தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இவர்களும் அவதாரப் புருசர்களே..

E-mail

சமுதாயத்தில் எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ,அங்கெல்லாம் இறைவன் அவதாரம் எடுத்ததாகவும் அநீதியை அழித்தாகவும் இதிகாசங்களும் புராணங்களும் கூறுகின்றன.  கதை நாயகர்களாக அலங்கரித்த அவதார புருசர்களைப் பற்றியும் அவர்கள் வலியுறுத்துகின்றச் சமயம் சார்ந்தக் கொள்கைகளையும் வெளிப்படுத்துவதில் இதிகாசங்களும், புராணங்களும் வெற்றிப் பெற்றுள்ளன.  மேலும் மக்களை..

நல்வழிப்படுத்துகிற அறக்கருத்துக்களையும் நீதிக் கருத்துக்களையும் நிலவுகின்ற சாதியக் கொள்கைகளையும் சம்பிரதாயச் சடங்குகளையும், சமூக அநீதிகளையும், மறுக்கப்படும் மனித உரிமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுத்த இக்கால அவதாரப் புருசர்களாக விளங்கக் கூடிய மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், வ.உ.சி, காரல் மார்க்ஸ், பெரியார், அண்ணா, காமராஜர் போன்றோரின் வாழ்க்கை வரலாறும் மக்களுக்கு ஒரு படிப்பினையே.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஏதாவது ஒரு சம்பவமோ அல்லது நிகழ்வுகளோ அமைந்திருக்கும்.  அத்தகைய திருப்புமுனையாக அமைவதற்கு இவர்கள் வாழக்கை வரலாறும் வழிகோலுகின்றன.  மகாத்மா காந்தி ஒரு சமயம் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் இடம்பெற்ற அரிச்சந்திரனின் வாழ்க்கை வரலாறே காந்தியின் வாழக்கையில் திருப்புமுனையாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  உண்மையே பேச வேண்டும் என்ற கொள்கையை கடைபிடிக்கவும் காரணமாக அமைந்தன.

 

விடா முயற்சியும் அகிம்சை வழியிலானப் போராட்டங்களே வெற்றியைத் தேடித்தரும் என்று உலகுக்கு உணர்த்திய காந்தியின் வாழக்கை வரலாறும், அடங்கிப்போவது கோழைத்தனம் வீறுகொண்டு எழுவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று இளைஞர்களை எழுச்சிப்படுத்திய சுபா சந்திரபோசின் வாழ்க்கை வரலாறும் அவர்கள் காட்டிய பாதையும் நாம் அனைவரும்  உற்றுநோக்கத்தக்கது.  சோசலிச சமதர்மச் சமுதாயம் மலர பொதுவுடமைச் சிந்தனையை மக்களிடம் விதைத்த காரல்மார்க்சும் ஆங்கிலேயருக்கு, நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தக் கப்பல் விட்ட வ.உ.சியும் அவரது சமதர்மக் கொள்கையும் இன்றையச் சமூகம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

 

சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் சாதி சமயப் பேதங்களை ஒழிக்கவும்.  கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகவும் பேரியக்கம் ஒன்றைத் தொடங்கிய பெரியாரையும், அவர் வழியில் தோன்றிய அண்ணாவும், தீண்டாமைக் கொடுமை, சாதி உயர்வு தாழ்வு, குழந்தைத்திருமணம், பெண்ணடிமை, போன்றவற்றை ஒழிக்க தன்னுடைய படைப்புக்களில் எழுதியும் பேசியும் சமூகப் புரட்சியில் ஈடுபட்டார்.  இவர்களது வாழ்க்கை வரலாறும் மக்கள் அனைவரும் அறிந்து போற்றத்தக்கதாகும்.

 

ஏழைகள் மீது இரக்கம் கொண்டும் ஏழை மக்கள் தொடர்ந்து கல்விப் பெற்றிட மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கர்மவீரர் காமராஜர் பற்றியும் அவரது வாழ்க்கை  முட்செடிகளாக உள்ளன.  சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும், மனிதநேயப் பண்புகளும் வளர நாட்டுக்காகப் பாடுப்பட்ட இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை இன்றையச்சமூகமும், எதிர்காலச் சந்தததியினரும் அறிந்து கொள்வது அவசியம் ஆகிறது.  இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, மாணவர்களுக்கு இவர்களைப்பற்றிய பாடங்களை வைத்துள்ளது.  இந்த பாடங்கள் அவர்களின் முழுமையான

வாழக்கை வரலாற்றை எடுத்துக் கூறவில்லை.

அறிமுகக் குறிப்புகளாகவே உள்ளன.  தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்ள தனியாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் இருக்கின்றன.  இருந்தாலும் இவைகளை படிப்போரின் எண்ணிக்கையும் ஆர்வமும் குறைந்து வருவதால் மக்களிடத்தில் இந்நூல்களின் செல்வாக்குச் சற்று சரிந்த நிலையிலே உள்ளது.

இதனைப் போக்குகின்ற வகையில் டி.கே.ராமானுஜ கவிராயர், புலவர் குழந்தை, கவிஞர் வாலி, வைரமுத்து, புலவர் வாய்மைநாதன், ஆ.பழனி, மு.இளங்கண்ணன், பா.நாராயணன், கவிஞர் ஆனந்தன் போன்றோர் சமுதாயத்திற்கு உழைத்தத் தலைவர்களைக் கதா நாயகர்களாகக் கொண்டு மரபுக் கவிதையிலும் புதுக்கவிதையிலும் காவியம் படைத்துள்ளனர்.  அண்மை காலங்களில் வெளிவந்துள்ள காவியங்களில் காந்தி காவியம், நேரு காவியம், பெரியார் காவியம், அண்ணா காவியம், காமராசர் காவியம், காரல் மார்க்சு காப்பியம், நேதாஜி காவியம், கப்பலுக்கொருக்காவியம் போன்றவைகள் தலைவர்களை கதைநாயகர்களாகக் கொண்டு விளங்கக்கூடிய காவியங்கள்.

இந்தக் காவியங்கள் காவிய இன்பத்தை அளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எடுத்தியம்புகிறது.

 

சமுதாயத்தில் எத்தனையோ தலைவர்கள்தோன்றி மறைந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள் ஒருசிலரே அத்தகைய சிறப்புப் பெற்ற இவர்கள் சமூக நலனுக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பட்ட பாடுகளையும் அடைந்த துயரங்களையும் பார்க்கும் போது இவ்வுலகில் அவதாரங்கள் தோன்றி எவ்வாறு மக்களுக்கு நன்மை செய்தனவோ, அதைப் போலவே இவர்களும், இவர்களது வாழ்க்கையும் இருப்பதால் இவர்களும் அவதாரப் புருசர்களே.

 

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Friday, May 06 2011 10:54 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 255
Last Updated on Saturday, May 07 2011 08:28  
கட்டுரையினை எழுதியவர்: ப.இரமேஷ்

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,