.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சூழல் தொகுதி - ஒழுங்கமைப்பு - PAGE 2

E-mail
Article Index
சூழல் தொகுதி - ஒழுங்கமைப்பு
PAGE 2
All Pages


வெப்பநிலை, ஈரப்பதன், மழைவீழ்ச்சி, உவர்த்தன்மை, pH பெறுமானங்கள் என்பனவும் இவற்றுள் உள்ளடக்கப்பட வேண்டியவையாகும். உயிர்ச் சூழலியக்கங்கள் தொய்வின்றி நடைபெறுவதற்கு தேவைப்படும் சுமார் 98 சதவீதச் சக்தி சூரியனிலிருந்தே பெறப்படுகின்றது. இச்சக்தி மின்காந்த கதிர்வீசலாக புவியை வந்தடைகின்றது.

 

 

  • உயிருள்ள கூறுகள் (உயிரினச் சூழலின் பிரதான கூறுகள்):- தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் என்பனவே சூழல் தொகுதியின் உயிரினக் கூறுகளாகும். இந்த உயிரினக் கூறுகளில் 3 முக்கிய அம்சங்கள் உள்ளன.

 

  1. உற்பத்தியாக்கிகள்
  2. நுகரிகள்
  3. பிரிகையாளர்கள்
  • உற்பத்தியாக்கி:-

நுகரிகளின் வாழ்விற்காக பச்சைத் தாவரங்கள் ஒளித்தொகுப்பின் மூலம் (பச்சையத் தொழிற்பாடு) உணவினைத் தயாரிக்கின்றன.

 

 

உற்பத்தியாக்கியினால் ஏற்படுத்தப்படும் ஒளித்தொகுப்பு மூலமான இரசாயண மாற்றத்தினால் ஏற்படும் காபனீரொட்சைட்டின் உற்பத்தி சக்தியாக மாற்றப்படுகின்றது. இவற்றின் உற்பத்திக்கான வளங்களாக சக்தி, போசனை என்பன காணப்படுகின்றன. இது சூரியனிலிருந்தும் மண்ணிலிருந்தும் பெறப்படுகின்றது. இவை ஒளித்தொகுப்பின் மூலம் தேவையான சக்தியை பிரயோகித்து உற்பத்தியை பெருக்கிக் கொள்கின்றன. இதனை நுகரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாவரங்களிலிருந்தே தமக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.

 

  • நுகரிகள்:-

உற்பத்தியாளரை அல்லது தாவரங்களை உண்ணும் விலங்குகள், தாவர உண்ணிகளை உண்ணும் விலங்குண்ணிகள், அத்துடன் தாவரங்களையும் விலங்குகளையும் உண்ணும் அணைத்துமுண்ணிகள் ஆகியன நுகரிகளாக அழைக்கப்படுகின்றன. முதநிலை நுகரிகள்(தாவர உண்ணி) சக்திப் பரிமாற்றம் நிகழும்போது நேரடியாக சக்தியை உற்பத்தியாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன. ஊணுண்ணிகளான 2ம் படி நுகரிகள் தாவர உண்ணிகளினூடாக மறைமுகமாக உற்பத்தியாளரிடமிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன.

  • பிரிகையாக்கி:-

இறந்த தாவரங்களும், விலங்குகளும், ஜீரணித்தலாலும், மீள்சுழற்சியினாலும் சிறு மூலக்கூறுகளாகின்றன. இவ்வாறு தாவரங்கள் பிரிகையடைந்து சிறிய மூலக்கூறுகளாவதற்கு பக்hPரியா, பங்கசு, பூச்சிக்கள், புழுக்கள் முதலிய பிரிகையாக்கிகள் துணைபுரிகின்றன. இச்செயற்பாடகள் மூலம் கனிமசேதன மூலங்கள் வளமாக்கப்பட மீண்டும் உற்பத்தியாக்கியினால் பயன்படுத்தப்படுகின்றது.

  • உணவுச் சங்கிலி :-

சூழற் தொகுதியின் முதன்மை உற்பத்தியாக்கி மட்டத்திலிருந்து அங்கிகளின் தொடர்வழியாகச் சக்தி பாய்ந்து செல்வதைக் காட்டும் போசனைத் தொடர்புடைமைகளின் ஒழுங்கு முறையானது உணவுச் சங்கிலி எனப்படும்.


பெரும்பாலான உணவுச் சங்கிலிகள் முதல் இணைப்பாகப் பச்சை நிறத் தாவரம் அமைகின்றது. அடுத்துள்ள இணைப்புக்கள் முறையே தாவர உண்ணிகளும், ஊணுண்ணிகளுமாகும். இதற்கேற்ப உணவுச் சங்கிலி குறைந்த பட்சம் மூன்று இணைப்புக்களையேனும் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.


உணவுச் சங்கிலி வழியாக ஒரு போசனை மட்டத்திலிருந்து அடுத்த போசனை மட்டத்திற்குச் சக்தி பாய்ந்து செல்லும்போது ஒவ்வொரு படிமுறையிலும் அதிக அளவு சக்தி இழக்கப்படுகின்றமையால் உணவுச் சங்கிலி ஒன்றின் ஆகவுங் கூடிய இணைப்புக்களின் எண்ணிக்கை பெரும்பாலும் நாலாக அல்லது ஐந்தாக வரையறுக்கப்பட்டிருக்கும்.
சூழற் தொகுதியில் முக்கியமாக இருவகை உணவுச் சங்கிலிகள் காணப்படும்.

 

  1. மேயும் உணவுச் சங்கிலி
  2. குப்பை உணவுச் சங்கிலி


• மேயும் உணவுச் சங்கிலியில் முதல் இணைப்பு பெரும்பாலும் பச்சை நிறத்தாவரமாகவே இருக்கும். உதாரணம்;

 

  1. புல் - மான் - சிறுத்தை (காட்டு சூழற் தொகுதி)
  2. இலை – மயிர் கொட்டி– குடம்பி உண்ணும் பறவை (தோட்டச் சூழற் தொகுதி)குப்பை உணவுச் சங்கிலியில் முதல் இணைப்பு உக்கும் அங்கிப் பகுதிகளாகும். அதாவது குப்பையாகும். உதாரணம்
  3. குப்பைஃ அழுகல் - இறால் - மனிதன்
  4. சேதன ஊடகம் - காளான் - மனிதன்

உதாரணம் :- ரோஜா செடி – சாறு உறிஞ்சும் பூச்சி- பற்றீரியா- விழுங்கி வைரசு


கட்டுரையை எழுதியவர் : ச.மகேந்திரன் (புவியியல் சிறப்பு,மூன்றாம் வருடம்)

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 564
  • இணைக்கப்பட்டது: Saturday, July 25 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 116


Last Updated on Friday, February 19 2010 14:38  
கட்டுரையினை எழுதியவர்: ச.மகேந்திரன்

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125982

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

We have 11 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday800
mod_vvisit_counterYesterday898
mod_vvisit_counterThis week3091
mod_vvisit_counterThis month7205
mod_vvisit_counterAll178782

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.