.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உயிரினங்களின் தோற்றம்.

E-mail

நிலம், நீர், காற்றில் காணப்படுகின்ற உயிர்வாழும் பண்புடைய
அனைத்துவகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்குகளையும் நாம் உயினங்கள் என்ற இப்பகுதியில் உள்ளடக்குகின்றோம். பொதுவாக இன்று அந்தவகையில் 1.75 மில்லியன் உயினங்கள் புவியில் இனங்காணப்பட்டுள்ளன இவைதவிர 10-100 மில்லியன் வரையான உயினங்கள் இதுவரையில்

இனங்காணப்படவில்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.


உயிரினங்கள் சிறப்பாக ஐந்து தன்மைகளை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன அவ்வாறு உள்ளவையே உயிரினங்கள் என்ற பகுதியில் இணைத்து காட்டப்படுகின்றன. அந்தவகையில்

 

  • உணவு உட்கொள்ளல்
  • ஆற்றல் தயாரிப்பு
  • சுவாசித்தல்
  • இனப்பெருக்கம்
  • நகர்தல்
  • தூண்டுதலுக்குக் காட்டும் துலங்கல்


என்பவை இங்கு குறிப்பிடப்படுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய விலங்குகள் முதல் கண்ணுக்குத் தெரியாத அல்காக்கள் வரை இப்புவியில் உயினங்கள் பரவி உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும் பனிபடர்ந்த துருவப்பிரதேசங்களிலும் அவற்றின் பிரசன்னம் இன்று கண்டறியப்பட்டுள்ளது. பலவடிவம் அளவுகளில் அவை மற்றவையில் இருந்து தம்மை வேறுபடுத்தி வாழ்ந்து வருகின்றன. பலநூறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடிய உயிரினங்கள் முதல் ஓரு சில நிமிடங்கள் வரையே ஆயுள் கொண்ட உயிரினங்களும் உள்ளன. இவ்வகையில் அவற்றின் தன்மை வேறுபாடுகள் விரவி உள்ளமை புலனாகின்றது. இத்துணை உயிரினங்களினதும் தோற்றம்,வளர்ச்சி,பரம்பல் தொடர்பாக தொடர்ந்து ஆராய்வோம். இங்கே பெரும்பாலன பகுதிகளை காலப்பகுதி வாரியாக ஆய்வு செய்வது இலகுவாகையால் அவ்வாறாக விளக்கப்பட்டுள்ளது.


2. புவியில் பல்வேறுபட்ட உயிரினங்களின் தோற்றம்


இற்றைக்கு 4.5 பில்லியன் ஆண்டுகளக்கு முன்பு புவி தோன்றியதாக நம்பப்படினும் புவியின் ஆதி பாறை வகைகள் இற்றைக்கு 3.3 பில்லியன் அண்டுகளக்கு முன்பிருந்துதான் அடையாம் காணப்பட்டுள்ளன. 3.2 பில்லியன் அண்டுகளுக்கு முன்பு புவியில் முதலாவது தாவர இனமான அல்காவின் உருவாக்கத்துடன் உயிரினங்களின் பிரசன்னம் ஆரம்பமாகியாதக கருதப்படுகின்றது. அத்தோடு இற்றைக்கு 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் புவியின் முதலாவது விலங்கினமான ஜெலிஃபிஸ்(Jellyfish) அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. உயிரியல் சூழலின் ஆதி உயிர்களின் பட்டியல் அவ்வாறு நீண்டு செல்கின்றது. எனினும் இங்கே நாம் இன்று புவியில் காணப்படுகின்ற பல்வேறு தன்மை கொண்ட உயிரினங்களும் எக்காலப்பகுதியில் எவ்வாறு தோற்றம் பெற்றன என தொடர்ந்து ஆராய்வோம்.


2.1 கடல் வாழ் உயிரினங்கள்


உயிரினங்களின் ஆதி தாய் கடல் எனப்படுகின்றது. அங்கேதான் உயிரினங்கள் முதன் முதலில் பிறப்பெடுத்திருக்கின்றன. ஆரம்பகாலப் புவியின் தரைச்சூழலானது உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாகவோ உயிரினங்களைக் கொண்டதாகவோ இருந்திரக்கவில்லை. ஏனெனில் ஆதியுகம் எனப்படுகின்ற பிறீகேம்பிரியன் யுகத்தில் அதிகமான எரிமலை வெடிப்புக்கள் புவியில் நடந்தவண்ணம் இருந்திருக்கின்றன. “கடல் குளிர்மை பொருந்தியதாக இருந்ததோடு கடலுக்கு அடியில் காணப்பட்ட வெந்நீர் ஊற்றுக்கள் உயிரின சுழல் ஏற்படுவதற்கு இசைவாக இருந்திருக்க வேண்டும்” என ஜோன் கிhPபியன் குறிப்பிடுகின்றார். இதுவரையில் அறியப்பட்டதில் இருந்து முதலாவது கடல்வாழ் உயிரினமான ஜெலிஃபிஸ்(Jellyfish) இற்றைக்கு 1.2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாகக் கூறப்படுகின்றது. மேலும் இவை பலியோசொயிக் யுகத்தின் ஆரம்பகாலமான கேம்பிரியன் காலப்பகுதியில் பெருமளவில் பெருகியிருக்கின்றன.


2.2 முள்ளந்தண்டு உயிரிகளின் தோற்றம்


உயினச்சூழலில் முள்ளந்தண்டினை உடைய உயிரினங்களின் தோற்றமானது பாரியளவிலான மாற்றங்களையும் பெருமளவிலான விலங்கினங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. மனிதனின் ஆரம்பங்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை முள்ளந்தண்டு உயிரிகள். இற்றைக்கு 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பலியோசொயிக் யுகத்தின் ஓர்டோவிசியன் காலத்தில்த்தான் முதலாவது முள்ளந்தண்டு உயிரிகள் தோற்றம் பெற்றன என உயிரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் காணப்பட்ட இதமான காலநிலைத் தன்மைகளுக்கு இணங்க பல்வேறு முள்ளந்தண்டு உயிரினங்கள் இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்றன.


2.3 ஊர்வன தோற்றம் பெறல்


ஆங்கிலத்தில் விசேடமாக Reptiles என அழைக்கப்படுகின்ற இவ்வகையான உயினங்கள் தோன்றிய வரலாறு தொடர்பாக இப்பகுதி ஆராய்கின்றது. இற்றைக்கு 345 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட பலியோசொயிக் யுகத்தின் கார்போனிபெரஸ்(Carboniferous) காலத்தில் முதன் முதலாக இவ்வுயிரினங்கள் பூமியில் தோன்றியதாக நம்பப்படுகின்றது. புவியின் நிலவுயர்ச்சிகள்,கண்டவாக்கங்கள்,அடர்காடுகள் என்பனவ்றின் உருவாக்கத்துடன் நிலக்கரிக்குரிய சதுப்பு நிலங்களும் இக்காலத்திலே தோன்றின. இவை மென்மேலும் இவ்வுயிர்களின் தோற்றத்திற்கு வழிசமைத்தன.


2.4 தாவரங்களின் உருவாக்கம்


இன்று பூமியில் அதிகமான உயிரினங்களின் வாழ்வாதாரமாகிய தாவரங்களின் ஆரம்பம் இதுவரையில் அறியப்பட்டவரையில் 3.2 பில்லியன் அண்டுகளுக்கு முன்பு பிறீ கேம்பிரியன் காலத்தில் அல்காக்களின் உருவாக்கத்துடன் ஆரம்பமானதாக நம்பப்படுகின்றது. எனினும் தாவரங்கள் இற்றைக்க 452 மில்லிய்ன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகிய பலியோசொயிக் யுகத்தின் சைலூரியன்) காலத்தில்த் தான் தரையில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படுகின்றது. இக்காத்தில் நில உயர்த்துகைகள், கண்டவாக்கங்கள்,மிதமான காலநிலையின் செல்வாக்கு என்பன நிலப்பரப்பில் தாவரங்களின் உருவாக்கத்திற்கு வழிசமைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.


2.5 ஆறுகால் பூச்சிகளின் உருவாக்கம் (First insect)


பெருமளவான பனிக்கட்டி நகர்வுகளுடனும்,மலையாக்க விசைகளுடனும் தொடர்புடைய காலம் என நம்பப்படுகின்ற இற்றைக்கு 280 மிலியன் வருடங்களுக்கு முற்பட்ட பலியோசொயிக் யுகத்தின் பேர்மியன் காலத்தில்த்தான் ஆதி உயிரினங்களின் பெருமளவிலான அழிவுகளின் பிற்பாடு முதன்முதலாக ஆறுகால்களை உடைய இவ்வகை உயிரினங்கள் தோன்றின என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள். அடர்காடுகளின் உருவாக்கத்திற்குப் பின்னர் ஊர்வனவற்றின் வழர்ச்சியுடன் ஒன்றியதாக இவ்வுயிரினங்கள் புவியில் தோன்றின. பெருப்பாலும் காடுகளிலும் மிகச்சிறிய தொகையின சமுத்திரங்களில் தோன்றியும் வந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


2.6 பறவைகள், டைனோசர்களின் தோற்றம்


பெருமளவான மலைகளின் உருவாக்கம் மற்றும் அதிகளவான எரிமலைக்கக்குகைகள் நடந்த கலம் என நம்பப்படுகின்றதும், ஒரு இதமான காநிலையினைக்கொண்ட உயிரினங்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்பட்ட மெசோசொயிக் யுகத்தின் ட்ரியாசிக்(Triassic) காலத்தில் முதன் முதலாக டைனோசர்கள் தோன்றின எனக் கொள்ளப்படுகின்றது. இக்காலத்தில் குட்டியிட்டுப் பாலூட்டும் முலையூட்டி(Mammals) உயிரினங்கள் பலவும் முதன் முதலாகத் தோன்றியதாக கருதப்படுகின்றது. இவற்றோடு மெசோசொயிக் யுகத்தின் இறுதிக்காலமாகிய கிறிரேசியஸ்(Critaceous) காலத்தில்த்தான் முதன் முதலில் பறவை இனங்கள் தோற்றம் பெற்றன. ரொக்கி,அல்ப்ஸ்,அந்தீஸ் மலைகளின் உருவாக்கத்துடன் இக்கால காலநிலையும் இக்கால உயிரினங்களின் பெருக்கத்தில் பாரிய பங்கு வகித்தது.


2.7 ஊணுண்ணிகளின் தோற்றம்


மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் செல்வாக்கு மற்றும் வட அமெரிக்காவின் பெருமளவான மலையாக்கங்கள் என்பன நடந்தேறிய காலம் என நம்பப்படுகின்ற ஏறக்குறைய 63 மில்லியன் ஆண்டுகளக்கு முற்பட்ட இன்றைய செனோசொயிக்(Cenozoic) யுகத்தின் ஆரம்ப காலமாகிய பலியோசின் காலத்தில் முதன் முதலாக ஊணுண்ணி விலங்குகள் தோற்றம் பெற்றிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. இக்காலத்தில் புவியில்  நிலவிய குளிர்ச்சியான காலநிலை புவிமேற்பரப்பில் இவ்விலங்குகளின் உருவாக்கத்தில் பாரிய செல்வாக்கு செலுத்தியதோடு இக்காலத்திற்கு சற்று முன்பதாகவே தாவர உண்ணிகளான சில டைனோசர் இனங்கள் அழிந்திருக்கின்றன.


2.8 மனிதனின் ஆரம்பம்


பல நுறு மில்லியன் வருடங்கள் கொண்ட புவியின் வரலாற்றில் இறுதி ஒரு மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டதே மனித இனத்தின் வரலாறு அகும். இதனாலே தான் உயிரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் போது புவியின் நீண்ட வரலாற்றை ஒரு மூன்று மணிநேர நீள் திரைப்படமாக காட்டும் போது அதில் மனிதனின் வரலாறு இறுதி ஓரு நிமிடங்கள் மட்டுமே காட்டப்பட வேண்டி இருக்கும் என்கின்றனர். பாரிய


விலங்குகளின் இறப்பு மற்றும் மலையாக்க விருத்திகளுடன் நிகழ்ந்த இவ்யுகத்தின் பிலியோசின்(Pliocene) காலத்தில் முதன் முதலாக மனித இனம் தோன்றியது எனப்படுகின்ற போதும். இற்றைக்கு 40-60 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தென் ஆபிரிக்காவின் வட பகுதியில் உள்ள “எரிற்றியா” என்ற 2000 கி.மீ சிதைந்த பள்ளத்தாக்குகளில் தான் மனித இனம் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணக்கிடக்கின்றன. மனிதனின் ஆரம்பம் குரங்கிலிருந்து உருவானமை கூர்ப்புக்கொள்கைகள் மூலம் விளக்கப்படுகின்றன. அந்தவகையில் பரினாம வளர்ச்சியின் தந்தை டார்வின் இங்கு குறிப்பிடத்தக்கவர். ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் பின்னர் தோன்றிய மனித சமூகம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது,எவ்வாறு பரவலடைந்தது என்பவை தொடர்பான விடையங்கள் வளர்ச்சி மற்றும் பரவல் பகுதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 2011
  • இணைக்கப்பட்டது: Friday, January 16 2009 16:28 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 68
Last Updated on Sunday, July 03 2011 11:47  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நாம் இருக்கும் உயரத்தை மாற்றியமைக்க வேண்டுமானால் நம் சிந்தனைகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

- ஸிக்ஸாக்ரன்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1576
mod_vvisit_counterYesterday1911
mod_vvisit_counterThis week6630
mod_vvisit_counterThis month11250
mod_vvisit_counterAll648728

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.