பெற்றன. 345 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பலியோசுயுக் யுகத்தின் கார்போனிபரஸ் காலத்தில் தான் முதன் முதலாக ஊர்வனதோற்றம் பெற்றது. தாவரங்களின் தோற்றமானது 3.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிகேம்பிரியன் காலத்தில் அல்காக்களின் உருவாக்கத்துடன் ஆரம்பமானது.
இற்றைக்கு 280 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பலியோசுயுக் யுகத்தின் பேர்னியன் காலத்தில் ஆதி உயிரினங்களின் அழிவின் பின் முதலில் ஆறுகால்களை உடைய உயிரினங்கள் தோற்றம் பெற்றன. அடர்காடுகளின் உருவாக்கத்துக்கு பின்னர் ஊர்வனவற்றின் வளர்ச்சியுடன் ஒன்றியதாக இவ்வுயிரினம் புவியில் தோன்றியது. இதமான காலநிலை கொண்ட மெசோசோயின் யுகத்தின் யுராசிக்காலத்தின் முதன் முதல் டைனோசோர் தோன்றின. இக்காலத்தின் இறுதியில் முதல் பறவையினங்கள தோற்றம் பெற்றன. செனோசொயிக்(cenocoic) யுகத்தின் ஆரம்பகாலமாகிய பலியோசின்(pliocene) காலத்தில் முதன்முதலாக ஊண் உண்ணி விலங்கு தோற்றம் பெற்றது.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Saturday, April 09 2011 08:22 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 253













