.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள். - PAGE 4

E-mail
Article Index
உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்.
Page 2
PAGE 3
PAGE 4
All Pages



நிலக்கீழ் நீரிற் பெரும்பகுதி ஆறுகளுக்குள்ளும், வேறு ஒரு பகுதி கடலுக்கும் கசியும். மழைநீரிற் பெரும்பகுதி ஓடைகள் சிற்றாறுகள், ஆறகள் மூலம் கடலைச் சென்றடையும். ஆறுகளிற் சில வற்றாத ஆறுகள் இவற்றுக்கு வரட்சிக்காலங்களில் நிலக்கீழ் நிர்க்கசிவு மூலம் நீர் கிடைக்கின்றது. மற்ற ஆறுகள் பருவகால ஆறுகள், மழைகாலத்தில் மட்டும் அவற்றில் நீர்பாயும்.

நிலத்தில் வாழும் உயிர்த்தொகுதிகள் குறிப்பாக நீர்வட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணின் மேற்பரப்பிலிருந்தும் ஆழமான கீழ்ப்படைகளிலிருந்தும் தாவரங்கள் நீரை உறிஞ்சுகின்றன. நிலத்திலுள்ள கனிப்பொருள்களை வேரிலிருந்து இழையங்களுக்கு கொண்டு செல்வதற்கு தாவரங்களுக்கு நீர் உதவுகின்றது. இதை விட வேறு பல பணிகளையும் தாவரத்திற்குள் நீர் உதவுகின்றது. இதை விட வேறுபல பணிகளையும் தாவரத்திற்குள் நீர் செய்கின்றது.



தாவரங்கள் உறிஞ்சும் நீரில் பெரும்பகுதி ஆவியுயிர்ப்பு மூலம் நீராவியாக வளிமண்டலத்திற்கு இழக்கப்படுகின்றது. அத்துடன் நீராவியாதல் மூலமும் தாவரங்கள் நீரை இழக்கின்றன. தாவரங்கள் இழக்கும் நீரின் மொத்தக் கணியம் ஆவியாதல், ஆவியுயிர்ப்பினால் கொடுக்கப்படும்.

நீhவட்டம் சூரிய சக்தியினால் செலுத்தப்படுகின்றது. அளவு அடிப்படையில் பூமியிற் சூரியசக்தி செய்யும் பெரும்பணி இதுவேயாகும். பூமியின் மேற்பரப்பின் மிதுவிழும் சூரிய சக்தியை மறுபங்கீடு செய்ய நீர்வட்டம் உதவுகின்றது. ஓர் இடத்தில் ஆவியாகும் நீர் தன்னுடன் ஆவியாதல் மறை வெப்பத்தை கொண்டு செல்கின்றது. வளிமண்டலச் சுற்றோட்டம் ஆவியாதல் நடைபெற்ற இடத்தில் இருந்து நீரை வேறு இடத்திற்கு கொண்டு செல்கின்றது. நீராவி ஒடுங்கி மீண்டும் ஒடுங்கி மீண்டும் நீராகும்போது ஆவியாதல் மறைவெப்பம் விடுவிக்கப்படும். இவ்விதத்திற் சூரியசக்தி பூமி எங்கனும் மறுபங்கிடு செய்யப்படுகின்றது.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 406
  • இணைக்கப்பட்டது: Sunday, October 18 2009 17:25 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 175


Last Updated on Tuesday, August 31 2010 12:51  
கட்டுரையினை எழுதியவர்: ச.மகேந்திரன்

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125980

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

We have 9 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday796
mod_vvisit_counterYesterday898
mod_vvisit_counterThis week3087
mod_vvisit_counterThis month7201
mod_vvisit_counterAll178778

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.