தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கணினித் தொகுதி (The computer system)

E-mail

கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...

கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 

வன்பொருள்


கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

மத்திய செயலி Central Processing Unit (CPU)

இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம்.

சேமிப்பகம் Storage

தரவுகளைக் கணினியின் சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சேமிப்பகங்களாகும். இது பிரதானமாக இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

I. முதன்மைச் சேமிப்பகம் Primary Storage

ROM (Read Only Memory   வாசிக்க மாத்திரமான சேமிப்பகம்) இலுள்ள தரவுகளை கணினியானது வாசிப்பதற்கு மாத்திர பயன்படுத்தும். கணினியின் இயக்கத்துக்குத் தேவையான பிரதான அறிவுருத்தல்கள் இவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை இயக்கியவுடன் அத்தரவுகளை வாசித்து அதன்படி இயங்கும். ஆனால் இவற்றில் தரவுளைப் பதிவு செய்ய முடியாது. கணினியின் அகத்தேயுள்ள சிப் (Chip) களில் அவை தயாரிக்கப்படும்போதே தேவையான தரவுகள் அவற்றில் பதியப்படும்.

II. துணைச் சேமிப்பகம் (Secondary Storage)

தரவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க கணினியில் இவை பயன்படுத்தப்படுகின்றன. கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் இவற்றிலுள்ள தரவுகள் அழிவதில்லை. உதாரணமாக மென்தட்டு (Floppy Disk), நிலை வட்டு (Hard Disk), குறுவட்டு CD ROM), Pen Drive  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

வெளியிடு கருவிகள் (Output Devices)

 

கணினியிலிருந்து தகவல்கள் வெளியிடப்படும் கருவிகள் வெளியிடு கருவிகளாகும். இவை மனிதன் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய முறைகளில் வெளியிடப்படும். உதாரணமாக கணினித்திரை(Monitor), Speaker, Printer போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மென்பொருள் (Software)

கணினித்தொகுதியின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அதற்கு வழங்கப்படும் அறிவுருத்தற் தொகுதியானது மென்பொருள் எனப்படும். மென்பொருளின் பிரதான செயற்பாடுகள்,

கணினியின் பாகங்களைக் கட்டுப்படுத்தல்.

கணினியை இயக்குபவருக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

சேமிப்பகங்களிலுள்ள தரவுகளையும் கணினித்தொகுதியையும் இணைக்கும் ஊடகமாகச் செயற்படல்.

மென்பொருட்கள் கணினியின் சேமிப்பகங்களில் பதியபப்ட்டிருக்கும். இவை கணினியின் தேவைக்கேற்ப முதன்மை சேமிப்பகத்திற்கு ஏற்றப்பட்டு அதிலிருந்து அறிவுருத்தல்களைப் பெற்று இயங்கும்.

மென்பொருளானது இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Wednesday, May 04 2011 07:53 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 254
Last Updated on Wednesday, July 20 2011 10:07  
கட்டுரையினை எழுதியவர்: M.Naleem

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,