மொத்த நிலப்பரப்பான 65,610 சதுர கிலோமீட்டர்
நிலப்பகுதியில் 30 வீதம் விவசாய நிலம் எனப்படுகின்றது. 2008 ம் ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த தொழிலாளர்களில் 32.7 வீதமானவர்கள் விவசாய துறைசார்ந்தே இருந்துள்ளனர். இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்பதனாலும் கிராமிய சனத்தொகையினை அதிகமாக கொண்ட ஒரு நாடு என்பதனாலும் 65 வீதத்திற்கும் அதிகமான கிராமிய...
மக்கள் விவசாயத்தினையே தமது ஜுவனோபாயமாக நம்பி இருக்கின்றனர். சுதந்திர இலங்கையின் மொத்த விவசாய நிலப்பரப்பு 1.7 மில்லியன் கெக்டயரில் இருந்து 2 மில்லியன் கெக்டயராக அதிகரித்துள்ளது. இதில் பெருமளவான அதிகரிப்பு வறள்வலய குடியேற்றங்களுக்காக உருவாக்கப்பட்ட மகாவலி, கல்லோயா அபிவிருத்தித்திட்டங்கள் மூலம் பெறப்பட்டவை.
இன்று இலங்கையை பொறுத்தவரை 600,000 கெக்டயர் பரப்பளவில் தானிய உற்பத்தியும், 395,000 கெக்டயர் பரப்பளவில் தென்னை உற்பத்தியும், 211,000 கெக்டயர் பரப்பளவில் தேயிலை செய்கையும், 115,000 கெக்டயர் பரப்பளவில் இறப்பர் செய்கையும் நடைபெறுகின்றது. நெற்செய்கையினை பொறுத்தவரை பருவ மழைக்காலங்களை நம்பி பெரும்போகம் 600,000 கெக்டயர் பரப்பளவில் நடைபெற்றாலும் அதன் அரைவாசி அளவு பரப்பளவில் சிறு போகம் நீர்ப்பாசனத்தினை நம்பி நடைபெறுகின்றது. இலங்கையின் மத்திய மாகானம் 331,324 கெக்டயர் விவசாய நிலப்பரப்பினை கொண்டுள்ளது.
இதில் பெருமளவு தேயிலை , இறப்பர் செய்கை நிலங்களே. இப்பிரதேசத்தில் 216,836 குடும்பங்கள் வரையில் விவசாயத்தில் ஈடுபடுகின்றன. நாட்டின் முதன்மை விவசாய ஏற்றுமதிப் பொருட்கள் 
இங்கேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று இலங்கையில் 1000 கெக்டயர் விவசாய நிலங்களுக்கு 11 ரக்டர்(tractors) என்ற வகையில் காணப்படுகின்றது. நாட்டின் விவசாயத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அரசினால் காலத்திற்கு காலம் மேம்படுத்தப்பட்டே வந்துள்ளன.
பொருளாதாரத்தினை பொறுத்தவரை நாட்டின் மொத்த ஏற்றுமதியில் விவசாயத்தின் பங்கு 20 வீதம் எனப்படுகின்றது அதில் 77 வீத்தினை பிரதான நான்கு பயிர்கள் ஆக்கிரமிக்கின்றன. அதே வேளை நாட்டின் மொத்த இறக்குமதிப் பெறுமானத்தில் 12 வீதம் விவசாய உற்பத்திகளே என்பதனையும் மறந்துவிடலாகாது. பெரும்பாலும் இந்தியா. அவுஸ்ரேலியா, நியூசிலான்ட் போன்றன இலங்கைக்கு விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று நாடுகள் எனப்படுகின்றது.
இலங்கை மக்களின் விவசாய பொருட்களின் நுகர்ச்சியை பொறுத்தவரை தானியங்கள் 55 வீதமாக உள்ளது இது அபிவிருத்தியடைந்த நாடுகளின் 30 வீதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும். விலங்கு உற்பத்திகளின் நுகர்ச்சி இலங்கையில் 5 வீதமே உள்ளது. ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இது 20 வீதமாகும். கோதுமை, பால்மா , சீனி என்பன பிரதான இறக்குமதிப் பொருட்களாகும்.
இலங்கையில் கடந்த காலங்களில் வெகுவாக வீழ்ச்சி கண்டு வந்துள்ள ஒரு விவசாய உற்பத்தி என்றால் அது கோப்பி செய்கை என்றே கூறலாம். தேயிலை செய்கையின் அறிமுகத்துடன் கோப்பியின் வீழ்ச்சி ஆரம்பமானது எனினும் 2002 இல் 14,800 கெக்டயராக இருந்த கோப்பி செய்கை நிலங்கள் 2004 இல் 13,200 ஆக மாறி 2006 இல் 10,500 என குறைவடைந்துள்ள.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 2728
- இணைக்கப்பட்டது: Tuesday, June 30 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 95


















