.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்.

E-mail
Article Index
உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்.
Page 2
PAGE 3
PAGE 4
All Pages

உயிரின மண்டலமானது புவி வளிமண்டல தொகுதியின் உள்ளே பயன்படுத்தக்கூடிய மொத்தச் சடப்பொருட்களைக் கொண்டுள்ளது. சூரியசக்தி தொடர்ச்சியாகப் பெறப்பட்டு சூழல் தொகுதியிலிருந்து இவை வெளிவிடப்படுகின்றது. புவிச்சூழற்தொகுதியில் காணப்படும் ஒரு குறிப்பிட்டளவு சடப்பொருட்கள் கட்டாயமாக மீள்பயனபடுத்தப் படுவதோடு மீள்வட்டத்திற்குட்படலும் வேண்டும். இந்தச் சடப்பொருட்கள் பூமியினுடைய திண்மப்பகுதி, வளிமண்டலம், நீர் மண்டலம் மற்றும் வாழும் அங்கிகளுக்கு இடையில் சூரிய சக்தியின் உதவியோடு பரிமாற்றப்பட்டு ஒரு மீள்வட்டத்தில்...

ஈடுபடுதலையே உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள் விளக்குகின்றன.  புவிச்சூழல் தொகுதியில் ஒரு ஊடகம் வளிமண்டலம், சமுத்திரம், அடையல்கள், உயிரியல் தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஊடாக வட்டமாக செல்வதை உயிர்ப்புவியியல் இரசாயண வட்டம் என்பர். இவை,


1.    காபன் வட்டம்
2.    நைதரசன் வட்டம்
3.    ஒட்சிசன் வட்டம்.
4.    பொசுபரஸ்வட்டம்
5.    கந்தக வட்டம்
6.    நீhயல் வட்ட


எனப் பலவாகவும் அமைந்துள்ளது. இந்த உயிர்ப்புவி  இரசாயன வட்டங்களில் எப்போதுமே நிலவியிருப்பது உயிர்ச் சூழல் தொகுதிக்கு ஆரோக்கியமானதாகும். ஆனால் இன்று உயிர்புவியியல் இரசாயன வட்டங்களில் நிலவிய சமநிலை பூமியின் பெருகிவரும் சனத்தொகை காரணமாக ஏற்பட்ட அபிவிருத்தியின் நிமித்தம் குலைக்கப்பட்டதனால் புவிச்சூழல் தொகுதி இயற்கைச் சமநிலை குழம்பி சூழல் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளது.

மனிதனின் அதிதீவிர நடவடிக்கைகள் சடப்பொருட்களையும், சக்தியையும் இயற்கைச் சூழற் தொகுதியின் உள்ளே சாதாரணமாக காணப்படுவதை விட மிகவும் அதிகமாக ஒருங்கு குவிகின்றன. இச்செயல்முறை சூழல் மாசடைதல் எனவும்,  இதனை தோற்றுவிக்கும் சடப்பொருளும் சக்தியும் மாசுபடுத்திகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பொதுவான உயிர்புவி இரசாயணவட்டம் பின்வருமாறு அமைந்துள்ளது.

  • காபன் வட்டம்:-


உயிரற்ற பதார்த்தங்களின் பிரதான கூறுகளில் ஊ எனும் மூலகம்  வளிமண்டலம், நன்னீர், கடல்நீர், அசேதன அடையல், நிலத்திலும் கடல் நீரிலுள்ள நீர்த்தொகுதி மற்றும் அழுகும் அசேதன  அடையல், நிலத்திலும் கடல்நீpரிலுமுள்ள நீர்த்தொகுதி மற்றும் அழுகும் சேதன பதார்த்தங்கள் தாவரங்களின் உயிர்ச்சுவடுகள், ஆகியவற்றில் தேங்கிக் காணப்படுகின்றது. வளிமண்டலத்தில் 0.03மூ அளவிலேயே ஊழ2 காணப்படுகின்றது.  காபண் அணுக்களைக் கொண்ட சேர்வைகள் தற்போசனிகளிலிருந்து பிறபோசனிகளுக்கும் மண்ணுக்கும் வளிக்கும் நீருக்கும் அதன் பின்னர் மீண்டும் தற்போசனிகளுக்கும் பாய்ந்து செல்லல் காபன் சக்கரம் எனப்படுகின்றது.

உயிரின மண்டலத்தினுள்ளே காபன் பல்வேறு நிலைகளிலே இருக்கின்றது. காபணானது வளிமண்டல்ததினுள்ளே காபணீரொட்சைட்டு வாயுவாகவும் கடல்நீரிலும் நன்னீரிலும் கரைந்த நிலையில் இரு காபணேற்று அயன்களாகவும், பாறைகளினுள்ளே காபணேற்றுக் கனிப்பொருட்டகளாகவும், அங்கிகளினுள்ளே பல்வேறு சேதனப் பதார்த்தங்களாகவும் இருக்கின்றது. காபன் இந்நிலைகளில் எதில் இருந்தாலும் உயிரினமண்டலத்தினுள்ளே சுற்றோட்டத்தில் ஈடுபடும்.

பச்சை நிறத் தாவரங்களிலே ஒளித்தொகுப்பும் உணவுச்சங்கிலிகள் வழியாகச் சேதன உணவுப் பொருட்கள் பாய்ந்து செல்லும் அங்கிகளின் சுவாசமும் பிரிகையாக்கிகளின் செயற்பாடுகளும் இச்சுற்றோட்டத்திற்கு முக்கியமாக உதவுகின்றன. பச்சைநிறத் தாவரங்கள் காபனீரொட்சைட்டைப் பயன்படுத்தி சேதனச் செர்லைகளை உற்பத்தி செய்கின்றன.  இச்செயன்முறையானது ஒளித்தொகுப்பு எனப்படும். இங்கு பக்கவிளை பொருளாக ஒட்சிசனும் உற்பத்தியாகின்றது. ஒளித்தொகுப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேதனச் சேர்வைகள் பிறபோசனிகளினால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போசனிகளும், பிறபோசனிகளும் அவற்றின் உயிர்ச் செயல்களுக்குத் தேவையான சக்தியை இச்சேதனச் செர்வைகளைத் தகர்ப்பதன் மூலம் பெறுகின்றன. அங்கே ஒட்சிசன் பயன்படுத்தப்பட்டு மீண்டும் காபனீரொட்சைட்டு விடுவிக்கப்படுகின்றது. இச்செயன்முறையானது சுவாசம் எனப்படுகின்றது.

விலங்குகளும், தாவரங்களும் இறக்கும்போது இறந்த உடல்களின் மீது பிhகையாக்கிகள் செயற்படுகின்றமையாலும் சேதனச் சேர்வைகள் தகர்ந்து காபனீரொட்சைட்டு விடுவிக்கப்படுகின்றது. அவ்வாறு விடுவிக்கப்படும் காபனீரொட்சைட்டு மீணடும் தற்போசனிகளினால் பயன்படுத்தப்பட்டுச் சேதனச் சேர்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒட்சிசன் விடுவிக்கப்படுகின்றது.  இவ்வாறு சூழலினுள்ளே காபண் சுற்றோட்டம் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

மேலும் எரிமலைகள் வெடித்தல், மண்புரட்டல் ஆகிய செயற்பாடுகளின் விளைவாகவும் காபனீரொடசைட்டு வளிமண்டலத்துடன் சேருகின்றது. தற்போசனிகள் தவிர வேறு அங்கிக் குழுக்களினாலும் காபனீரொட்சைட்டு பயன்படுத்தப்பட்டு பல்வேறு சேர்வைகள், விசேடமாகக் கல்சியம் காபனேற்று உண்டாக்கப்படுகின்றது. குழிக்குடலிகள் முருகைப் பாறைகளை உண்டாக்கல் என்பன இதற்கு உதாரணங்களாகும்.

இறந்த தாவர உடல்களின் மீது பிரிகையாக்கிகள் செயற்படுவதற்குச் சிலவேளைகளிலே வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. நுண்ணங்கிகள் செயற்பாட்டுக்கு ஆளாகாத இறந்த தாவரங்கள் மில்லியன் கணக்கான  ஆண்டுகள் கழிந்த பின்னர் முற்றாநிலக்கரி, நிலக்கரி, பயன்படுத்தா எண்ணெய் போன்ற எரிபொருள்களாக மாறுகின்றன. இவ்வெரிபொருள்கள் தகனமடையும் போதும் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு சேருகின்றது.

மனிதனாலே காடுகள் வெட்டித்துப்பரவாக்கப்படும் போதும் வளிமண்டலத்திலே காபனீரொட்சைட்டு அதிகரிப்பதற்கு வேறொரு காரணமாகும்.. காடுகளின் எண்ணிக்கை குறையும்போது ஒளித்தொகுப்பிற்காக வளிமண்டலத்திலிருந்து அகத்துறிஞ்சப்படும் காபனீரொட்சைட்டின் அளவு குறைகின்றது. காடுகள் எரிக்கப்படும்போதும் வளியிலே காபனீரொட்சைட் சேருகின்றது.



Last Updated on Sunday, 03 January 2010 23:47  
கட்டுரையினை எழுதியவர்: ச.மகேந்திரன்

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116129

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 3 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday202
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3356
mod_vvisit_counterThis month18007
mod_vvisit_counterAll150311

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.