.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விவசாயத்தில் - பசுமைப்புரட்சி

E-mail

இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவை அண்மித்துக்கொண்டிருந்த வேளை. ஒரு புறம் வளங்களுக்கான யுத்தம் வல்லரசுகளின் ஆயுத பலங்கள் பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. மறு புறம் உலகின் அதிகரித்த சனத்தொகைக்கான உணவுத்தேவையினையினை பெறுவதற்கு பல நாட்டு அரசுகள் திண்டாடிக்கொண்டிருந்தன. இரண்டாம் உலக மகா யுத்தம் தொடர்ந்ததால் இது வரையில் ஏனைய நாடுகளில் இருந்து வந்த உணவு இறக்குமதிகளும் ....

பாதிக்கப்பட்டது. பல நாடுகளில் பஞ்சம் உருவாகிக் கொண்டிருந்த வேளை. மெக்சிக்கோ அரசின் விவசாயம் மீதான ஒரு புரட்சிக்கு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தனது அதிகரித்த சனத்தொகைக்கான கோதுமை உற்பத்தியினை தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் மெக்சிக்கோ உறுதியாக இருந்தது. 1943 இதற்கான ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன. அதன் பயனாக நோர்மன் போர்லாக் (Norman Borlaug) என்பவரால் பசுமைப்புரட்சி 1943 இல் உருவாக்கப்பட்டது.

1943 களில் மெக்சிக்கோ தனக்கு தேவையான கோதுமையின் அரைவாசியினை இறக்குமதி செய்த நிலைமை மாறி 1956 களில் அது கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு கண்டது. 1963 களில் The international maize and wheat improvement center மெக்சிக்கோவில் உருவாகியிருந்ததுடன் அது கோதுமை உற்பத்தியில் புதிய முன்னேற்றங்களை எற்படுத்தியது. விளைவு 1964 களில் மில்லியன் தொன் கோதுமையினை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடாக மெக்சிக்கோ மாறியது.

மெக்சிக்கோவில் உருவான இப் பசுமைப் புரட்சியினை உலகின் எனைய பாகங்களுக்கும் எடுத்துச் சென்ற பெருமை Rockfeller Foundation க்கே சாரும். 1961 காலப்பகுதி இந்தியாவில் வறுமை ஆரம்பித்திருந்தது இந்த வேளையில் நோர்மன் போர்லாக் இந்தியாவில் எம்.எஸ்.சிவாமிநாதன் ஊடாக பசுமைப்புரட்சியினை அறிமுகப்படுத்தினார். முதன் முதலாக பஞ்சாப்பில் கோதுமை உற்பத்தியுடன் இந்தியாவில் பசுமைப்புரட்சி ஆரம்பமானது. 1960 களில் 1 கெக்டயருக்கு 2 டன் என இருந்த அரிசி உற்பத்தி 1990 களில் 6 டன் என இந்தியாவில் உயர்ந்தது.

1970 களில் 1 டன் அரிசியின் விலை 550 டொலர் என்ற நிலை 2001 இல் 200 டொலராக குறைந்தது. 2006 இல் 4.5 மில்லியன் டன் அரிசியினை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தியாவின் விவசாயத்தில் மாற்றம் உருவானது. அது இந்தியா பசுமைப்புரட்சியின் ஊடாக பெற்றுக் கொண்ட சில நன்மைகள். 1970 களில் உலக உணவு நிவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் என்பன இணைந்து “உலக விவசாய ஆராய்ச்சிக்கான வலைப்பின்னல்(CGIAR)” ஒன்றினை உருவாக்கியது. அது அக்காலத்தில் பசுமைப்புரட்சியின் நன்மைகளை உலகின் வறிய நாடுகளும் பெறும் பொருட்டு பல செயற்பாடுகளை தொடங்கியிருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரண்டாவது பசுமைப்புரட்சிக்கான அடித்தளங்கள் மக்களின் உணவுத்தேவை என்பதை விடுத்து சந்தை, இலாபம் என்ற நோக்கின் அடிப்படையில் தோன்றி வருவதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் மரபணு மாற்ற பசுமைப்புரட்சி ஒன்றிற்கான ஆய்வுகள் உலகில் மறைமுகமாக ஆரம்பித்துவிட்டதாக பலர் கருதுகின்றனர். P.D cotton என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தி உலகில் பல விமர்சனங்களுக்கு உருவான மான்சான்டோ என்ற பூச்சி மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் உலகின் சில்லறை வியாபாரங்களை தனது கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் என பல அவ்வாறான செயற்பாடுகளக்கு சிறந்த உதாரணங்களாகும்.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 2006
  • இணைக்கப்பட்டது: Thursday, August 13 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 100
Last Updated on Sunday, July 03 2011 11:16  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நாம் இருக்கும் உயரத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நம் சிந்தனைகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

- ஸிக்ஸாக்ரன்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1611
mod_vvisit_counterYesterday1911
mod_vvisit_counterThis week6665
mod_vvisit_counterThis month11285
mod_vvisit_counterAll648763

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.