இற்றைக்கு 3.2 பில்லியன் வருடங்களக்கு முன்பு ஆதி உயிரினங்கள் 
தோன்றின என நாம் கொள்கின்ற போதும் அவ்வுயிரினங்கள் ஆரம்பங்களில் செல் பிரியும் விந்தையினைக் கற்றிருக்கவில்லை என உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஓர் அங்கி வளர்ச்சியடைவதற்கோ அல்லது பரவல்... காலந்தோறும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் பரம்பல்...
அடைவதற்கோ அதனுடைய செல் பிரிந்து புதிய அங்கிகள் உருவாகுவது இன்றியமையாதது ஆகும். சமுத்திரங்களில் தோன்றிய ஆதி உயினங்கள் அங்கே வெந்நீர் ஊற்றுக்கள் எரிமலைகளைச் சிதைத்து களிமண் துகழ்களாக மாற்றிய விந்தையில் இருந்து தாம் செல் பிரியும் விந்தைகளைக் கற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன் பின் அவற்றின் பரினாம வளர்ச்சியும் பரவலும் எவ்வாறு நடந்தன என்பதை காலவாரியாக ஆராய்வோம்.
1. பிறீ கேம்பிறியன் யுகம்(Precambrian)
புவி வரலாற்றின் ஆரம்பக்காலம் கேம்பிறியனுக்கு முற்பட்ட காலம் இற்றைக்கு 600 மில்லியன் வருடங்களுக்கு முன் நீண்டு செல்கின்றது. இக்காலத்தில் தொடக்க கால புவியியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்ததுடன் புவி கடும் குளிர்கால நிலையினை அனுபவித்தது. சமுத்திரங்கள் மற்றும் நிலவுருவங்கள் என்பன இக்காலத்தில் தோற்றம் பெற்றிருப்பினும் இன்றைய தன்மையிலும் முற்றும் மாறுபட்டதாகவே இருந்து வந்துள்ளன. இக்காலத்தில் ஏறக்குறைய 3.2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு முதலாவது இனங்காணப்பட்ட தாவர இனமான அல்காவும், ஏறக்குறைய 1.2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு முதல் விலங்கினமான ஜெலிபிஸ்(Jellyfish) என்பனவும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. பிற்பட்ட காலங்களிலியே இவை வளச்சி மற்றும் பரவல் அடைந்தமை உணரப்படுகின்றது. அத்தன்மைகளை தொடர்ந்து நோக்குவோம்.
2. பலியோசொயிக் யுகம்
பெருமளவான உயிரின வளர்சி, மற்றும் பரவலுடன் தொடர்புடைய இக்காலம் 280-600 மில்லியன் மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்டது எனக் கொள்ளப்படுகின்றது. இவ்யுகத்தின் ஆரம்ப காலமாகிய கேம்பிரியன் காலத்தில் நிலவிய இருவேறுபட்ட குளிர் மற்றும் வெப்ப காலநிலைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் மென்மேலும் வளர்;ச்சியடைந்ததுடன் அவை பல்கிப் பெருகின.
அடுத்த காலமாகிய ஓர்டோவிசியன் காலத்தில் கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சியானது முள்ளந்தண்டு உயிரிகளாக பரினாமம் அடைகின்றது. சமுத்திரங்களில் பரினாமம் பெற்ற இவ் உயிரிகள் சமுத்திர நீரோட்டங்கள் மற்றும் வற்றுப் பெருக்குகள் மூலம் சமுத்திரத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கின்றன எனக் கொள்ளப்படுகின்றது. இதற்கு அடுத்த படியாக வருகின்ற காலமாகிய சைலூரியன்(Silurian) காலத்தில் உயிரினங்கள் தரைக்கு ஏற்றாற்போல் இசைவாக்க வளர்ச்சியடைந்தன. அத்தோடு முதன் முதலாக உயிரினங்கள் தரையில் தென்பட ஆரம்பித்தன எனவும் கொள்ளப்படுகின்றது. இக்காலம் தரைவாழ் உயிரினங்களின் ஆரம்ப காலம் எனலாம். காலநிலையில் பாரியளவிலான மாற்றங்கள் எவையும் தென்படாததுடன் இக்காலத்தில் ஏற்பட்ட தரையுயர்ச்சிகள் என்பன தரைமேல் உயிரினங்களின் வளர்ச்சி பரம்பல் என்பனவற்றில் பாரிய செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன.
ஏறக்குறைய 405 மில்லியன் வருடங்களக்கு முற்பட்ட காலம் எனப்படுகின்ற டிவோனியன்(Devonian) காலம் பலியோசொயிக் யுகத்தின் சைலூரியனுக்கு அடுத்த காலமாகும். இக்காலத்தில் பலவகையான உயிரினங்கள் கடல் மற்றும் தரையிலும் வாழக்கூடிய வகையில் இசைவாக்க வளர்ச்சியடைந்ததுடன் ஈரூலோக வாழிகளாகவும் வளர்ச்சியடைந்தன. கடலில் இருந்து விலங்குகளின் பிரசன்னம் தரைநோக்கி அதிகரித்தது. கடல்வாழ் மீனினங்கள் பெருக்கம் அடைந்தன. இதற்கு அடுத்து ஏற்பட்ட காலமாகிய கார்போனிபரஸ் காலத்தில் தரை உயர்ச்சிகள், காடுகளின் உருவாக்கம் என்பன காடுகளில் உயிரினங்கள் தோற்றம் மற்றும் பரம்பல் என்பன நடைபெறுவதற்கு காரணமாகியது. பெருமளவு உயிரினங்கள் இக்காலத்தில் காடுகளை நோக்கி நகர்ந்தன. இதன் காரணமாக ஊர்வன,சதுப்பு நில உயிரிகள் என்பன அதிகமாக வளர்ச்சி கண்டன. இவ் யுகத்தின் இறுதிக்காலமாகிய பேர்மியன் காலத்தில் ஊர்வன மற்றும் பூச்சிகளின் வளர்ச்சி மிகையாக ஏற்பட்டது.
3. மெசோசொயிக் யுகம்
பலியோசொயிக் யுகத்திற்கு அடுத்தபடியாக உருவாகிய காலம் மெசோசொயிக் எனப்படுகின்றது. இற்றைக்கு 135-230 மில்லியன் வருடங்களுக்கு முந்திய இக்காலத்தில் உயிரினங்கள் சிறிய உருவங்களில் இருந்து பாரிய உருவம் கொண்டவையாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. இவ்யுகத்தின் ஆரம்ப காலம் எனப்படுகின்ற ரியாசிக்(Triassic) காலத்தில் உயிரினங்கள் குட்டியிட்டு பாலூட்டும் விலங்குகளாக

வளர்ச்சியடைந்தன. இதுவரையில் காணப்பட்ட சிறியவகை உயிரினங்களான ஊர்வன,மீன் மற்றும் பூச்சிகளின் உருவாக்கத்துடன் இக்காலம் மிகவும் வேறுபட்டதான உயிரின வளர்ச்சியைக் காட்டுகின்றது. இக்காலத்தில் டைனோசர் போன்ற பாரிய விலங்குகளின் உருவாக்கம் மற்றும் பரம்பல் என்பது மிக அதிகமாக நடந்திருக்கின்றன என அறியப்படுகின்றது.
மலையாக்கங்கள் மற்றும் எரிமலைச்செயற்பாடுகள் என்பனவற்றோடு மெசோசொயிக் யுகத்தின் யுராசிக் காலம் ஆரம்பமாகியதாக கொள்ளப்படுகின்றது. புதிய உயிரினங்கள் வளர்ச்சியடைந்தன என்பதோடு ஏற்கனவே இருந்த உயிரினங்கள் இரைதேடி பல பகுதிகளுக்கும் பரவல் அடைந்திருக்கின்றன. என உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிகளவான தாவர உண்ணிகளாக இருந்த டைனோசர் இனங்கள் இக்காத்தில் பெருக்கமடைந்து காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இக்காலத்தின் உயிரின வளர்ச்சியில் பறவைகளின் தோற்றம் இன்றியமையாதது ஆகும். பறக்கும் உயிரினங்கள் புவியில் உயிரினப் பரவலின் போக்குக்களை விரைவுபடுத்தின என்ற கருத்துக்களும் இதுவரை மறுப்பதற்கில்லை.
மெசோசொயிக் யுகத்தின் இறுதிக் காலமாகிய கிறிரேசியஸ்(Critaceous) காலத்தில் தாவர வளர்ச்சிப் போக்குகளில் பாரிய மாற்றங்கள் நடந்தேறியிருக்கின்றன. இதுவரையில் காணப்பட்ட தாவர இனங்கள் பூக்கும் தாவரங்களாக வளர்ச்சியடைந்ததுடன். தவர இனப்பரம்பலில் விதைகளைக் கொண்ட தாவர இனங்களாக பரவலடைந்தன. மலையாக்கச் செயற்பாடுகள் மற்றும் கண்டவுயர்ச்சிகளுடன் தொடர்புடைய இக்காலம் டைனோசர் போன்ற பாரிய விலங்குகளின் அழிவு ஏற்பட்ட காலம் எனப்படுகின்றது.
4. செனோசொயிக் யுகம்
இன்று நம்மால் பூமியிலே அவதானிக்கக்கூடிய பெருமளவான விலங்கினங்கள் இக்காலத்தில்த்தான் பரினாமம் அடைந்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. ஏறக்குறைய 63 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகிய இவ் யுகத்தின் ஆரம்ப காலமாகிய பலியோசின்(Paleocen) காலத்தில் பூக்கும் தாவரங்களின் பெருக்கம் மற்றும் தானியவகைகள் என்பன பெரு வளர்ச்சி கண்டதோடு தாவர உண்ணிகளாக இருந்த விலங்குகள் இக்காலத்தில் ஊண் உண்ணிகளாக வளர்ச்சி கண்டன என உயிரியல் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்கால கலநிலையானது மிதமான காலநிலைத்தன்மைகளில் இருந்து சூடான காலநிலையாக மாறியதோடு உயிரியல் வளர்ச்சி மற்றும் பரம்பலிலும் பாரிய பங்கு வகித்திருக்கின்றது.
அதிகளவான விலங்குகளான குதிரை,குரங்கு,யானை என்பனவற்றின் பெருக்கங்கள் மற்றும் மனித சமூகத்தின் மூததையர் எனப்படுகின்ற ஆரம்ப கால குரங்கு மனிதன் என்பனவும் இக்காலத்தில் தோன்றி வளர்ச்சியடைந்திருக்கின்றன. இவ்வுயகத்தின் தொடர்காலமாகிய பிலிஸ்ரோசின்(Pleistocene) காலத்தில் மனிதனின் கூர்ப்பு தொடர்பான விருத்திகள் ஏற்பட்டதோடு மனிதன் பல பகுதிகள் நோக்கியும் பரவலடைந்தான் எனப்படுகின்றது. இற்றைக்கு 21,000 வருடங்களுக்கு முன்பு புவியில் ஏற்பட்ட பாரிய பனிப்பொழிவுகள் காரணமாக கடலிலும் பனி பரவியதனால் கடல் மட்டம் சுமார் 300 அடிவரைத் தாழ்ந்தது. கண்டங்களுக்குக் கண்டம் தரைவழித் தொடர்புகள் ஏற்பட்டது. ??? என்ற தரைவழித் தொடர்பு ஆபிரிக்காவையும் அலாஸ்காவையும் இணைத்திருந்தது. என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் ஆரம்பங்களில் ஆபிரிக்காவின் சிலபகுதிகளில் தோன்றிய மனிதன் உலகின் பல பகுதிகளுக்கும் பாரிய சமுத்திரங்களையும் தாண்டி பரவலடைந்தான் என்பதோடு விலங்குகளும் அவ்வாறே பரவலடைந்தன என்ற கருத்துக்களும் முன்மொழியப்படுகின்றன. செனோசொயிக் யுகத்தின் அடுத்தமைந்த காலம் தற்காலமாகும் இன்று உயிரினச் சூழல் கொண்டுள்ள தன்மைகள் மற்றும் பரவல் என்பன தொடர்பாக தொடரும் பகுதியில் ஆராயப்பட்டுள்ளது.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 1861
- இணைக்கப்பட்டது: Friday, January 16 2009 18:26 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 69


















