.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள். - PAGE 3

E-mail
Article Index
உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்.
Page 2
PAGE 3
PAGE 4
All Pages

 

ஒளித் தொகுப்பு, சுவாசம் ஆகிய செயல்முறைகளின்போது CO2, O2 வும் தாவரங்களினால் உள்ளீர்க்கப்பட்டு வெளிவிடப்படுகின்றது.

  • ஒளித்தொகுப்பு:

6CO2 + 6H2O + சூரிய சக்தி /பச்சயம்  => C6H12O2 + 6O2

  • சுவாசித்தல்:-

C6H12O2 + 6O2 => 6CO2 + 6H2O + சக்தி வெளியேற்றம்.

பூமியில் நடைபெறுகின்ற ஒளித்தொகுப்பின் 70 சதவீதத்திற்கு பொறுப்பாகவுள்ளது கடலில் வாழ்கின்ற அல்காக்கள் ஆகும். ஒளித்தொகுப்புச் செய்யப்படும் அல்காக்களின் தொகை குறைவடைந்தால் வளியிலுள்ள ஒட்சிசனின் கணியம் குறைவடையும். கடல்பரப்பிலே ஏராளமான அல்காக்கள் உயிர்வாழ்கின்றன.  இவை காபனீரொட்சைட்டை உள்வாங்கிக் கொண்டு பெருமளவிலான ஒட்சிசனை அனுப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.  எனவே அல்காக்கள் உயிர்ச் சூழல் தொகுதியில் மிகமுக்கியமான தாவர இனங்களாகும். இன்று கடல்நீர் மாசடைதல் அல்காக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதுடன் அவை இன்று அழிவடைந்து வருவது முக்கியமான சூழற் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

  • பொசுபரசு வட்டம்:-


பொசுபரசு வட்டம் ஏணைய காபண், நைதரசன் வட்டங்களை விட வேறுபட்டது. பொசுபரவு வடட்டத்தில் வாயு அவத்தை இல்ல. அத்துடன் பொசுபரசு வட்டம் மிகவும் மெதுவாக நீண்டகாலம் ஒரே திசையில் நடக்கின்றது. nhசுபரசு நிலத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. கல்சியம், பொற்றாசியம், மகனிசியம், இரும்பு ஆகிய மூலகங்களின் பொசுபேற்றுக்களாக கிடைக்கின்றன. இந்தக் கனிப்பொருட்கள் நீரில் கரைவது மிகக் குறைவு. புhறைகள் வானிலையால் அழியும்போது மிக மெதுவாகவே வெளிவிடப்படுகின்றன.

பொசுபரசு நிலத்தில் வாழும் தாவரங்களினூடாக உயிர்த்தொகுதிக்குள் பிரவேசிக்கின்றது. நிலையான நிலத்திற்குரிய சூழற் தொகுதிகளில் தாவரங்களினாலும் மற்ற அங்கிகளினாலும் எடுக்கப்படும் பொசுபரசின் பெரும் பகுதி மீண்டும் மண்ணுக்கே திரும்பிக் கொடுக்கப்படும். எனினும் பொசுபரசு நீரினால் அரிக்கப்ட்டு ஆறுகள் மூலம் கடலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. அதனால் நிலத்திற்கு பொசுபரசு இழப்பு ஏற்படுகின்றது. கடலிற் பொசுபரசு வாழ்க்கைத் தொகுதிகளுக்கு உதவும். ஆனால் அது படிப்படியாக அடிப்பாகத்தை நோக்கி அமிழ்ந்து அடையலுக்குட் சென்று விடும். ஆழத்துடன் கடல் நீரின் பொசுபரசு செறிவு அதிகரிக்கின்றது.

பொசுபரசு மிகவும் மெதுவாகவே நிலத்திற்கு திரும்புகின்றது. கடல் மீன்கள், கடல் வாழ் உயிரினங்களை உண்ணும் பறவைகள் கடல்வாழ் விலங்குகளின் சுவடுகள் ஆகிய பாதைகளிற் கடலிலுள்ள பொசுபரசு நிலத்திற்குத் திரும்புகின்றது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள எலும்புப் பள்ளத்தாக்கு பொசுபரசு படிவுகளைக் கொண்டிருக்கின்றது. உலகின் பொசுபரசு உற்பத்தியில் மூன்றிலொரு பகுதியைக் கொடுக்கும் எலும்புப் பள்ளத்தாக்கு முன்பு கடலாக இருந்து புவியியல் மாற்றங்கள் காரணமாக மேலே உயர்த்தப்பட்டுள்ளது. நுவாறு என்னும் பசுபிக் தீவில் மற்றுமொரு பெரிய பொசுபரசுப் படிவு உள்ளது. அத்தீவு முழவதும் பொசுபரசுப் படிவால் மூடப்பட்டு இருந்தது. புல ஆண்டுகளாகத் தோண்டப்பட்டதன் விளைவாக இப்படிவு இப்போது முடிந்துவிடும் தறுவாயில் உள்ளது.

  • நீரியல் வட்டம்:-


திரவ வடிவிலோ தின்ம வடிவிலோ உள்ள நீர் நிலைகளின் ஈரலிப்பானது புறத்தேயுள்ள வெப்பச் செயன்முறையால் ஆவியாதலிற்குட்பட்டு கட்புலனாக ஆவிவடிவினதாகிப் பாரமற்றதாகி மேலெழுகின்றது. மேலெழுந்து நீராவி வடிவிலுள்ள நீரானது ஒடுங்குவதன் மூலம் திரவ வடிவினை அல்லது உறைகின்ற வடிவினை அல்லது உறைந்த வடிவினை பெற்று படிவுவீழ்ச்சி வடிவங்களாக புவியின் மேற்பரப்பிற்கு திரும்பி விடுகின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக முடிவின்றி நிகழும் செயல்முறை நீரியல்வட்டம் எனப்படுகின்றது. நீரியல் வட்டத்தில் மக்கியமாக ஐந்து நிலைகளை அவதானிக்கலாம்.


1.    ஆவியாதல்
2.    பனிபடுநிலை
3.    ஒடுங்குதல்
4.    படிவுவீழ்ச்சி
5.    கழுவுநீரோட்டம்


கடலினதும் மற்றும் நிர்நிலைகளினதும் மேற்பரப்பு சூரிய வெப்பத்தால் வெப்பமாக்கப்படும் போது நீர் ஆவியாகும். அந்நீராவி வளிமண்டலத்திற்குட் கிளம்பிச் செல்லும் வளிமண்டல்திலுள்ள நீராவியில் பெரும்பகுதி கடலில் இருந்தும், 16 சதவீதம் ஆறு, குளம், மண் முதலிவற்றில் இருந்தும் வருகின்றது. ஆவியாதல் மூலமும் ஆவியுயிர்ப்பின் மூலமும் தாவர வர்க்கத்திலிருந்து ஓரளவு நீர் இழுக்கப்படுகின்றது.

வளிச் சுழற்சியின்போது நீராவியும் அதனுடன் அள்ளிச்செல்லப்படுகின்றது. பின்பு எதிர்வு கூறக்கூடிய கோலத்தி;கேற்ப நீராவி ஒடுங்கி மழையாகவும், பனியாகவும் நிலத்தின் மீதோ கடலின்மீதோ பொழிகின்றது. நிலத்திற் பெய்யும் மழையிற் பெரும்பகுதி வெள்ளமாக ஓடைகளுக்குள்ளும், ஆறுகளுக்குள்ளும் பாயும். வெள்ள நீரும் ஆறு, குளம் முதலியவற்றிலுள்ள நீரும் மேற்பரப்பு நீர் எனப்படும். இந்நீரில் ஒருபகுதி குளங்களிலும் ஏரிகளிலும் தேங்கி நிற்கும். ஒரு பகுதி மண்ணில் சுவறிநின்று  தாவரங்களுக்கு உபயோகப்படும்.

நிலத்திற் சுவறும் நீரில் ஒரு பகுதி கீழ்நோக்கிச் செல்லும் . இது நிலக்கீழ் நீராகும். உட்புகவிடாத கற்பாறைப்படை வரும்வரை நீர்கிழ்நோக்கிச் செல்லும். கற்பாறைப்படையை அடைந்ததும் தொடர்ந்து கீழே போகமுடியாத காரணத்தினால் தேங்கி நிற்கும். இந்நீர்த் தேக்கங்கள் நீரேந்திகள் எனப்படும். நீரேந்தியின் மேல்மட்டம் நீர்மட்டம் எனப்படும்.

 



Last Updated on Tuesday, August 31 2010 12:51  
கட்டுரையினை எழுதியவர்: ச.மகேந்திரன்

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125067

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

யாருடன் நாம் அதிக நேரத்தை செலவிடுக்கின்றோமோ நாளடைவில் நாம் அவர்களைப் போலவே ஆகிப்போகின்றோம்.

- வெற்றிக்கு


STUDY WITH US..

Who's Online

We have 13 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday232
mod_vvisit_counterYesterday642
mod_vvisit_counterThis week232
mod_vvisit_counterThis month4346
mod_vvisit_counterAll175923

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.