.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய சவாலாகும் சுற்றாடல் மாசடைவு - சீனா

E-mail
(0 votes, average 0 out of 5)

சென்ற காலங்களில் சீனாவின் பொருளாதாரம் என்பது குறிப்பிடக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு முன் பொருளாதாரத்தில்  ஏற்பட்ட வளர்ச்சி என்பது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 9.5 வீதத்தில் பேணிவந்திருக்கின்றது. உலகின் 22 வீதமான சனத்தொகையினை கொண்ட சீனாவானது அண்மைய காலங்களில் அதன் நுகர்வினை அதிகரித்துக்கொண்டதுடன் சுற்றாடல் மீதான தனது மாசுபடுத்தலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது. சென்ற 20 வருடங்களில்...

சீனாவின் அதிகரித்த குடித்தொகைக்கான நுகர்வுகள் அதிகரித்ததினால் சுற்றாடல் மீதான மாசினை கட்டுப்படுத்துவது தொடாபில் சீனா விசேட கவம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் சுற்றாடல் பிரச்சினைகளான காலநிலை மாற்றம், உயிர்ப்பல்வகைமையில் அழிவு, இயற்கை காடுகளின் அழிவு தொடர்பில் சீனாவில் நீண்ட நிலைத்திருக்கக்கூடிய பாதுகாப்புக்கான உபாயங்கள் வேண்டப்பட்டன. அதிகரிக்கும் வேகமான கைத்தொழிலாக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் நகராக்கம் என்பன சீன மக்களின் உடல்நலம், இயற்கை சீரழிவு என்பனவற்றுடன் சுற்றாடல் மாசடைவதற்கானதுமான பிரதான காரணிகளாக இனங்காணப்படுகின்றது.

உலகின் 22 வீதமான மக்களுக்கு தேவையான குடிநீரினை பெற்றுக்கொடுக்கக்கூடிய மொத்த குடிநீர் தேவையின் 6.2 வீதத்தினை சீனா கொண்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் நாட்டின் வட அரைப்பகுதியில் அதிகரித்துவரும் வறட்சியும் தென் அரைப்பகுதியில் அதிகரித்துவரும் வெள்ளப்பெருக்குகளுடனும் இணைந்து பெருமளவான ஆற்று நீர் மாசடைவு என்பன நீருக்கான தட்டுப்பாட்டினை உருவாக்கியிருக்கின்றன.

அதிகரித்த நிலக்கரி பா மற்றும் பெற்றோலிய பானையினால் குறிப்பிடத்தக்க சில நகரங்களில் அபாயகரமான அளவு அதிகரிப்புடன் சீனாவின் பல பகுதிகளிலும் வளி மாசடைவு என்பது அதிகரித்துச்செல்கின்றது. சீனாவின் பெற்றோலிய நுகர்வு 2006 இல் 9.3 வீதத்தினால் அதிகரித்ததுடன் வளிமண்டல மசாக்கத்தில் உலகின் இரண்டாவது நாடாகவும் மறியிருக்கின்றது. நாட்டில் அழிவுக்கு உள்ளாகும் இயற்கை வனங்கள் மற்றுமொரு பாரிய பிரச்சினையாக மாறியிருக்கின்றது. மண்ணரிப்பு, நீர் இன்மை, உயிர்ப்பல்வகைமை அழிவு என்பனவற்றுடன் நெருங்கிய தொடர்பினை இப்பிரச்சினை ஏற்படுத்துகின்றது.

உலகின் 10 வீதமான உயிரினங்களை கொண்டு அதிகளவு உயிhப்பல்வகைமையினை கொண்ட உலகின் பத்து நாடுகளில் ஒன்றாக திகழும் சீனாவில் இயற்கை காடு அழிவு என்பது பாரிய சற்றாடல் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனப்படுகின்றது.  சீனாலின் அதிகரிக்கும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பாக அந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் அண்மைக்காலங்களில் அதிக மக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அந்நாட்டின் 11வது ஐந்தாண்டு திட்டத்தில்(2006-2010) நாட்டின் சுற்றாடல் மாசடைவினை கட்டுப்படுத்துவது என்பதும் முக்கிய விடையமாக எடுக்கப்பட்டிருந்தது. வருங்காலங்களின் உலகளாவிய காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவல்ல சற்றாடல் முகாமைக்கு தன்னை தயார் செய்துகொண்டு நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை உண்டுபண்ணவுள்ள உள்நாட்டு சுற்றாடல் மாசினை தடுப்பதற்கும் சீனாவின் நடவடிக்கைகள் என்பது அந்நாட்டின் அபிவிருத்தியினை பாதிக்காத வகையில் முன்னெடுப்பதற்கு அந்நாடு முயற்சிக்கிறது.

Last Updated on Monday, 04 January 2010 00:18  

AUTO LINK SYSTEM..

* உறுப்பினர்கள் : 105
* கட்டுரைகள் : 152
* வாசகர் பார்வை : 100783

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

அதிகமாக அவதானியுங்கள், குறைவாகப் பேசுங்கள்.

- வில்லியம் சேக்ஸ்பியர்


STUDY WITH US..

Who's Online

தற்போது 2 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday536
mod_vvisit_counterYesterday631
mod_vvisit_counterThis week1625
mod_vvisit_counterThis month5851
mod_vvisit_counterAll81670

SEARCH WITH US

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.