ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் 1990ம் ஆண்டு முதல் வருடாந்தம் வெளிக்கொண்டுவரும்
மனித அபிவிருத்தி அறிக்கைகள் மூலம் வறுமை, பால்நிலை, குடியுரிமை, மனித உரிமைகள், கலாச்சார சுதந்திரம், உலகமயமாதல், நீர் வளம், மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல சவால்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. இது மானிட அபிவிருத்தி என்பதனை “மனித சமூகத்தை அபிவிருத்தியின் மையம் நோக்கி நகர்த்துகின்ற...
ஓர் செயற்பாடாகும்” என வரையறை செய்கின்றது. அது அவர்களுடைய அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்தல், தமக்கான தனித்துவத்துடனான வாழ்க்கை, தமக்கு தேவையானவற்றை தெரிவு செய்வதற்கான சுதந்திரம் என்பன உலகின் சகல மக்கள் குழுவிற்கும் கிடைப்பதனை உண்மையாக்குகின்றது. தற்போது 2009 க்கான அறிக்கை வெளிவரவுள்ளது. உள்நாடுகளுக்கு உள்ளேயும் வெளிநாடுகளுக்குமாக இன்று அதிகரித்திருக்கின்ற மனித சமூகத்தின் குடிப்;பெயர்வுகளே 2009 ம் ஆண்டிற்கான மானிட அபிவிருத்தி அறிக்கையின் தலைப்பாக அமைந்திருக்கின்றது. இதன் ஆரம்பத்தில் இன்று உலகளாவிய ரீதியில் இடப்பெயர்வுக்கான முக்கிய காரணியாக விளங்ககின்ற “உலகில் ஆற்றலின் சமமற்ற பரம்பல்” என்ற விடையம் கையாளப்படுகின்றது.
இவ்வாறான இடப்பெயர்வுகள் வருமானத்தினை அடிப்படையாக கொண்டோ, சேவைகளை மையமாகக் கொண்டோ, திறமைகளுக்கான வாய்ப்புக்களை தேடியோ இடம்பெறலாம் எனப்படுகின்றது. குடிப்பெயர்வினால் ஏற்படுகின்ற குடித்தொகை ரீதியிலான மாற்றங்களை வளர்ச்சி, சமத்துவமின்மை என்பனவற்றின் அடிப்படையில் ஆராய்கின்றது. ஏற்பட்டுள்ள குடிப்பெயர்வுகளினால் தனியன்கள் மத்தியில் தோன்றுகின்ற வேறுபாடுகள் மற்றும் குடும்பம், கிராமம் அடிப்படையிலான வேறுபாடுகள் தொடர்பான அதிக விளக்கங்களை கொண்டிருப்பதுடன் குறுகியகால குடிப்பெயர்வுகள் தொடர்பான சாதக பாதக விளைவுகளையும் 2009 க்கான மானிட அபிவிருத்தியற்க்கை கொண்டிருக்கும் எனப்படுகின்றது.
அதிகரித்த குடிப்பெயர்வுகள் தொடர்பில் பல நன்மைகள் மனிதவள அபிவிருத்தியை பொறுத்தவரையில் ஏற்பட்டிருக்கின்றது என்கிறது இவ்வறிக்கை அதாவது அதிகரித்த தனிநபர் வருமான மட்டங்கள், கல்வியில் உயர்மட்ட அளவிலான பங்கேற்பு, சுகாதார வசதி வாய்ப்புக்கள் என்பனவற்றை உதாரணமாக கொள்கின்றது. ஆதிகாலந்தொட்டு வளர்ச்சியடையாத ஒரு சமூகத்தை குறிப்பாக பெண்களை அபிவிருத்தி நோக்கி வலுவூட்டுவதற்கு குடிப்பெயர்வு துணைசெய்திருக்கின்றது என்பதுடன் அதே நேரம் எங்கு குடிப்பெயர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையோ அல்லது குடிப்பெயர்வுகள் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றதோ அங்கு அம் மக்களின் மானிட அபிவிருத்தியை அடைவதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளமையினையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக இன்று உள்நாடு வெளிநாடு அடிப்படையில் நடைமுறையில் இருக்கின்ற குடிப்பெயர்வுகளுக்கான சட்டங்கள் சிறந்த மானிட அபிவிருத்தியை அடைவதற்கான குடிப்பெயர்வுகளை அங்கீகரித்திருக்கின்றன எனப்படுகின்றது. அதாவது தமது நிகழ்சித் திட்டம் ஒன்றிற்காகவோ, உள்நாட்டு முறன்பாடுகளின் காரணமாக, சுற்றாடல் சீர்கேடு காரணமாகவோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ சில நாடுகள் தமது நாடுகளை நோக்கி வருவபர்களை ஏற்றுக்கொள்கின்றன என்பது இங்கு குறிப்பிடப்படுகின்றது. இவ்வறிக்கை 2009 ஒக்டோபர் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த 2008 க்கான மானிட அபிவிருத்தியறிக்கை “காலநிலை மாற்றங்களுடனான மனிதனின் மோதல் மற்றும் பல் துண்டங்களாக பிரிந்திருக்கும் உலகில் மனிதனின் இருப்பு” போன்ற இரு விடையங்களை மையப்படுத்தியிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : http://hdr.undp.org/en/reports/global/hdr2009
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Tuesday, May 05 2009 19:50 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 87













